Thursday, December 19 2024 | 06:38:47 AM
Breaking News

Matribhumi Samachar

கலாச்சார படவரைவு தேசிய இயக்கமும் அதற்கான செயல்திட்டமும்

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தோங்ஜாவோ கிராமம் ‘மட்பாண்டங்களின் நிலம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கே, உயரிய விருதான  பத்மஸ்ரீ விருதைப் பெற்ற தலைசிறந்த கைவினைக் கலைஞரான நீலமணி தேவியின் மரபு, இந்த பண்டைய கலையைப் பாதுகாக்க தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. நீலமணியின் திறமைகள் அவருக்கு தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததுடன், கிராமத்தின் மண்பாண்ட தொழிலுக்கான பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் முக்கியப் பங்கும் ஆற்றியுள்ளது. கிராமப்புறங்களில் வீடுகளில் உபயோகிக்கும் பானைகள் முதல், கலைநயம் மிக்க படைப்புகள் வரை அனைத்தையும் தயாரிப்பதில் அவர்கள் …

Read More »

சர்வதேச தொலைத் தொடர்பு என்பதை வரையறை செய்வதைக் குறித்த பரிந்துரைகள்

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சர்வதேச தொலைத்தொடர்பு என்பதை வரையறை செய்வது குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தொடர்புத் துறை, 30.08.2022 தேதியிட்ட செய்திக் குறிப்பு மூலம், சர்வதேச மற்றும் உள்நாட்டு குறுந்தகவல்கள் அனுப்புவது குறித்து இந்திய தொலைத்தொடர்பு ஓழுங்குமுறை ஆணையச் சட்டம், 1997 (திருத்தம்)படி பிரிவு 11(1)(a)-ன் கீழ் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டது. இது தொடர்பாக, பொது மக்கள்  மற்றும் …

Read More »

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் புதிய தொழிற்சாலைகளை அமைப்பதற்கு ஊக்குவிப்பும் வசதியும் அளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை மற்றும் பிற மத்திய அமைச்சகங்கள் / துறைகள் மூலம், பொருத்தமான கொள்கை தலையீடுகளை செய்து நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறை வளர்ச்சிக்கான உகந்த சூழலை மத்திய அரசு ஏற்படுத்துகிறது. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் புதிய தொழில்களை தொடங்குவதற்கான  மேம்பாடு மற்றும் வசதி அளிக்க பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் தற்போது நடைபெற்று வரும் திட்டங்களுடன் கூடுதலாக,  இந்தியாவில் தயாரியுங்கள், ஸ்டார்ட் அப் இந்தியா, பிரதமரின் விரைவு சக்தி, தேசிய உள்கட்டமைப்பு திட்டம், தேசிய தொழில்துறை வழித்தடத் திட்டம், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை  திட்டம், எளிதாக வர்த்தகம் செய்வதை ஊக்குவித்தல், இணக்க சுமையைக் குறைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. மேலும் தேசிய ஒற்றைச் சாளர முறை , இந்திய தொழில்துறை நில வங்கி, திட்டக் கண்காணிப்புக் குழு, தாராளமயமாக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை, இந்திய காலணி மற்றும் தோல் மேம்பாட்டுத் திட்டம் போன்றவையும் செயல்படுத்தப்படுகின்றன. முதலீடுகளை விரைவுபடுத்துவதற்கான நிறுவன அமைப்பு, மத்திய அரசின் சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்கள் / துறைகளில் திட்ட மேம்பாட்டுக் குழுக்கள்  வடிவில் உருவாக்கப்பட்டுள்ளன. தேசிய தொழில்துறை பெருவழித்தட மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு பல்வேறு தொழில்துறை பெருவழித்தட திட்டங்களை உருவாக்கி வருகிறது, இது உலகின் சிறந்த உற்பத்தி மற்றும் முதலீட்டு இடங்களுடன் போட்டியிடக்கூடிய இந்தியாவில் பசுமை தொழில்துறை பகுதிகள் / பிராந்தியம் / முனையங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Read More »

ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து இடைமுக பிளாட்ஃபாரம் அறிமுகம் தரவுகளைத் தொழிற்சாலைகள் பெறுவதை எளிதாக்குகிறது

தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை 2022-ன் கீழ், சரக்குப் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சரக்கு ஏற்றுதல் போன்ற முக்கிய சவால்களை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிலக்கரி துறையில் திறன்மிக்க சரக்கு போக்குவரத்து துறைக்கான துறைசார் திட்டம் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. 26 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தங்களது சரக்கு போக்குவரத்து கொள்கைகளை அறிவித்துள்ளன. அறிவிக்கப்பட்ட கொள்கைகளின் விவரங்களை https://dpiit.gov.in/logistics/state-logistics-policies -தளத்தில் பார்க்கலாம். பல்வேறு மாநிலங்களுக்கிடையில் சரக்குப் போக்குவரத்தை எளிமையாக்குதலின்  5-வது …

Read More »

ஆயுஷ் மருத்துவ முறையின் கீழ் சிகிச்சை பெற இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கு ஆயுஷ் விசா

