बुधवार, नवंबर 27 2024 | 03:00:22 PM
Breaking News
Home / Choose Language / Tamil / டிஜிட்டல் இந்தியாவின் கீழ் ‘விரிவான டிஜிட்டல் உருமாற்றுத் திட்டங்களை நிர்வகித்தல்’ என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிக்கு தேசிய மின்-ஆளுமை பிரிவு ஏற்பாடு செய்திருந்தது

டிஜிட்டல் இந்தியாவின் கீழ் ‘விரிவான டிஜிட்டல் உருமாற்றுத் திட்டங்களை நிர்வகித்தல்’ என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிக்கு தேசிய மின்-ஆளுமை பிரிவு ஏற்பாடு செய்திருந்தது

Follow us on:

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அதன் டிஜிட்டல் இந்தியா விஷன் திட்டங்களின் கீழ் டிஜிட்டல் நிர்வாகத்தில் திறன் மேம்பாட்டு முயற்சிகளை செயல்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் 2024 நவம்பர் 25-29 வரை தேசிய மின்-ஆளுமை பிரிவு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மூலம் நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகளுக்கு ‘விரிவான டிஜிட்டல் உருமாற்றுத் திட்டங்களை நிர்வகித்தல்’ குறித்த 5 நாள் பயிற்சி நிகழ்ச்சிக்கு  ஏற்பாடு செய்துள்ளது.

மத்திய  அமைச்சகங்கள், புதுதில்லி, மகாராஷ்டிரா, சண்டிகர், கர்நாடகா, ஹரியானா, ஒடிசா, அசாம், ஐதராபாத், நாகாலாந்து, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு  மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிலிருந்து மொத்தம் 24 அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை  2024,  நவம்பர் 25 அன்று தேசிய மின்-ஆளுமை பிரிவு இயக்குநர் திரு  தினேஷ் டிடெல் தொடங்கி வைத்தார். விரிவான டிஜிட்டல் உருமாற்றுத் திட்டங்களை நிர்வகிப்பதில் உள்ள சவால்களை தீர்ப்பதும், பெரிய திட்டங்களை வெற்றிகரமாக்குவதும், டிஜிட்டல் இந்தியாவுக்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை உருவாக்குவதும் இந்த நிகழ்ச்சியின் நோக்கங்களாகும்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் உள்ள திறன் மேம்பாட்டு நிகழ்வு, அரசின் அனைத்து நிலைகளிலும் போதுமான, பொருத்தமான திறன்களை உருவாக்கவும், மின்-ஆளுமை திட்டங்களை கருத்தாக்கம் செய்யவும், வழிநடத்தவும், வடிவமைத்து செயல்படுத்தவும் தேவை அடிப்படையிலான பயிற்சியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏராளமான அரசு அதிகாரிகளை சென்றடையவும், அவர்களுக்கு பொருத்தமான திறன்களில் பயிற்சி அளிக்கவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ரியாத் வடிவமைப்பு சட்ட ஒப்பந்தத்தின் இறுதி சட்டத்தில் இந்தியா கையெழுத்திட்டது

ஏறக்குறைய இரண்டு தசாப்த கால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, உலக அறிவுசார் சொத்து அமைப்பின் உறுப்பு நாடுகள் முக்கியமான வடிவமைப்பு சட்ட ஒப்பந்தத்தை …