रविवार, फ़रवरी 15 2026 | 05:58:09 AM
Breaking News
Home / अन्य समाचार (page 28)

अन्य समाचार

வடகிழக்குப் பகுதி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்

2021-22-ம் ஆண்டு முதல் 2023-24-ம் ஆண்டு வரையிலான கடந்த 3 நிதியாண்டுகளிலும், நடப்பு 2024-25-ம் நிதியாண்டிலும் வடகிழக்குப் பகுதி சிறப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் (என்இஎஸ்ஐடிஎஸ்- NESIDS) கீழ் ரூ. 3417.68 கோடி மதிப்பிலான 90 திட்டங்களுக்கு வடகிழக்குப் பகுதி மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. என்இஎஸ்ஐடிஎஸ் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் வடகிழக்குப் பகுதி மாநில அரசுகளால் (NER) செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்களை கண்காணிக்கும் முதன்மை பொறுப்பு சம்பந்தப்பட்ட …

Read More »

கடலோரக் காவல் படையின் 11-வது தேசிய கடல்சார் பயிற்சி – பாதுகாப்புத்துறை செயலாளர் தொடங்கி வைக்கிறார்

இந்தியக் கடலோரக் காவல்படையின் 11-வது (SAREX-24) தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்புப் பயிற்சியும் பயிலரங்கும் 2024  நவம்பர் 28 -29, தேதிகளில் கேரளாவின் கொச்சியில் தேசிய கடல்சார் தேடுதல், மீட்பு வாரியத்தின்  சார்பில் நடைபெறுகிறது.  இதை பாதுகாப்புத் துறைச் செயலாளர்  திரு ராஜேஷ்குமார் சிங் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இந்தியக் கடலோரக் காவல்படை (ஐசிஜி) தலைமை இயக்குநர் எஸ்.பரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டின் கருப்பொருள் பிராந்திய ஒத்துழைப்பு மூலம் தேடுதல், மீட்புத் திறன்களை மேம்படுத்துதல் …

Read More »

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பின் சில்லறை விலை குறைந்து, கடந்த 3 மாதங்களாக நிலையாக உள்ளது: மத்திய அரசு

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் சில்லறை விலைகள் குறைந்து கடந்த 3 மாதங்களாக நிலையாக உள்ளது. நுகர்வோர் விவகாரங்கள் துறை, இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்துடன் (ஆர்ஏஐ) வழக்கமான கூட்டங்களை நடத்தி வருகிறது. சில்லறை விற்பனையாளர்கள், நியாயமான விலையை பராமரிப்பதை உறுதி செய்வதற்காக பருப்பு வகைகளின் மண்டி விலை, சில்லறை விலை ஆகியவற்றின் போக்குகள் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில்லறை சந்தையில் நேரடியாக விற்பனை செய்யும் வகையில்,  …

Read More »

கூட்டுறவுத் துறையின் பரவலாக்கப்பட்ட தானிய சேமிப்புத் திட்டத்தின் வாயிலாக உணவுப் பாதுகாப்பு

கூட்டுறவுத் துறையின், உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின் முன்னோடித் திட்டத்தின் கீழ், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், அசாம், தெலுங்கானா, திரிபுரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய 11 மாநிலங்களில் உள்ள 11 தொடக்க வேளாண் கடன் சங்கங்களில் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) மற்றும் நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் (NABCONS) ஆகியவற்றின் ஆதரவுடன் (PACS) பிஏசிஎஸ் அளவில் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. இதன் படி தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் சிலமரத்துப்பட்டி தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் 1,000 மெட்ரிக் டன் சேமிப்பு …

Read More »

பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் , தொலைத் தொடர்பு கோபுரங்கள்

தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் வட்ட வாரியான கைபேசி பயனர்கள் பட்டியலை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது சேகரித்து வெளியிடுகின்றது. பி.எஸ்.என்.எல் வைஃபை சந்தாதாரர்களின் விவரங்களும் வெளியிடப்படுகின்றன. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு கோபுரங்களின் எண்ணிக்கை  67,340  ஆகும். 12,502 தொலைத் தொடர்பு கோபுரங்கள் தனியார் தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியா முயற்சிக்கு இணங்க, பிஎஸ்என்எல் இந்தியா முழுவதும் சேவை வழங்க உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 4 ஜி தளங்களுக்கான பணி ஆணைகளை …

Read More »

நெட்வொர்க் தயார்நிலை குறியீட்டு எண்-2024-ல் முதல் 50 நாடுகளில் ஒன்றாக இந்தியா பதினொரு இடங்கள் முன்னேறியுள்ளது

