गुरुवार, मई 07 2026 | 08:26:09 AM
Breaking News
Home / Tag Archives: Panchayat Raj Organizations

Tag Archives: Panchayat Raj Organizations

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் சேவைகளைப் பறைசாற்றும் சிறப்பு பயிலரங்கு நாளை நடைபெறுகிறது

 நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் தீர்வுத் துறையின் தேசிய மின்-ஆளுமை பயிலரங்கு தொடரின் ஒரு பகுதியாக, பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் வழங்கும் மக்களை மையமாகக் கொண்ட சேவைகள் குறித்த சிறப்பு இணைய கருத்தரங்கு  நாளை ( 11நவம்பர் 2024)  மதியம்  12:00 மணி முதல் 1:00 மணி வரை நடைபெறும்.  இதற்கு மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் தீர்வுத் துறை செயலாளர் திரு வி.சீனிவாஸ், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் ஆகியோர் தலைமை தாங்குவார்கள், அவர்கள் முக்கிய கருத்துக்களை வழங்குவதுடன், முக்கிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வார்கள். கிராமப்புற மக்களுக்கு அத்தியாவசியச் சேவைகளை வழங்குவதில் பஞ்சாயத்து அமைப்புகளின் முக்கிய பங்கிற்கான பார்வையை கோடிட்டுக் காட்டுவார்கள். மேலும், மத்திய சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் தீர்வுத் துறை கூடுதல் செயலாளர் திரு. புனித் யாதவ், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு. அலோக் பிரேம் நகர் ஆகியோரும் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் போது, பஞ்சாயத்துகளில் சேவை வழங்கலை முன்னிலைப்படுத்தும் ஒரு சிறிய வீடியோ திரையிடப்படும், அதைத் தொடர்ந்து திரு அலோக் பிரேம் நகர் பஞ்சாயத்து அமைப்புகளின் சேவை வழங்கலுக்கான நிலை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த விரிவான விளக்கக்காட்சியை  வழங்குவார். இந்தப் பயிலரங்கு மூன்றடுக்கு சுய அதிகாரம் கொண்ட உள்ளாட்சி  நிர்வாகத்தில், குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை சரியான நேரத்தில் மற்றும் திறம்பட வழங்குவதை உறுதி செய்வதில் பஞ்சாயத்துகள் வகிக்கும் முக்கிய பங்கை வலியுறுத்த முயலும்.  சேவைகளைத் திறம்பட  வழங்குவதை உறுதி செய்வதற்கும், அடிமட்ட அளவில் ஒட்டுமொத்த நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் மக்களை மையமாகக் கொண்ட தலையீடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்தப்படும். அரசின் திட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் மக்கள் சேவைகள் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைவதை உறுதி செய்து, அடிமட்ட மட்டத்தில் செயல்படும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் நிர்வாகத்தில் முன்னணியில் உள்ளன. நீர் வழங்கல், சுகாதாரம், டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு வரையிலான இந்தச் சேவைகள் கிராமப்புறங்களின் சமூக-பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதிலும், கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியமானவை.   இந்தப் பயிலரங்கில்  அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் செயலாளர்கள் , பஞ்சாயத்து ராஜ் துறைகளின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் / முதன்மைச் செயலாளர்கள் / செயலாளர்கள், மாற்றத்தை விரும்பும் மாவட்டங்களைச் சேர்ந்த துணை ஆணையர்கள் / மாவட்ட நீதிபதிகள் மற்றும் 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான அனைத்து தேசிய மின்-ஆளுமை விருது பெற்றவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.   ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்பதன் மூலம் இந்த அமர்வு மேலும் செழுமைப்படுத்தப்படும். இது விரிவான மற்றும் உயர்மட்ட கருத்துப் பரிமாற்றம் மற்றும் சிறந்த நடைமுறைகளை உறுதி செய்யும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது தற்போதைய சேவை வழங்கல் மாதிரிகள் குறித்து விவாதிப்பதற்கும், மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை உருவாக்குவதற்கான எதிர்காலத் திட்டங்களை விளக்குவதற்கும் இது ஒரு தளத்தை வழங்கும்.

Read More »