ஆயுஷ் மருத்துவ முறையின் கீழ் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு ஆயுஷ் விசா என்ற தனி பிரிவை அரசு 2023 ஜூலை 27  அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ஆயுஷ் விசா நான்கு துணை வகைகளின் கீழ் கிடைக்கிறது: (i) ஆயுஷ் விசா (AY-1), (ii) ஆயுஷ் உதவியாளர் விசா (AY2), (iii) இ-ஆயுஷ் விசா மற்றும் (iv) இ-ஆயுஷ் உதவியாளர் விசா. ஆயுஷ் விசா ஆயுஷ் அமைப்புகள் மூலம் சிகிச்சை பெறுவதை ஒரே நோக்கமாகக் கொண்டு இந்தியாவுக்கு வரும் ஒரு வெளிநாட்டவருக்கு வழங்கப்படுகிறது. அரசு அமைப்புகள் அல்லது மருத்துவமனை & சுகாதார சேவை வழங்குபவர்களுக்கான தேசிய அங்கீகரிப்பு  வாரியம் அல்லது ஹோமியோபதிக்கான தேசிய ஆணையம் அல்லது இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையம் ஆகியவற்றில் பதிவு செய்துள்ள மருத்துவமனை/நல்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற வருகை புரிபவர்களுக்கு ஆயுஷ் விசா வழங்கப்படுகிறது. 04.12.2024 வரை மொத்தம் 123 வழக்கமான ஆயுஷ் விசா, 221 இ-ஆயுஷ் விசா மற்றும் 17 இ-ஆயுஷ் உதவியாளர் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மருத்துவ மதிப்பு பயணத்திற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மருத்துவ பராமரிப்பு அல்லது ஆரோக்கிய சேவைகளை நாடும் எந்தவொரு சர்வதேச நோயாளியும் வருகை தருவதன் மூலம் அட்வான்டேஜ் ஹெல்த்கேர் இந்தியா தளத்தைப் பார்வையிடலாம்www.healinindia.gov.in.  மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Read More »

திரு எஸ்.எம். கிருஷ்ணா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் திரு எஸ். எம். கிருஷ்ணா மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கவனம் செலுத்தியதற்காக அறியப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க தலைவர் என்று திரு மோடி அவரைப் பாராட்டியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது: “திரு எஸ்.எம்.கிருஷ்ணா அவர்கள் ஒரு குறிப்பிடத்தக்க தலைவர். அனைத்துத் தரப்பு மக்களாலும் போற்றப்பட்டவர். மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அவர் எப்போதும் அயராது உழைத்தார். கர்நாடகாவின் முதல்வராக இருந்த காலத்தில், குறிப்பாக உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கவனம் செலுத்தியதற்காக அவர் அன்புடன் நினைவுகூரப்படுகிறார். திரு  எஸ்.எம்.கிருஷ்ணா அவர்கள் ஒரு சிறந்த வாசகராகவும் சிந்தனையாளராகவும் இருந்தார். “திரு  எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களுடன் கலந்துரையாட  பல ஆண்டுகளில் எனக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தன. அந்த உரையாடல்களை நான் எப்போதும் போற்றுவேன். அவரது மறைவு எனக்கு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.”

Read More »

மத்திய பிரதேச முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார். இது குறித்து சமூக  ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது: “மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு மோகன் யாதவ்@DrMohanYadav51, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் @narendramodi- சந்தித்தார்.

Read More »

சி.ராஜகோபாலாச்சாரியாரின் பிறந்த நாளில் பிரதமர் அவருக்கு நினைவஞ்சலி

திரு சி. ராஜகோபாலாச்சாரியாரின் பிறந்த நாளில், அவரை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரது  பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை, இலக்கியம், சமூகத்துக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது : சி. ராஜகோபாலாச்சாரியாரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, இந்தியாவின் …

Read More »

மாபெரும் தமிழ்க் கவிஞரும் சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியாரின் முழுமையான படைப்புகள் அடங்கிய தொகுப்பை 2024, டிசம்பர் 11 அன்று பிரதமர் வெளியிடுகிறார்

மாபெரும் தமிழ்க் கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி, 7, லோக் கல்யாண் மார்கில் டிசம்பர் 11 அன்று பிற்பகல் 1 மணியளவில் வெளியிடுகிறார். சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்கள் மக்களிடையே தேசபக்தியை விதைத்தன. இந்திய கலாச்சாரம் மற்றும் நாட்டின் ஆன்மீக பாரம்பரியத்தின் சாரத்தை பொதுமக்களுக்கு எளிதில் புரியும் மொழியில் எடுத்து சொல்லின. 23 தொகுப்புகளில் அவரது முழுமையான …

Read More »

தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைகள் தின விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்

புதுதில்லியில் இன்று (டிசம்பர் 10, 2024) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைகள் தின நிகழ்ச்சியில்  குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், 5,000 ஆண்டுகளுக்கும் மேலான நாகரிக பாரம்பரியத்தைக் கொண்ட இந்தியா, அனுதாபம், இரக்கம் மற்றும் இணக்கமான சமூகத்தில் உள்ள தனிநபர்களின் பரஸ்பர பிணைப்பு ஆகிய மதிப்புகளை நீண்டகாலமாக கடைப்பிடித்து வருகிறது என்று கூறினார். இந்த அம்சங்களின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் …

Read More »