2024, நவம்பர் 21 அன்று வெளியிடப்பட்ட நெட்வொர்க் தயார்நிலை குறியீட்டு எண் -2024 அறிக்கையின்படி இந்தியா தனது நிலையில் இருந்து பதினொரு இடங்கள் முன்னேறி 49 வது இடத்திற்கு வந்துள்ளது, நெட்வொர்க் தயார்நிலை குறியீட்டு எண் 2023 அறிக்கையில் 60 வது இடத்தில் இந்தியா இருந்தது. வாஷிங்டன் டி.சி.யை தளமாகக் கொண்ட ஒரு சுயேச்சையான லாப நோக்கற்ற ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமான போர்ட்டுலன்ஸ் இன்ஸ்டிடியூட் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியா தனது தரவரிசையை மேம்படுத்தியது மட்டுமின்றி, 2023-ல் 49.93 என்பதில் இருந்து 2024-ல் 53.63 ஆக அதன் மதிப்பெண்ணையும்  மேம்படுத்தியுள்ளது. இந்தியா பல குறியீடுகளில் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஏஐ அறிவியல் வெளியீடுகள்’, ‘ஏஐ திறமை செறிவு’ மற்றும் ‘ஐசிடி சேவைகள் ஏற்றுமதி’ ஆகியவற்றில் இந்தியா முதலாவது இடத்தையும்,  ‘நாட்டிற்குள் செல்பேசி அகண்ட அலைவரிசை  இணையப் போக்குவரத்து’,  ‘சர்வதேச இணைய அலைவரிசை’ ஆகியவற்றில் 2 வது இடத்தையும், ‘உள்நாட்டு சந்தை அளவில்’ 3 வது இடத்தையும், ‘தொலைத்தொடர்பு சேவைகளில் வருடாந்தர முதலீட்டில் ‘ 4 வது இடத்தையும் பெற்றுள்ளது. வியட்நாமுக்கு அடுத்தபடியாக குறைந்த-நடுத்தர வருமான நாடுகளின் குழுவில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது. அறிக்கையின்படி, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் டிஜிட்டல் மாற்றத்தில் குறிப்பிடத்தக்க பலங்களுடன் இந்தியா குறிப்பிடத்தக்க டிஜிட்டல் முன்னேற்றத்தை நிரூபித்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களுடனான கூட்டாண்மை மூலம் கிராமப்புறங்களுக்கு அகண்ட அலைவரிசை  அணுகலை விரிவுபடுத்துவதன் மூலம் டிஜிட்டல் இந்தியா ஒரு முன்மாதிரியை அமைத்துள்ளது. இதன் விளைவாக இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 25.1 கோடியிலிருந்து 94.4 கோடியாக உயர்ந்துள்ளது, வயர்லெஸ் இணைய பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. அலைக்கற்றை மேலாண்மையில் சீர்திருத்தங்கள், எளிதாக வர்த்தகம் செய்தல், நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவை இத்துறையை மேலும் வலுப்படுத்தியுள்ளன.   भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं सारांश कनौजिया …

Read More »

இந்தியாவும் பிரான்சும் பல்வேறு துறைகளில் கூட்டாக செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

பல்வேறு துறைகளில் இந்தியாவும் பிரான்சும் இணைந்தபு செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன என்று மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று பிரான்ஸ் வெளிநாட்டு வர்த்தக ஆலோசகர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆசிய பசிபிக் ஆணைய  மன்றக் கூட்டத்தில் மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்றார். உணவு உற்பத்தியில் நிலையான நடைமுறைகளைப் பயன்படுத்துவது பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை தணிக்கும் என்று …

Read More »

நிலக்கரி உற்பத்திக்கு ஆதரவு

2024 அக்டோபர் மாதத்தில் அகில இந்திய உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 84.47 மில்லியன் டன் (MT) (தற்காலிகமானது) ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் உற்பத்தி 78.57 மில்லியன் டன்னாக இருந்தது. இது சுமார் 7.5% வளர்ச்சியாகும்.  உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க நிலக்கரி நிறுவனங்கள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளன: நடப்பு நிதியாண்டில் அகில இந்திய நிலக்கரி உற்பத்தி இலக்கு 1080 மில்லியன் டன். ரயில் மூலம் நிலக்கரியை எடுத்துச் …

Read More »

இந்திய வேதியியல் கவுன்சில், ஓபிசிடபிள்யூ- தி ஹேக் விருதை வென்றது

2024 ஓபிசிடபிள்யூ- தி ஹேக் விருது இந்திய வேதியியல் கவுன்சிலுக்கு (ICC) 2024 நவம்பர் 25 அன்று ஹேக்கில் நடந்த ரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் (OPCW) மாநாட்டில் 29-வது அமர்வின் போது உலகளாவிய ரசாயனத் தொழில்துறையின் நிபுணர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. ஒரு ரசாயன தொழில் அமைப்பின் முயற்சிகளை அங்கீகரித்து கௌரவித்து இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ஓபிசிடபிள்யூ தலைமை இயக்குநர் திரு பெர்னாண்டோ அரியாஸும் ஹேக் நகர மேயர் திரு ஜான் வான் …

Read More »

வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்பதை உறுதி செய்யும் வினாடி -வினா நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு இளைஞர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

வரலாற்றுச் சிறப்புமிக்க வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் வினாடி -வினா போட்டியில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது இலக்கை அடைவதற்கு இது அவர்களின் நிலையான பங்களிப்பாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “என் இளைய நண்பர்களே, ஒரு சுவாரஸ்யமான வினாடி வினா …

Read More »