பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, பீகார் மாநிலம் ஜமுயில் இன்று ரூ.6,640 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பழங்குடியினர் தின நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோரைப் பிரதமர் வரவேற்றார். இந்தியா முழுவதிலும் இருந்து இந்த நிகழ்ச்சியில் இணைந்த எண்ணற்ற பழங்குடியின சகோதர சகோதரிகளையும் பிரதமர் வரவேற்றார். கார்த்திகை பூர்னிமா, தேவ் தீபாவளி, ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் 550-வது பிறந்த நாள் ஆகியவை அனுசரிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, அதற்காக இந்திய குடிமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படும் நாள் என்பதால் குடிமக்களுக்கு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் கூறினார். இந்தியக் குடிமக்கள், குறிப்பாக பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இன்றைய பழங்குடியினர் கௌரவ தினத்திற்கு முன்னோட்டமாக கடந்த 3 நாட்களில் தூய்மை இயக்கம் ஜமுயில் நடைபெற்றது என்று பிரதமர் குறிப்பிட்டார். தூய்மை இயக்கத்திற்காக, ஜமுய் நிர்வாகம், குடிமக்கள், குறிப்பாக பெண்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். கடந்த ஆண்டு பழங்குடியினர் கௌரவ தினத்தன்று, பிர்சா முண்டாவின் பிறந்த கிராமமான உலிஹாட்டுவில் தாம் இருந்ததை நினைவுகூர்ந்த திரு மோடி, இந்த ஆண்டு தியாகி தில்கா மஞ்சியின் துணிச்சலைக் கண்ட இடத்தில் தாம் இருந்ததாகக் குறிப்பிட்டார். பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் இன்று தொடங்குவதால் இந்த நிகழ்ச்சி மேலும் சிறப்பானது என்றார். வரும் ஆண்டிலும் கொண்டாட்டங்கள் தொடரும் என்று அவர் மேலும் கூறினார். பீகார் மாநிலம் ஜமுயில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மெய்நிகர் முறையில் பங்கேற்ற பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஒரு கோடி பேருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். பிர்சா முண்டாவின் வழித்தோன்றலும், சித்து கன்ஹுவின் வழித்தோன்றலுமான திரு மண்டல் முர்முவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக திரு மோடி தெரிவித்தார். ரூ.6,640 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்கமும் அடிக்கல் நாட்டும் பணிகளும் இன்று நடைபெற்றதாக பிரதமர் குறிப்பிட்டார். பழங்குடியினருக்கு உறுதியான வீடுகள், பழங்குடி குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்காக பள்ளிகள் மற்றும் விடுதிகள், பழங்குடி பெண்களுக்கான சுகாதார வசதிகள், பழங்குடி பகுதிகளை இணைக்கும் சாலை திட்டங்கள், பழங்குடி கலாச்சாரத்தை பாதுகாக்க பழங்குடி அருங்காட்சியகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றிற்கு சுமார் 1.5 லட்சம் ஒப்புதல் கடிதங்கள் இந்தத் திட்டங்களில் அடங்கும் என்று அவர் மேலும் கூறினார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பழங்குடியின மக்களுக்காக 