Sunday, December 07 2025 | 06:18:06 AM
Breaking News

Matribhumi Samachar

2024-25-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் அந்நிய நேரடி முதலீடு 26% அதிகரித்து $42.1 பில்லியனாக உள்ளது

ஏப்ரல் 2000 முதல் மொத்த அந்நிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) 1 டிரில்லியன் டாலரை எட்டியதன் மூலம் இந்தியா தனது பொருளாதார பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், அந்நிய நேரடி முதலீடு சுமார் 26% அதிகரித்து 42.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கணிசமான கடன் அல்லாத நிதி ஆதாரங்களை வழங்குவதன் மூலமும், தொழில்நுட்ப பரிமாற்றங்களை ஊக்குவிப்பதன் மூலமும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் இந்தியாவின் …

Read More »

நாடாளுமன்றக் கேள்வி: அணு மின் உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள்

அணுமின் உற்பத்தித் திறனை தற்போதுள்ள 8180 மெகாவாட்டிலிருந்து 2031-32-ம் ஆண்டுக்குள் 22,480 மெகாவாட்டாக உயர்த்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2070 ஆம் ஆண்டு வாக்கில்  நாட்டின் எரிசக்தி கலவையை நிகர பூஜ்ஜியத்திற்கு மாற்றுவதற்காக, நாட்டின் எரிசக்தித் துறையை கார்பன் நீக்கம் செய்வதற்கான உத்தியின் ஒரு பகுதியாக அணுசக்தி விரிவாக்கம் உள்ளது. இந்திய அணு மின் கழகம் அமலாக்கும் திட்டங்களில் தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணு மின் திட்டம் 3,4,5,6 ஆகியவற்றில் மொத்தம் 2000 மெகா வாட் மின்னுற்பத்தியும் அடங்கும் தொலைதூரப் பகுதிகளில் சிறிய  அணு உலைகளை நிறுவி, அங்கு …

Read More »

ஹோமி பாபா இருக்கை உருவாக்கத் திட்டம்

அணுசக்தித் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக சிறந்த தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள ஓய்வு பெற்ற விஞ்ஞானிகள் / பொறியாளர்கள் உள்ளிட்ட தலைசிறந்த நிபுணர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், அணுசக்தித் துறையில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கான ஹோமி பாபா இருக்கை உருவாக்கத் திட்டம்  செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், விருது பெறும் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.2,00,000/- மதிப்பூதியம் வழங்கப்படும் (மதிப்பூதியம் மற்றும் ஓய்வூதியம் கடைசியாக பெற்ற ஊதியத்தை விட அதிகமாக …

Read More »

விண்வெளித் துறையில் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற முயற்சி

இந்தியாவின் விண்வெளி தொலைநோக்குத் திட்டம் 2047-ல் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை அடைய மத்திய அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், சர்வதேச கூட்டாண்மைகள், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் விண்வெளி ஆய்வு பணிகளை முன்னெடுத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. விண்வெளி நடவடிக்கைகளில் இந்திய தனியார் துறையின் பங்களிப்பை அனுமதிக்க மத்திய அரசு 2020-ம் ஆண்டில் விண்வெளித் துறை சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. 2035-க்குள் பாரதிய விண்வெளி நிலையத்தை நிறுவவும், 2040-க்குள் நிலவில் இந்தியரை தரையிறக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட விண்வெளி தொலைநோக்கு 2047-ஐ மத்திய …

Read More »

ஜல் ஜீவன் இயக்கம், குறிப்பாக நமது ஊரகப் பகுதிகளில், பெண்களுக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்தியுள்ளது: பிரதமர்

