नई दिल्ली. दिल्ली में कांग्रेस को बहुत बड़ा झटका लगा है. कांग्रेस पार्टी से पांच बार विधायक रहे मतीन अहमद ने आम आदमी पार्टी को ज्वाइन कर लिया है. दिल्ली में विधानसभा चुनावों के पहले कांग्रेस को बड़ा नुकसान हुआ है. मतीन अहमद कांग्रेस पार्टे के वरिष्ठ नेताओं में से …
Read More »सेना और आतंकवादियों के बीच किश्तवाड़ में एनकाउंटर के दौरान तीन जवान हुए घायल
जम्मू. जम्मू-कश्मीर के किश्तवाड़ जिले के एक सुदूर जंगल में आतंकवादियों के साथ मुठभेड़ में रविवार को सेना का तीन जवान घायल हो गए। घायल जवानों को उधमपुर भेजा गया है। अधिकारियों ने बताया कि केशवान के जंगलों में मुठभेड़ तब शुरू हुई जब सेना और पुलिस के संयुक्त तलाशी दलों …
Read More »स्वदेशी एवं वैश्वीकरण के बीच सामंजस्य चाहते थे दत्तोपंत जी ठेंगड़ी
– प्रहलाद सबनानी श्री दत्तोपंत जी ठेंगड़ी का जन्म 10 नवम्बर, 1920 को, दीपावली के दिन, महाराष्ट्र के वर्धा जिले के आर्वी नामक ग्राम में हुआ था। श्री दत्तोपंत जी के पित्ताजी श्री बापूराव दाजीबा ठेंगड़ी, सुप्रसिद्ध अधिवक्ता थे, तथा माताजी, श्रीमती जानकी देवी, गंभीर आध्यात्मिक अभिरूची से सम्पन्न थी। …
Read More »ஆழ்கடல் நுண்ணுயிரிகள் தொடர்பான கடல்சார் நுண்ணுயிர் களஞ்சிய இணையதளம் – மத்திய புவி அறிவியல் அமைச்சகச் செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்
என்ஐஓடி (NIOT) எனப்படும் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 31-வது நிறுவன தினம் இன்று (09 நவம்பர் 2024) கொண்டாடப்பட்டது. மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நீலப் பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளின் வளர்ச்சியில் என்ஐஓடி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. என்ஐஓடி இயக்குநர் பேராசிரியர் பாலாஜி ராமகிருஷ்ணன் இந்நிறுவனத்தின் முக்கிய செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் முயற்சிகள், கடல் வளங்களுக்கான சோதனைகள், கடலோரப் பாதுகாப்பு, வானிலை, பருவநிலை மாற்ற மதிப்பீடு ஆகியவை தொடர்பான கடல்சார் தரவுகளை சேகரித்தல் போன்றவை குறித்து அவர் விளக்கினார். ஆழ்கடல் இயக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, ஆழ்கடல் நுண்ணுயிரிகள் தொடர்பான கடல்சார் நுண்ணுயிர் களஞ்சியத்தின் இணையதளத்தைப் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் திரு ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். அவர் தமது உரையில், என்ஐஓடி மேற்கொள்ளும் பணிகளைப் பாராட்டினார். இந்நிறுவனத்தின் பெரும்பாலான பணிகள் முக்கிய பொறியியல், தொழில்நுட்பப் பகுதிகளாக உள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார். கல்வியாளர்களுடன் இணைந்து கூட்டு ஆய்வை இந்நிறுவனம் மேற்கொள்வது மட்டுமல்லாமல், நிபுணத்துவத்தை வளர்ப்பதிலும், யோசனைகளை செயல்பாடுகளாக மாற்றுவதிலும், தொழில்துறையுடன் இணைந்து திறன் வளர்ப்பை ஊக்குவிப்பதிலும் மேலும் அதிக அளவில் பணியாற்ற வேண்டும் என்று புவி அறிவியல் அமைச்சகச் செயலாளர் திரு ரவிச்சந்திரன் அறிவுறுத்தினார்.
Read More »இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகத்தின் சார்பில் மானக் மஹோத்சவ் – கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் மூலம் பொதுமக்களுக்கு தர விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம், ISO,IEC மற்றும் ITU உறுப்பினர்கள் ஒன்றிணைந்து உலக தர தினத்தை கொண்டாடுகிறது. சர்வதேச தரங்களாக வெளியிடப்படும் தன்னார்வ தொழில்நுட்ப ஒப்பந்தங்களை உருவாக்கும் ஆயிரக்கணக்கான நிபுணர்களின் கூட்டு முயற்சிகளுக்கு கௌரவப்படுத்தும் ஒரு வழிமுறையாக இது உள்ளது. அதன்படி, பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகம், அக்டோபர் மாதத்தில் , பல்வேறு பங்குதாரர்களுக்காக மானக் மஹோத்சவ் உலக தரநிலை நாள் நிகழ்ச்சிகளை …
Read More »கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பெருந்திரளாகப் பங்கேற்க தெனிந்திய திரைத்துறையினருக்கு மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் அழைப்பு விடுத்துள்ளார்
கோவாவில் இம்மாதம் 20ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ள 55 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தென்னகத்தைச் சேர்ந்த திரைத்துறையினர் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரைத்துறையைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து அவர் கலந்துரையாடினார். மேலும் இந்த விழா தொடர்பான முன்னேற்பாடுகள், செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் விவரித்தார். இந்த நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட தொழில் வர்த்தக சபையின் தலைவர் ரவி கொட்டாரக்கரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திரைப்பட விழா பற்றி எடுத்துரைத்த மத்திய அமைச்சர், இந்திய திரைத்துறை ஆளுமைகளான ராஜ்கபூர், தபன் சின்ஹா, முகமது ரஃபி, நாகேஸ்வரராவ் ஆகியோரின் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்படுவதாக கூறினார். இந்த ஆண்டு திரைப்பட விழாவில் கவனக் குவிப்பு நாடாக ஆஸ்திரேலியா தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் பிலிப் நோயிஸுக்கு சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த நாட்டிலிருந்து தயாரிப்பாளர்கள் , இயக்குநர்கள் உட்பட 40 திரை ஆளுமைகள் விழாவில் பங்கேற்க உள்ளனர். திரைப்பட விழாவின் தொடக்க திரைப்படமாக ஆஸ்திரேலியாவின் பெட்டர் மேன் திரையிடப்படும் என்று அமைச்சர் அவர் கூறினார். இந்தியாவின் சிறந்த முதல்முறை இயக்குனர் விருது இந்த ஆண்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். திரைப்பட விழாவில் நாடு முழுவதிலும் இருந்து 400 திரைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க உள்ளனர் என்று அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு திரைப்பட விழாவில் பெருந்திரளாக மக்கள் பங்கேற்கும் வகையில் திரையரங்குகளின் இருக்கைகள் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். வேவ்ஸ் எனும் உலகளாவிய ஒலி, ஒளி, பொழுதுபோக்கு உச்சி மாநாடு வரும் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். வானொலி, தொலைக்காட்சி, ஓடிடி, டிஜிட்டல், சினிமா, அனிமேஷன், கேமிங் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாக இந்த உச்சிமாநாட்டு நிகழ்வுகள் அமையும். படைப்பாக்கப் பொருளாதாரத்தின் குவிமையமாக இந்தியா மாறிவரும் சூழ்நிலையில் அதனை மேலும் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த உச்சிமாநாடு நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்த மாநாட்டிலும் பங்கேற்றுப் பயன்பெறவேண்டும் என்று பங்கேற்பாளர்களை அமைச்சர் டாக்டர் எல். முருகன் கேட்டுக்கொண்டார். அமைச்சரின் இந்த சந்திப்பில் மத்திய தகவல் ஒலிபரப்பு துறையின் இணைச்செயலாளரும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான திரு பிரித்துல் குமார், மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ராஜேந்திர சிங் ஆகியோர் உடனிருந்தனர்.
Read More »உயிரி தொழில்நுட்பத் துறையின் அமைப்பான உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கவுன்சிலின் (ப்ரிக்) முதல் நிறுவக தின விழா இன்று தொடங்கியது
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறை மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் 14 தன்னாட்சி நிறுவனங்களை ஒருங்கிணைத்து 2023 நவம்பர் 10 அன்று உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கவுன்சிலை (ப்ரிக்) உருவாக்கியது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங்கின் முன்மாதிரியான தலைமை மற்றும் தொலைநோக்குப் பார்வையின் கீழ், உயிரி தொழில்நுட்பத் துறையில் சிறப்பான மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதில் ப்ரிக் முக்கியப் பங்கு வகிக்கிறது. ப்ரிக் அமைப்பின் முதல் நிறுவக நாள் விழாதேசிய நோயெதிர்ப்பு நிறுவனத்தில் இன்று (2024 நவம்பர் 9) தொடங்கியது. இந்தியாவின் ஜி20 ஷெர்பா திரு அமிதாப் காந்த் இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிறுவக நாள் விரிவுரையையும் வழங்கினார். பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் தலைவர் டாக்டர் ஆனந்த் தேஷ்பாண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளரும், பிரிக் தலைமை இயக்குநருமான டாக்டர் ராஜேஷ் எஸ்.கோகலே, ப்ரிக் அமைப்பின் இயக்குநர்கள், உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் ப்ரிக் அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு ப்ரிக் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். 2024, நவம்பர் 10 அன்று ப்ரிக் நிறுவனங்கள் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை ஆகியவற்றில் பணிபுரிவோரின் குடும்பங்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும், உடல் தகுதி, குழுப்பணி மற்றும் பிணைப்பை மேம்படுத்துவதற்கும் கிரிக்கெட், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், செஸ் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டி, ஒன்றுகூடல் ஆகியவறிற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து நிறுவனங்களிலும் உள்ள விஞ்ஞானிகளையும், ஆராய்ச்சியாளர்களையும் ஒன்றிணைப்பதில் பிரிக் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய உயிரி தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதில் பாராட்டத்தக்க விளைவுகளை இது எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் கோகலே, “ஆராய்ச்சியின் ஒத்துழைப்பைக் கொண்டுவருதல், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் சக்தியை மேம்படுத்துதல் மற்றும் மாற்றுதல் ஆகிய பின்னணியில் மதிப்பு மற்றும் தாக்கத்தை மேம்படுத்துவதில் ப்ரிக் முக்கிய பங்கு வகிக்கிறது” என்று குறிப்பிட்டார். சிறப்பு விருந்தினர் திரு. அமிதாப் காந்த் இத்துறையின் முயற்சிகளைப் பாராட்டியதோடு, “ப்ரிக் நாட்டிற்கு ஒரு மைல்கல் நிறுவனமாக இருக்கும்” என்றும் குறிப்பிட்டார்.
Read More »இந்தியாவின் நோய்த்தடுப்பு இயக்கம்: உலகளாவிய தடுப்பூசி பாதுகாப்பு, சுகாதார சமத்துவம் ஆகியவற்றில் அர்ப்பணிப்பு
உலக நோய்த்தடுப்பு தினம், ஆண்டுதோறும் நவம்பர் 10-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. தொற்று நோய்களைத் தடுப்பதிலும் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதிலும் தடுப்பூசிகள் வகிக்கும் முக்கிய பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது. நோய்த்தடுப்பு என்பது நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் மிகவும் பயனுள்ள, செலவு குறைந்த நடைமுறைகளில் ஒன்றாகும். இது ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் லட்சக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுகிறது. தட்டம்மை, போலியோ, காசநோய், கொவிட் -19 போன்ற நோய்களிலிருந்து தனிநபர்களைப் பாதுகாக்க தடுப்பூசிகள் உதவுகின்றன. தொற்று நோய்களைக் குறைப்பதன் மூலம், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தனிநபர்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், பொதுவான கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதன் மூலம் சமூக ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது. இந்த நாள் உலகெங்கிலும் தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இந்தியாவில் நோய்த் தடுப்பு; இந்தியாவில், தொலைதூர பகுதிகளை அடைவதில் நாடு எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்கள் காரணமாக உலக நோய்த்தடுப்பு தினம் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது. முழுமையாக நோய்த்தடுப்பு அளிக்கப்பட்ட குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் பகுதியளவு நோய்த்தடுப்பு மற்றும் நோய்த்தடுப்பு அளிக்கப்படாத குழந்தைகள், குழந்தைப் பருவ நோய்களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் இறக்கும் ஆபத்தும் அதிகம். பல ஆண்டுகளாக இந்தியாவின் பொது சுகாதார உத்தியில் நோய்த்தடுப்பு ஒரு மையமாக உள்ளது. இது நோய் பாதிப்பு மற்றும் குழந்தை இறப்பு விகிதங்களைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது. எனவே, உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தை அடைவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தவும், இந்திரதனுஷ் இயக்கம் உள்ளிட்ட முக்கிய முயற்சிகளின் மூலம் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கவும் உலக நோய்த்தடுப்பு தினம் ஒரு வாய்ப்பாக அமைகிறது. ஒவ்வொரு நபருக்கும் உயிர் காக்கும் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் அவசியத்தையும் இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது. உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டம் (UIP): உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டம் (யுஐபி) இந்தியாவின் மிக விரிவான பொது சுகாதார முயற்சிகளில் ஒன்றாகும். இது ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக் கணக்கான புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் உயிர் காக்கும் தடுப்பூசிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் 1978-ம் ஆண்டில் நோய்த்தடுப்பு விரிவாக்கப்பட்ட திட்டமாக தொடங்கப்பட்டது. இது 1985-ம் ஆண்டில் யுஐபி என மறுபெயரிடப்பட்டது. அது நகர்ப்புற மையங்களுக்கு அப்பால் கிராமப்புறங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. சுகாதார அணுகலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்தது. 1992-ம் ஆண்டில், குழந்தை உயிர்வாழ்வு மற்றும் பாதுகாப்பான தாய்மை திட்டத்திலும் , பின்னர் 1997-ம் ஆண்டில், தேசிய குழந்தை நலத் திட்டத்திலும் இணைக்கப்பட்டது . 2005-ம் ஆண்டு முதல், தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ் , நாட்டின் மிக தொலைதூர பகுதிகளில் கூட ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்பூசிகள் சென்றடைவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தி, இந்தியாவின் பொது சுகாதார முயற்சிகளின் மைய அங்கமாக யுஐபி மாறியது. ஆண்டுக்கு சுமார் 2.67 கோடி புதிதாகப் பிறந்த குழந்தைகளும் 2.9 கோடி கர்ப்பிணிப் பெண்களும் என்ற இலக்குடன் யுஐபி, நாட்டின் மிகவும் செலவு குறைந்த சுகாதார நடைமுறைகளில் ஒன்றாக மாறியுள்ளது. 5 வயதுக்குட்பட்ட இறப்பு விகிதம் 2014-ம் ஆண்டில் 1000 பிறப்புகளுக்கு 45 ஆக இருந்தது 1000. இப்போது அது 32 ஆக கணிசமாகக் குறைத்துள்ளது. 2023-24 நிதியாண்டிற்கான நாட்டின் முழு நோய்த்தடுப்பு பாதுகாப்பு தேசிய அளவில் 93.23% ஆக உள்ளது. தற்போது, இந்த திட்டம் டிப்தீரியா, டெட்டனஸ், போலியோ, தட்டம்மை மற்றும் ஹெபடைடிஸ் பி போன்ற நாடு முழுவதும் ஒன்பது நோய்கள் உட்பட 12 நோய்களுக்கு எதிராக இலவச நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்குகிறது. இந்த முயற்சியின் கீழ், ஒரு குழந்தை வாழ்க்கையின் முதல் வருடத்திற்குள் தேசிய அட்டவணையின்படி அனைத்து தடுப்பூசிகளையும் பெற்ற பிறகு முழுமையாக நோய்த்தடுப்பு செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. குறிப்பிடத்தக்க மைல்கற்களில் 2014-ல் போலியோ ஒழிப்பு மற்றும் 2015-ல் தாய் மற்றும் பிறந்த குழந்தை டெட்டனஸ் ஆகியவை அடங்கும். இந்த சாதனைகள் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் யுஐபி-யின் தாக்கத்தைக் காட்டுகின்றன. இந்திரதனுஷ் இயக்கம் 2014 டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்திரதனுஷ் இயக்கம், நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கான முழு நோய்த்தடுப்பு பாதுகாப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் ஒரு முயற்சியாகும். இந்திரதனுஷ் இயக்கம் குறிப்பாக குறைந்த நோய்த்தடுப்பு விகிதங்களைக் கொண்ட பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. இதில் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகள் மற்றும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்படாத அல்லது ஓரளவு தடுப்பூசி போடப்பட்ட பகுதிகள் ஆகியவை அதிக கவனம் செலுத்தப்படுகின்றன. இந்த இயக்கம் ஒரு இலக்கு நோக்கிய அணுகுமுறையைக் கொண்டுள்ளது. இந்திரதனுஷ் இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் 554 மாவட்டங்களை உள்ளடக்கிய 12 கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. யு-வின்: யு-வின் தளம் இந்தியாவின் நோய்த்தடுப்பு முயற்சிகளில் ஒரு பெரிய முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது. உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கான முழுமையான டிஜிட்டல் பதிவை இது வழங்குகிறது. இந்தியாவின் பொது சுகாதார மைல்கற்கள்: இந்தியாவின் பொது சுகாதாரப் பயணம் உலகின் மிகப்பெரிய கொவிட் -19 தடுப்பூசி இயக்கம் உட்பட குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கொண்டுள்ளது. போலியோ ஒழிப்பு முதல் டெட்டனஸை ஒழிப்பது வரை, சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதில் நாடு பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. வலுவான உள்கட்டமைப்பு, செயலூக்கமான நோய் கட்டுப்பாட்டு முயற்சிகள், சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை இந்தியாவுக்கு உதவியுள்ளன. இந்தியாவின் கொவிட் தடுப்பூசி இயக்கம்: 2021ம் ஆண்டு ஜனவரி 16 அன்று தொடங்கப்பட்ட இந்தியாவின் கொவிட்-19 தடுப்பூசி திட்டம், பொது சுகாதாரத்தில் உலகளாவிய வெற்றிக் கதையாக நிற்கிறது. 2023 ஜனவரி 6-க்குள், இந்த திட்டத்தில் 220 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 97% பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் மற்றும் 90% பேருக்குஇரண்டு டோஸ்களும் போடப்பட்டன. போலியோ இல்லாத இந்தியா: 2014 மார்ச் 27, அன்று, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள மற்ற பத்து நாடுகளுடன் சேர்ந்து, இந்தியாவும் போலியோ இல்லாத நாடாக அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்டது இது ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார சாதனை. இந்தியாவின் கடைசி போலியோ 2011 ஜனவரி 13 அன்று மேற்கு வங்கத்தின் ஹவுராவில் பதிவானது. இருப்பினும், இந்த சான்றிதழ் இருந்தபோதிலும், போலியோ நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து போலியோ வைரஸ் வருவதற்கான அபாயம் இருப்பதால் நாடு விழிப்புடன் உள்ளது. போலியோவுக்கு எதிரான இந்தியாவின் வெற்றிகரமான போராட்டம் அதன் பரந்த நோய்த்தடுப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது. இது நோய்த்தடுப்புக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முழுமையான அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு தனிநபரையும், குறிப்பாக பின்தங்கிய, தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்களை சென்றடைவதில் கவனம் செலுத்துகிறது. உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டம், இந்திரதனுஷ் இயக்கம், யு-வின் தளம் போன்ற முன்முயற்சிகள் மூலம், நோய்த்தடுப்பு பாதுகாப்பை அதிகரிப்பது, தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய நோய்களை எதிர்த்துப் போராடுவது, குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைப்பது ஆகியவற்றில் நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. இந்த சாதனைகளை விரிவுபடுத்துவதற்கு தொடர்ச்சியான முயற்சிகள் அவசியம். ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக ஒவ்வொரு நபருக்கும் உயிர் காக்கும் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய நாடு தீவிரமாக செயலாற்றி வருகிறது.
Read More »தமிழ்நாடு உள்ளிட்ட தென் மண்டலத்தைச் சேர்ந்த ஊரக வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆய்வு
ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை உள்ளடக்கிய தென் மண்டலத்தில் உள்ள 10 மண்டல ஊரக வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டம் மத்திய நிதி – கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரியும் மூத்த அதிகாரிகளும், நபார்டு, சிட்பி ஆகியவற்றின் பிரதிநிதிகளும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 10 மண்டல ஊரக வங்கிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், வணிக செயல்திறன், டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளை மேம்படுத்துதல், விவசாயக் கடன், சிறு தொழில்துறை கடன்கள் தொடர்பான நடவடிக்கைகளில் வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவை குறித்து கவனம் செலுத்தப்பட்டது. கிராமப்புற பொருளாதாரத்தை ஆதரிப்பதில் மண்டல ஊரக வங்கிகளின் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, முத்ரா, பிரதமரின் விஸ்வகர்மா போன்ற மத்திய அரசின் பல்வேறு முதன்மைத் திட்டங்களின் கீழ் கடன் வழங்குவதை மண்டல ஊரக வங்கிகள், அவற்றின் ஆதரவு வங்கிகளின் உதவியுடன் அதிகரிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் வலியுறுத்தினார். பால்வளம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் போன்ற வேளாண் சார்ந்த நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் செலுத்தி, அடித்தள அளவிலான வேளாண் கடன் வழங்கலில் மண்டல ஊரக வங்கிகள் தங்கள் பங்கை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மண்டல ஊரக வங்கிகளின் நிதி செயல்திறன், தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் கூறினார். தென் மண்டலத்தில் உள்ள இந்த வங்கிகள் 2024-ம் நிதியாண்டில் ரூ. 3,816 கோடி ஒருங்கிணைந்த லாபத்தை பதிவு செய்துள்ளன என்றும் இது அனைத்து மண்டல ஊரக வங்கிகளின் ஒருங்கிணைந்த லாபத்தில் 50% க்கும் அதிகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். ‘ஒரு மாநிலம் – ஒரே மண்டல ஊரக வங்கி (RRB)’ என்ற கொள்கையின் அடிப்படையில் மண்டல ஊரக வங்கிகளை இணைப்பதற்கான முன்மொழிவு குறித்து மாநில அரசுகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது, நடப்புக் கணக்கு, சேமிப்புக் கணக்கு வைப்புகளை (CASA) மேம்படுத்துவதன் முக்கியத்துவம் சுட்டிக் காட்டப்பட்டது. அனைவரையும் உள்ளடக்கிய நிதி சேவைகள் தொடர்பான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி, மத்திய அரசின் நிதி உள்ளடக்கத் திட்டங்களின் சாதனைகளுக்கு வங்கிகள் அதிகபட்சமாக பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Read More »தில்லியில் குளிர்காலத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துல் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது காற்றுத் தர மேலாண்மை ஆணையம்
காற்றுத் தர மேலாண்மை ஆணைக்குழுவின் தலைவர் தலைமையில் இன்று அந்த ஆணைக்குழுவின் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் (ஜிஆர்ஏபி) கீழ் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையும் செயல்திறனையும் இக்கூட்டம் மதிப்பாய்வு செய்தது. குறிப்பாக தில்லியில் காற்று மாசுபாடு அதிகம் ஏற்படும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தில்லி தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல், போக்குவரத்து போன்றவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது, சம்பந்தப்பட்ட அனைத்து துறைகள், அதிகாரிகள், அமைப்புகள் ஆணையத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஜி.ஆர்.ஏ.பி.யின் நிலை -1, நிலை-2 ஆகிய நிலைகளின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய / தீவிரப்படுத்தப்பட வேண்டிய முக்கிய தடுப்பு நடவடிக்கைகள் கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டன. குளிர் காலத்தின் காற்று மாசுபாட்டை திறம்பட சமாளிக்க முக்கிய பகுதிகளிலும் பிற முன்னுரிமை பகுதிகளிலும் உள்ள அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுடனும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளின் அவசியத்தை இக்கூட்டம் வலியுறுத்தியது. மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும், காற்றின் தரத்தில் முன்னேற்றங்களை அடைவதற்கும் ஒரு கூட்டு அணுகுமுறை அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.
Read More »