11,000 வீடுகள் புதுமனைப் புகுவிழாவுக்காக கட்டப்பட்டிருப்பதாக திரு மோடி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் அனைத்து பழங்குடியினருக்கும் வாழ்த்து தெரிவித்தார். பழங்குடியினர் கௌரவ தினம் மற்றும் பழங்குடியினர் கௌரவ ஆண்டு தொடங்குவது பற்றி குறிப்பிட்ட திரு மோடி, இந்தக் கொண்டாட்டங்கள் ஒரு பெரிய வரலாற்று அநீதியை சரிசெய்யும் நேர்மையான முயற்சியைக் குறிக்கிறது என்றார். சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் பழங்குடியினருக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். பழங்குடியின சமூகத்தின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர், பழங்குடி சமூகம்தான் இளவரசர் ராமரை பகவான் ராமராக மாற்றியது என்றும், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க பல நூற்றாண்டுகளாக போராடி வழிநடத்தியது என்றும் கூறினார். எவ்வாறாயினும், சுதந்திரத்திற்குப் பிந்தைய தசாப்தங்களில் சுயநல அரசியலால் தூண்டப்பட்ட பழங்குடி சமூகத்தின் இத்தகைய முக்கியமான பங்களிப்புகளை அழிக்க முயற்சிகள் நடந்தன என்று அவர் கூறினார். உல்குலன் இயக்கம், கோல் கிளர்ச்சி, சந்தால் கிளர்ச்சி, பில் இயக்கம் போன்ற இந்தியாவின் சுதந்திரத்திற்காக பழங்குடியினரின் பல்வேறு பங்களிப்புகளை பட்டியலிட்ட திரு மோடி, பழங்குடியினரின் பங்களிப்பு மகத்தானது என்றார். அல்லூரி சீதாராம ராஜு, தில்கா மஞ்சி, சித்து கன்ஹு, புது பகத், தெலாங் காரியா, கோவிந்த குரு, தெலுங்கானாவின் ராம்ஜி கோண்ட், மத்தியப் பிரதேசத்தின் பாதல் போய், ராஜா சங்கர் ஷா, குவர் ரகுநாத் ஷா, தந்தியா பில், ஜாத்ரா பகத், லட்சுமண் நாயக், மிசோரமின் ரோபுய்லியானி, ராஜ் மோகினி தேவி, ராணி கைடின்லியு, கலிபாய், கோண்டுவானாவின் ராணி துர்காவதி தேவி மற்றும் பலர்… இவர்களைப் போன்ற இந்தியா முழுவதிலுமிருந்த பல்வேறு பழங்குடித் தலைவர்களை ஒருபோதும் மறக்க முடியாது என்று அவர் கூறினார். பிரிட்டிஷார் ஆயிரக்கணக்கான பழங்குடியினரை கொன்று குவித்த மன்கர் படுகொலையை மறக்க முடியாது என்றும் திரு மோடி குறிப்பிட்டார். கலாச்சாரத் துறையாக இருந்தாலும், சமூக நீதித் துறையாக இருந்தாலும் தமது அரசின் மனநிலை வேறுபட்டது என்று கூறிய திரு மோடி, திருமதி திரௌபதி முர்முவை இந்தியக் குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுத்தது தங்களது அதிர்ஷ்டம் என்றார். அவர் இந்தியாவின் முதல் ஆதிவாசி குடியரசுத் தலைவர் என்றும், பிரதமர்-ஜன்மன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட அனைத்து பணிகளுக்கான பெருமையும் குடியரசுத்தலைவரையே சாரும் என்றும் அவர் கூறினார். குறிப்பாக பாதிக்கக்கூடிய பழங்குடியின குழுக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக ரூ 24,000 கோடி பிரதமர் ஜன்மன் திட்டம் தொடங்கப்பட்டது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு மோடி, இந்த திட்டத்தின் கீழ், நாட்டின் மிகவும் பின்தங்கிய பழங்குடியினரின் குடியிருப்புகளின் மேம்பாடு