புதுதில்லியில் 2025 ஜூன் 04 அன்று ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான திரு ரிச்சர்ட் மார்லஸுடன் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சு நடத்தினார். பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை இரண்டு அமைச்சர்களும் கடுமையாகக் கண்டித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காப்புக்காக தாக்குதல் தொடுக்கும் இந்தியாவின் உரிமையை பாதுகாப்பு அமைச்சர் எடுத்துரைத்தார். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்துப் போராடுவதற்கு இரு தரப்பினரும் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர்.
சந்திப்பிற்கு பிறகு சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சர், பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்ததற்காக ஆஸ்திரேலியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஆஸ்திரேலியா-இந்தியா கூட்டு ஆராய்ச்சி திட்டத்தில் கையெழுத்திட்டதை இரு அமைச்சர்களும் வரவேற்றனர், மேலும் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்தவும் பன்முகப்படுத்தவும் ஒப்புக்கொண்டனர். இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மூன்றாவது இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் போது, பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவது குறித்து அவர்கள் விவாதித்தனர். 2023 நவம்பரில் நடைபெற்ற வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் இடையேயான சந்திப்பிற்கு பிறகு ஏற்பட்ட முன்னேற்றத்தையும் அவர்கள் மதிப்பாய்வு செய்தனர்.
भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं
ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)
Matribhumi Samachar Tamil

