Monday, December 08 2025 | 09:05:47 AM
Breaking News

வியட்நாமின் தூதுக்குழு மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகனுடன் சந்திப்பு – இருநாடுகளுக்கிடையே ஊடகம், பொழுதுபோக்கு துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு

Connect us on:

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகனை, வியட்நாம் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினரும்,  வியட்நாம் கம்யூனிஸ்ட்டின் தகவல், கல்வி, மக்கள் தொடர்புக்கான மத்திய ஆணையத்தின் தலைவருமான திரு நுயென் ட்ராங் நிகியா தலைமையிலான வியட்நாம் அரசின் உயர் அதிகாரிகள் குழு புதுதில்லியில் இன்று (05.06.2025) சந்தித்தது. இந்த சந்திப்பின் போது, ​​ஊடகம், பொழுதுபோக்கு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியாவும் வியட்நாமும் ஒப்புக்கொண்டன. இந்த கூட்டத்தில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன், அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜுவும் கலந்து கொண்டனர்.

இந்தியாவும் வியட்நாமும் பாரம்பரியமாக நெருங்கிய இருதரப்பு உறவுகளை நீண்டகாலமாகப் பகிர்ந்து கொள்கின்றன. 2022-ம் ஆண்டில், இரு நாடுகளும் தூதரக உறவுகளை நிறுவிய 50-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடின. 2016-ம் ஆண்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் வியட்நாம் பயணத்தின் போது, ​​இந்தியா – வியட்நாம் இருதரப்பு உறவுகள் குறித்த விரிவான உத்திசார் கொள்கைகள் வகுக்கப்பட்டன.

உலக ஒலி, ஒளி, பொழுதுபோக்கு உச்சி மாநாடு (வேவ்ஸ்) மும்பையில் 2025 மே 1 முதல் 4 வரை நடைபெற்ற போது அதில் வியட்நாம் தூதுக்குழு பங்கேற்றதை மத்திய இணையமைச்சர் திரு எல் முருகன் பாராட்டினார். உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியாவின் வளர்ச்சியை வியட்நாம் பிரதிநிதி திரு நுயென் ட்ராங் நியா பாராட்டினார். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்பையும் ஒத்துழைப்பையும் அவர் எடுத்துரைத்தார். இரு நாடுகளின் ஊடக அமைப்புகளுக்கு இடையே மேம்பட்ட ஒத்துழைப்புக்கான திட்டங்களை உருவாக்க இந்த சந்திப்பின் போது ஒப்புக்கொள்ளப்பட்டது.

பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியம் உட்பட இரு நாடுகளும் தங்கள் ஆழமான கலாச்சார தொடர்புகளை வலுப்படுத்தவும், பல பரிமாண ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் தீவிரமாக பணியாற்றுவது என இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

ரஷ்ய அதிபரைப் பிரதமர் வரவேற்றார்

இந்தியாவுக்கு வந்துள்ள ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடினை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். இன்று மாலையும் நாளையும் …