உறுதி செய்யப்படுகிறது என்றார். இந்தத் திட்டம் இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளதாகவும், இதன் கீழ் ஆயிரக்கணக்கில் உறுதியான வீடுகள் குறிப்பாக பாதிப்படையக்கூடிய பழங்குடியின மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பல வீடுகளில் வீடுதோறும் குடிநீர் திட்டத்தின் கீழ் குறிப்பாக பாதிப்படையக்கூடிய பழங்குடியின குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கப்படுவதாகவும் குடிநீர் இணைப்பை உறுதி செய்வதற்காக சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். முற்றிலும் புறக்கணிக்கப்பட்டவர்களைத் தாம் வணங்குவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, முந்தைய அரசுகளின் அணுகுமுறை காரணமாக பழங்குடியின சமூகங்கள் பல தசாப்தங்களாக அடிப்படை உள்கட்டமைப்பு இல்லாமல் இருந்தது என்றார். நாட்டில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பல பத்து மாவட்டங்கள் வளர்ச்சியின் வேகத்தில் பின்தங்கியுள்ளன என்று அவர் கூறினார். தங்களது அரசு சிந்தனை முறையை மாற்றி, அவற்றை ‘முன்னேற விரும்பும் மாவட்டங்கள்’ என்று அறிவித்து, அவற்றின் வளர்ச்சிக்கு திறமையான அதிகாரிகளை நியமித்துள்ளது என்று திரு மோடி கூறினார். இன்று இதுபோன்ற முன்னேற விரும்பும் மாவட்டங்கள் பல வளர்ந்த மாவட்டங்களைக் காட்டிலும் பல்வேறு வளர்ச்சிக் குறியீடுகளில் சிறப்பாக செயல்பட்டிருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இதன் பலன்கள் பழங்குடியினருக்கு கிடைத்துள்ளன என்றும் அவர் கூறினார். பழங்குடியினர் நலனுக்கு எப்போதும் எங்கள் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று பிரதமர் கூறினார். அடல் அவர்களின் அரசுதான் பழங்குடியினர் நலனுக்கென தனி அமைச்சகத்தை உருவாக்கியது என்றும் அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.25,000 கோடியிலிருந்து ரூ.1.25 லட்சம் கோடியாக 5 மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதை திரு மோடி குறிப்பிட்டார். 60,000-க்கும் அதிகமான பழங்குடியின கிராமங்கள் பயனடையும் வகையில் சிறப்புத் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது என்று திரு மோடி கூறினார். பழங்குடியின கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டத்தில் ரூ.80,000 கோடி முதலீடு செய்யப்படுவதாக அவர் மேலும் கூறினார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தங்கும் விடுதிகளை உருவாக்க பயிற்சி மற்றும் ஆதரவுடன் பழங்குடியினர் சந்தைப்படுத்தல் மையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். இது சுற்றுலாவை வலுப்படுத்துவதோடு, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை சாத்தியமாக்கும். இது பழங்குடியினர் இடம்பெயர்வதை தடுக்கும் என்றும் அவர் கூறினார். பழங்குடியின பாரம்பரியத்தை பாதுகாக்க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை சுட்டிக்காட்டிய திரு மோடி, பல பழங்குடியின கலைஞர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டதாக கூறினார். …
