மகாரத்னா பொதுத்துறை நிறுவனங்களான என்டிபிசி மற்றும் ஓஎன்ஜிசி ஆகியவை தங்கள் பசுமை எரிசக்தி துணை நிறுவனங்கள் (என்டிபிசி கிரீன் எனர்ஜி லிமிடெட் மற்றும் ஓஎன்ஜிசி கிரீன் எனர்ஜி லிமிடெட்) மூலம், புதுப்பிக்கத்தக்க மற்றும் புதிய எரிசக்தி அரங்கில் தங்கள் ஆர்வத்தை மேலும் மேம்படுத்த ஒரு கூட்டு முயற்சி நிறுவனத்தை (ஜேவிசி) உருவாக்க ஒத்துழைத்துள்ளன.
2024, பிப்ரவரி 7 அன்று இந்தியா எரிசக்தி வாரம் 2024 அன்று கூட்டு முயற்சி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை மற்றும் நித்தி ஆயோக்கிடமிருந்து தேவையான சட்டரீதியான ஒப்புதல்களைப் பெற்றதைத் தொடர்ந்து, என்ஜிஇஎல் ஆனது ஓஜிஎல் உடன் 5050 கூட்டு முயற்சி நிறுவனத்தை இணைப்பதற்கான விண்ணப்பத்தை பெரு நிறுவனங்கள் விவகார அமைச்சகத்திற்கு சமர்ப்பித்துள்ளது.
இந்தக் கூட்டு நிறுவனம், சூரியசக்தி, காற்றாலை (கடலோர / ஆழ் கடல்), எரிசக்தி சேமிப்பு (பம்ப் / பேட்டரி), பசுமை மூலக்கூறு (பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா, நீடித்த விமான எரிபொருள் (SAF), பசுமை மெத்தனால் உள்ளிட்ட மின்சார வாகனப் போக்குவரத்து, கார்பன் கிரெடிட்ஸ், கிரீன் கிரெடிட்ஸ் போன்ற பல்வேறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் புதிய எரிசக்தி வாய்ப்புகளில் ஈடுபடும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சொத்துக்களை கையகப்படுத்துவதற்கான வாய்ப்புகளை கூட்டு நிறுவனம் தேடும். மேலும், தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் வரவிருக்கும் கடல் காற்றாலை ஒப்பந்த புள்ளிகளில் பங்கேற்பதையும் பரிசீலிக்கும்.
என்ஜிஇஎல் மற்றும் ஓஜிஎல் இடையேயான உத்தி ரீதியான கூட்டாண்மை, பசுமையான எதிர்காலத்திற்கான நாட்டின் லட்சிய இலக்குகளுடன் நெருக்கமாக இணைந்து, நிலையான எரிசக்தி முன்முயற்சிகளை முன்னெடுப்பதற்கான, ஒருங்கிணைந்த முயற்சியைக் குறிக்கிறது. அவர்களின் துறை சார்ந்த நிபுணத்துவம் மற்றும் வளங்களைக் கருத்தில் கொண்டு, இரு நிறுவனங்களும் புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் சுற்றுச்சூழல் மேற்பார்வையை வளர்த்தல் ஆகியவற்றுடன் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளன,