நாடு முழுவதும் 800 நகரங்கள் / மாவட்டங்களில் மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சார்பில் 2024 நவம்பர் 1 முதல் 30 வரை நடத்தப்படும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் இயக்கம் 3.0-ஐ 2024 நவம்பர் 6 அன்று, புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கிவைக்கிறார். ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவதற்காக ஆண்டுதோறும் வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். பாரம்பரியமாக வாழ்நாள் …
Read More »ஹரியானா, திரிபுரா, மிசோரம் மாநிலங்களுக்கு 15-வது நிதி ஆணைய மானியம் விடுவிப்பு
ஹரியானா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25 நிதியாண்டில் 15-வது நிதி ஆணைய மானியங்களை மத்திய அரசு விடுவித்துள்ளது. ஹரியானாவின் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் தவணையின் ஒரு பகுதியாக ரூ.194.867 கோடி மதிப்புள்ள நிபந்தனையற்ற மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிதி விடுவிப்பதற்கான நிபந்தனையைப் பூர்த்தி செய்த மாநிலத்தில் உள்ள 18 தகுதியான மாவட்ட ஊராட்சிகள், 139 தகுதியான வட்டார ஊராட்சிகள் மற்றும் 5911 தகுதியான கிராம பஞ்சாயத்துகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது . திரிபுராவிலுள்ள …
Read More »உலக சூரியசக்தி அறிக்கை தொடரை சர்வதேச சூரியசக்தி கூட்டணி (ஐஎஸ்ஏ) வெளியிட்டது
உலக சூரியசக்தி அறிக்கை தொடரின் 3-வது பதிப்பு சர்வதேச சூரிய கூட்டணியின் 7-வது பேரவைக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை, உலகளாவிய சூரியசக்தி வளர்ச்சி, முதலீட்டு போக்குகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் ஆப்பிரிக்காவின் பசுமை ஹைட்ரஜன் திறன் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. உலக சூரிய சந்தை அறிக்கை, உலக முதலீட்டு அறிக்கை, உலக தொழில்நுட்ப அறிக்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான பசுமை ஹைட்ரஜன் தயார்நிலை மதிப்பீடு ஆகிய 4 அறிக்கைகள் …
Read More »இந்திய சினிமாவின் நான்கு ஜாம்பவான்களின் நூற்றாண்டு விழாவை இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடுகிறது
55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐ.எஃப்.எஃப்.ஐ) இந்திய சினிமாவின் பல அம்சங்களை வடிவமைத்த நான்கு சினிமா ஜாம்பவான்களைக் கௌரவிக்கவுள்ளது. இந்த ஆண்டு ஐ.எஃப்.எஃப்.ஐ, ராஜ் கபூர், தபன் சின்ஹா, அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் முகமது ரஃபி ஆகியோரைக் கௌரவிக்கும் வகையில், திரையிடல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் அஞ்சலி செலுத்தும். சினிமா உலகிற்கு இந்தப் புகழ் பெற்ற திரைப்பட ஆளுமைகளின் பங்களிப்புகளை நினைவு கூருவதாக இது அமையும். இந்த ஆளுமைகளுக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தும் …
Read More »‘சுங்க விநியோகச் சங்கிலித் தொடரில் பாலினச் சமத்துவத்தை உள்ளடக்குதல்’ என்ற கருத்தரங்கு நடைபெற்றது
புனேயில் உள்ள மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் சுங்க மண்டலம் ஏற்பாடு செய்திருந்த ‘சுங்க விநியோகச் சங்கிலித் தொடரில் பாலினச் சமத்துவத்தை உள்ளடக்குதல்” என்ற தலைப்பிலான கருத்தரங்கிற்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய உறுப்பினர் (சுங்கம்) திரு சுர்ஜித் புஜாபால் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். பாலின சமத்துவத்தின் குறிப்பிடத்தக்க குறியீடாக பாலின உள்ளடக்கம் உள்ளது என்று அவர் கூறினார். இது பாலின பாகுபாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. …
Read More »இந்தியா-கத்தார் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த இருநாட்டு நிதி புலனாய்வு பிரிவுகள் புதுதில்லியில் கூடுகின்றன
கத்தார் நிதி புலனாய்வு பிரிவின் தலைவர் திரு ஷேக் அகமது அல் தானி தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட தூதுக்குழு 2024 நவம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் புதுதில்லியில் இந்திய நிதி புலனாய்வு பிரிவு தலைவர் திரு விவேக் அகர்வாலைச் சந்தித்தது. இந்தப் பயணம் இரு நிதி உளவுப் பிரிவுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதிலும், பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை எதிர்த்துப் போராடுவதில் ஒருவருக்கொருவர் உதவுவதற்கான உறுதிப்பாட்டையும் குறிக்கிறது. இந்த …
Read More »மீன்வளத்துறை சிறப்பு முகாம் 4.0- முயற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள மீன்வளத் துறை, சிறப்பு இயக்கம் 4.0-ன் ஒரு பகுதியாக அதன் நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை தலைமையிலான அரசின் முன்முயற்சியாகும். இந்த இயக்கம் 2024, அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெற்றது. அலுவலக தூய்மை, பயனுள்ள இட மேலாண்மை, முக்கிய பிரமுகர்கள், முன்னுரிமை குறிப்புகளை விரைவாகக் கையாளுதல் …
Read More »இந்திய கடலோர காவல்படை 26-வது தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் அவசரகால செயல்திட்ட கூட்டத்தை நடத்தியது
இந்திய கடற்பகுதியில் எண்ணெய் கசிவு தற்செயல்களுக்கு திறம்பட பதிலளிப்பதற்கான நாட்டின் தயார்நிலையை மறுஆய்வு செய்வதற்காக இந்திய கடலோர காவல்படை 26வது தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் தற்செயல் திட்டம் (NOSDCP) கூட்டத்தை இன்று நவம்பர் 05, 2024 அன்று புதுதில்லியில் கூட்டியது. இதற்கு என்.ஓ.எஸ்.டி.சி.பி.யின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி தலைமை தாங்கினார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர், கடல்சார் எண்ணெய் மற்றும் ரசாயனக் கசிவு உள்ளிட்ட பிராந்திய அச்சுறுத்தல்களை சமாளிப்பதில் இந்திய கடலோரக் காவல்படையின் உறுதிப்பாட்டை மீண்டும் …
Read More »தர்மங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட பூமி இந்தியா; தலைசிறந்த நாயகர்கள், மறைஞானிகள் மற்றும் வழிகாட்டுவோரிடையே புத்தர் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார்: திருமதி திரௌபதி முர்மு
புதுதில்லியில் இன்று சர்வதேச புத்த மதக் கூட்டமைப்புடன் (IBC) இணைந்து மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த முதலாவது ஆசிய புத்த மத உச்சி மாநாட்டில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இந்தியா தர்மங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட பூமி என்றும் ஒவ்வொரு காலகட்டத்திலும், இந்தியாவில் தலைசிறந்த நாயகர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள், ஞானிகள் இருந்துள்ளனர்; அவர்கள் மனிதகுலத்திற்கு உள்ளே அமைதியையும் வெளியே …
Read More »மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி பாரத் ஆட்டா மற்றும் பாரத் அரிசியின் இரண்டாம் கட்ட சில்லறை விற்பனையைத் தொடங்கி வைத்தார்
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, பாரத் ஆட்டா மற்றும் பாரத் அரிசி ஆகியவற்றின் சில்லறை விற்பனையின் இரண்டாம் கட்டத்தை, மத்திய இணையமைச்சர் திரு பி.எல். வர்மா முன்னிலையில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இரண்டாம் கட்டத்தில் சில்லறை விலையில் பாரத் ஆட்டா ஒரு கிலோ ரூ.30-க்கும் பாரத் அரிசி கிலோ ஒன்றுக்கு ரூ.34 என்ற விலையிலும் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. …
Read More »