Read More »भारतीय ग्रीडद्वारे नेपाळमधून बांगलादेशापर्यंत वीज पाठवणाऱ्या पहिल्या त्रिपक्षीय विद्युत व्यवहाराचे उद्घाटन
केंद्रीय ऊर्जा, गृहनिर्माण आणि नागरी व्यवहार मंत्री मनोहर लाल यांनी, बांग्लादेशचे ऊर्जा आणि खनिज संसाधन मंत्रालयाचे सल्लागार मोहम्मद फौजुल कबीर खान तसेच नेपाळचे उर्जा, जलसंपदा आणि सिंचन मंत्री दीपक खडका यांच्यासमवेत, नेपाळ सरकारच्या ऊर्जा, जलसंपदा आणि सिंचन मंत्रालयाने दूरदृश्य प्रणाली मार्फत आयोजित केलेल्या कार्यक्रमाद्वारे नेपाळमधून बांगलादेशापर्यंत जाणाऱ्या वीज प्रवाह उपक्रमांचे संयुक्तरीत्या उद्घाटन केले. हा ऐतिहासिक …
Read More »आर्थिक विकास आणि वाढीचा ऊर्जा आज कणा बनली आहे: पेट्रोलियम मंत्री हरदीप पुरी
“आज ऊर्जा ही आर्थिक वाढ आणि प्रगतीचा कणा बनली आहे,” असे प्रतिपादन पेट्रोलियम आणि नैसर्गिक वायू मंत्री हरदीप सिंह पुरी यांनी आज ग्रेटर नोएडा येथे भारतातील महत्वपूर्ण दक्षिण आशियाई भूविज्ञान परिषद आणि प्रदर्शन जियो इंडिया 2024 (GEO India 2024) याच्या उद्घाटन समारंभात केले.भारतासारख्या देशात, जेथे वाढत्या अर्थव्यवस्थेच्या अनुषंगाने ऊर्जेची मागणी वेगाने वाढत आहे, तेथे आर्थिक …
Read More »इफ्फी 2024 मध्ये रौप्य मयूर पुरस्कारासाठी 5 आंतरराष्ट्रीय आणि 2 भारतीय नवोदित दिग्दर्शकांमध्ये चुरस
55 व्या इफ्फीमध्ये म्हणजेच भारतीय आंतरराष्ट्रीय चित्रपट महोत्सवात काळजीपूर्वक निवडलेल्या 5 आंतरराष्ट्रीय आणि 2 भारतीय दिग्दर्शकांचे चित्रपट सादर होणार आहेत. चित्रपट निर्मितीमध्ये पदार्पणातच असामान्य चित्रपट तयार करणाऱ्या जगभरातील निर्मात्यांना ‘दिग्दर्शकाची पदार्पणातील सर्वोत्कृष्ट फिचर फिल्म’ हा पुरस्कार देऊन त्यांच्या प्रतिभेचा गौरव करुन उत्सव साजरा करण्यात येणार आहे. या श्रेणीतील विजेत्याला प्रतिष्ठित रौप्य मयूर, 10 लाख रुपये रोख …
Read More »केंद्रीय गृहमंत्री आणि सहकार मंत्री अमित शाह यांनी भगवान बिरसा मुंडा यांच्या 150 व्या जयंतीनिमित्त नवी दिल्ली येथे त्यांच्या भव्य पुतळ्याचे केले अनावरण
केंद्रीय गृहमंत्री आणि सहकार मंत्री अमित शहा यांनी आज भगवान बिरसा मुंडा यांच्या 150 व्या जयंती वर्षानिमित्त नवी दिल्लीतील बानसेरा उद्यानात त्यांच्या भव्य पुतळ्याचे अनावरण केले. भगवान बिरसा मुंडा हे केवळ त्यांच्या मूळ आदिवासी संस्कृतीचे रक्षणकर्ते तर बनलेच त्याबरोबरच आपले जीवन कसे जगावे आणि जीवनातील ध्येय आणि उद्दिष्टे काय असावीत हे त्यांनी …
Read More »गुजरातमध्ये अंमली पदार्थांची तस्करी करणाऱ्या आंतरराष्ट्रीय टोळीचा पर्दाफाश करून 700 किलोहून अधिक वजनाचे मेथॅम्फेटामाईन हे प्रतिबंधित अंमली द्रव्य जप्त केल्याबद्दल केंद्रीय गृहमंत्री आणि सहकारमंत्री अमित शाह यांनी सुरक्षा यंत्रणांचे केले अभिनंदन