ஜல் ஜீவன் இயக்கம், குறிப்பாக நமது ஊரகப் பகுதிகளில், பெண்களுக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்தியுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். தங்கள் வீட்டு வாசலிலேயே, சுத்தமான தண்ணீர் கிடைப்பதால், பெண்கள் இப்போது திறன் மேம்பாடு, தற்சார்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த முடியும் என்று அவர் கூறினார். சமூக ஊடக எக்ஸ் வலைதளத்தில், ஒரு வீடியோவைப்  பகிர்ந்து, அவர் கூறியுள்ளதாவது: “ஜல் ஜீவன் இயக்கம், குறிப்பாக நமது கிராமப்புறங்களில்  பெண்களுக்கு எவ்வாறு அதிகாரம் அளிக்கிறது …

Read More »

பிரதமருடன் மகாராஷ்டிர முதல்வர் சந்திப்பு

மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னாவிஸ் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது: “மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னாவிஸ், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்”.

Read More »

டிசம்பர் 13 அன்று பிரதமர் உத்தரப்பிரதேசம் பயணம்

பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 13 அன்று உத்தரப்பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். பிரயாக்ராஜ் செல்லும் அவர், நண்பகல் 12.15 மணியளவில் திரிவேணி சங்கமத்தில் பூஜை மற்றும் தரிசனம் செய்கிறார். அதன்பிறகு, நண்பகல் 12.40 மணியளவில், அங்குள்ள தல விருட்சத்தில் பிரதமர் பூஜை செய்கிறார். அதைத் தொடர்ந்து ஹனுமான் மற்றும் சரஸ்வதி  கோவில்களில் தரிசனம் செய்கிறார். பிற்பகல் 1.30 மணியளவில், மகா கும்பமேளா நடைபெறும் இடத்தைப் பார்வையிடுகிறார். பிற்பகல் 2 மணியளவில், பிரயாக்ராஜில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் ரூ.5500 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார். பிரயாக்ராஜில் …

Read More »

இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் டி-க்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் டி -க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது சாதனை என்றும் அவர் பாராட்டியுள்ளார். சர்வதேச செஸ் சம்மேளனத்தின் எக்ஸ் தள பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது: “வரலாற்று சிறப்புமிக்கது மற்றும் முன்மாதிரியானது ! குகேஷ் டி-யின் குறிப்பிடத்தக்க சாதனைக்கு வாழ்த்துகள். இது அவரது இணையற்ற திறமை, கடின உழைப்பு மற்றும் அசைக்க முடியாத உறுதியின் …

Read More »

ஜெனரல் அசோக் ராஜ் சிக்டலுக்கு இந்திய ராணுவத்தின் கவுரவ ஜெனரல் பதவியை குடியரசுத் தலைவர் வழங்கினார்

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 12, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற சிறப்பு பதவியேற்பு விழாவில், நேபாள இராணுவத்தின் இராணுவத் தளபதி சுப்ரபால் ஜனசேவஸ்ரீ ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெலுக்கு இந்திய இராணுவத்தின் கௌரவ ஜெனரல் பதவியை வழங்கினார். அவரது பாராட்டத்தக்க இராணுவ வலிமை மற்றும் இந்தியா-நேபாளம் இடையே நீண்டகாலமாக நட்புறவை வளர்ப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Read More »

திருச்சி என்ஐடியில் 14-வது கட்டமைப்பு பொறியியல் மாநாடு வரும் 12 முதல் 14 வரை நடைபெறுகிறது

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் (என்ஐடி-டி) கட்டுமானப் பொறியியல் துறை, வரும் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை, 14வது கட்டமைப்பு பொறியியல் மாநாட்டுக்கு (எஸ்இசி-2024) ஏற்பாடு செய்துள்ளது. கட்டமைப்பு பொறியியல் மாநாடு என்பது அதிநவீன ஆராய்ச்சி, புதுமையான பொருட்கள், நிலையான நடைமுறைகள் ஆகியவற்றின் மூலம் கட்டமைப்பு பொறியியலை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முதன்மையான சர்வதேச மாநாடு ஆகும்.  மேலும் நெகிழ்தன்மையுடன் கூடிய, நிலையான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் முக்கியமான சவால்களை எதிர்கொள்ள கல்வியாளர்கள், தொழில்துறை …

Read More »