गुजरातमध्ये आंतरराष्ट्रीय अंमली पदार्थ तस्करी करणाऱ्या टोळीचा पर्दाफाश करून 700 किलोहून अधिक वजनाचे मेथॅम्फेटामाईन हे प्रतिबंधित अंमली द्रव्य जप्त केल्याबद्दल केंद्रीय गृहमंत्री आणि सहकारमंत्री अमित शाह यांनी सुरक्षा यंत्रणांचे अभिनंदन केले आहे. एक्स मंचावर लिहिलेल्या संदेशात केंद्रीय गृहमंत्री अमित शाह म्हणाले की अंमली पदार्थ नियंत्रण ब्युरो (एनसीबी), भारतीय नौदल आणि गुजरात पोलीस यांनी …
Read More »अझरबैजानमध्ये बाकू येथे आयोजित कॉप29 शिखर परिषदेतील हवामानविषयक वित्तपुरवठा या विषयाशी संबंधित उच्चस्तरीय मंत्रीपातळीवरील बैठकीत भारताने समविचारी विकसनशील देशांच्या वतीने सादर केले निवेदन
बाकू येथे युएनएफसीसीसी परिषदेतील कॉप29 मध्ये हवामानविषयक वित्तपुरवठा या विषयाशी संबंधित उच्चस्तरीय मंत्रीपातळीवरील बैठकीत 14 नोव्हेंबर 2024 रोजी समविचारी विकसनशील देशांच्या वतीने निवेदन सादर केले. लागोपाठ कोसळत असलेल्या आपत्तींच्या रुपात हवामान बदलाचे परिणाम अधिकाधिक प्रमाणात दिसू लागले आहेत यावर भारताने यामध्ये अधिक भर दिला. परिषदेत निवेदन सादर करताना, केंद्रीय पर्यावरण, वने आणि हवामान बदल मंत्रालयाचे अतिरिक्त सचिव …
Read More »केंद्रीय ग्राहक व्यवहार विभागाने जिल्हा तसेच राज्य ग्राहक आयोगातील रिक्त जागांचा घेतला आढावा
देशभरातील जिल्हा तसेच राज्यस्तरीय ग्राहक आयोगांतील रिक्त जागांची सद्यस्थिती जाणून घेण्यासाठी केंद्रीय ग्राहक व्यवहार विभागाने आज एका आढावा बैठकीचे आयोजन केले. केंद्रीय ग्राहक व्यवहार विभाग (डीओसीए) सचिव निधी खरे यांच्या अध्यक्षतेखाली झालेल्या या बैठकीत राज्ये तसेच केंद्रशासित प्रदेश प्रशासनातील संबंधित विभागाचे ज्येष्ठ अधिकारी उपस्थित होते. याप्रसंगी, डीओसीए सचिव म्हणाल्या की ग्राहकांचे …
Read More »भगवान बिरसा मुंडा यांच्या 150 व्या जयंतीनिमित्त टपाल विभागाने जारी केले विशेष टपाल तिकीट
आदिवासी गौरव दिनानिमित्त, थोर आदिवासी नेते आणि स्वातंत्र्य सेनानी भगवान बिरसा मुंडा यांच्या 150 व्या जयंती निमित्त त्यांना आदरांजली वाहण्याच्या उद्देशाने, टपाल विभागाने एक विशेष टपाल तिकीट जारी केले. बिहारमधील जमुई येथे आयोजित एका भव्य सोहळ्यात पंतप्रधान नरेंद्र मोदी यांच्या हस्ते आणि बिहारचे मुख्यमंत्री नितीश कुमार आणि इतर मान्यवरांच्या उपस्थितीत या तिकिटाचे प्रकाशन करण्यात आले. पंतप्रधान नरेंद्र …
Read More »ऑस्ट्रेलियाचे उच्चायुक्त श्री.फिलिप ग्रीन यांनी घेतली कृषी आणि शेतकरी कल्याण विभागाचे सचिव, डॉ.देवेश चतुर्वेदी,यांची सदिच्छा भेट
ऑस्ट्रेलियाचे उच्चायुक्त श्री.फिलिप ग्रीन यांनी कृषी आणि शेतकरी कल्याण विभागाचे सचिव, डॉ.देवेश चतुर्वेदी,यांची काल नवी दिल्ली येथील कृषी भवनात सदिच्छा भेट घेतली. भारत आणि ऑस्ट्रेलिया यांच्यातील द्विपक्षीय संबंध अधिक दृढ करण्यासाठी तसेच कृषी आणि संलग्न क्षेत्रांमध्ये सहकार्याच्या नवीन संधीचा शोध घेण्यासाठी या बैठकीमुळे एक महत्त्वपूर्ण व्यासपीठ उपलब्ध झाले आहे. बैठकीदरम्यान डॉ. …
Read More »
Matribhumisamachar
