“ரசாயனம், பெட்ரோ ரசாயனப் பொருட்கள் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு” என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம் இன்று (23.01.2025) சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தொடங்கியது. மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (சிப்பெட்) தலைமை இயக்குநர் பேராசிரியர் டாக்டர் சிஷிர் சின்ஹா இதனைத் தொடங்கி வைத்தார். ரசாயனம், பெட்ரோ ரசாயன துறையில் பாதுகாப்பு தரங்களை உறுதிப்படுத்த தேவையான பயிற்சியை வலுப்படுத்துவதற்கு இந்தப் பயிற்சி முகாம் முன்னுரிமை அளிக்கிறது. மத்திய அரசின் ரசாயனம், பெட்ரோலிய ரசாயனத் துறை நாடு முழுவதும் உள்ள 2393 தொழிற்சாலைகளுக்கும் ரசாயனப் பாதுகாப்பு குறித்த பயிற்சி அளிக்க …
Read More »மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, அகமதாபாத்தில் ‘இந்து ஆன்மிக மற்றும் சேவை விழா’வைத் தொடங்கி வைத்தார்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்து ஆன்மிக மற்றும் சேவை விழாவை (அத்யாத்மிக் அவுர் சேவா மேளா) மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று (23.01.2025) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு. பூபேந்திர படேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மத்திய உள்துறை அமைச்சர் தமது உரையில், ஒரே மேடையில் 200 க்கும் மேற்பட்ட சேவை அமைப்புகளை இந்த விழா ஒன்றிணைத்துள்ளது …
Read More »குஜராத் மாநிலம் சூரத்தில் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் நெஞ்சக நோய் மருத்துவமனையை மத்திய அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார்
குஜராத் மாநிலம் சூரத்தில் ஸ்ரீ பாபுலால் ரூப்சந்த் ஷா மகாவீர் புற்றுநோய் மருத்துவமனை, ஸ்ரீ பூல்சந்த்பாய் ஜெய்கிஷண்டாஸ் வகாரியா நெஞ்சகநோய் மருத்துவமனை ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, சூரத் ஒரு முக்கியமான நகரம் என்றும், கடந்த சில ஆண்டுகளில் நகரத்தில் பல தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன என்றும் திரு அமித் ஷா கூறினார். குஜராத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மேற்கு இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளின் மையமாகவும் சூரத் …
Read More »நீலகிரி மாவட்டத்தில் வானவில் வண்ண மீன் / குளிர்நீர் மீன்வளம் குறித்து மத்திய மீன்வளத்துறை செயலாளர் ஆய்வு
மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சகத்தின் மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி, இன்று (2025 ஜனவரி 23) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் வானவில் வண்ண மீன் / குளிர்நீர் மீன்வளம் குறித்து ஆய்வு செய்தார். அவலாஞ்சியில் உள்ள வானவில் வண்ண மீன் குஞ்சு பொரிப்பகத்தையும், பண்ணை வசதிகளையும் அவர் பார்வையிட்டார். மேலும் இந்தத் துறையில் நிலையான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய மாநில அரசின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இமயமலைப் பகுதியிலும் தமிழ்நாட்டின் நீலகிரி மலைப்பகுதிகளிலும் வானவில் வண்ண மீன் (ரெயின்போ ட்ரௌட்) / குளிர்நீர் …
Read More »பராக்ரம தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை
பராக்ரம தினமாகக் கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாற்றினார். இந்தத் தினத்தை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளான இன்று நாடு முழுவதும் அவரை மரியாதையுடன் நினைவு கூர்கிறது என்றார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு மரியாதை செலுத்திய திரு நரேந்திர மோடி, இந்த ஆண்டு பராக்ரம தினக் கொண்டாட்டங்கள் அவரது …
Read More »பராக்ரம தினத்தை முன்னிட்டு மாணவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்
பராக்ரம தினமாகக் கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இளம் மாணவர்களுடன் இன்று (23.01.2025) கலந்துரையாடினார். 2047-ம் ஆண்டுக்குள் தேசத்தின் இலக்கு என்ன என்று பிரதமர் மாணவர்களிடம் கேட்டார். அதற்கு ஒரு மாணவர் மிகுந்த நம்பிக்கையுடன் இந்தியாவை வளர்ந்த தேசமாக மாற்றுவது என்று பதிலளித்தார். 2047 ஆம் ஆண்டுக்குள் என்ற எல்லை ஏன் என்று …
Read More »இந்திய விளையாட்டு ஆணையம், 2025-26-ம் ஆண்டுக்கான வீரர்கள் தேர்வை சென்னையில் நடத்துகிறது
மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சென்னை மையம், 2025-2026 ஆம் ஆண்டிற்கு கீழ்க்கண்ட விளையாட்டுக்களில் திறமையான விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வுப் போட்டிகளை நடத்தவுள்ளது. 12 முதல் 18 வயது பிரிவில் தடகள வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு 01.02.2025 அன்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. 2010-ம் ஆண்டுக்கும் 2013-ம் ஆண்டுக்கும் இடையில் பிறந்தவர்களுக்கான ஆடவர் கால்பந்து பிரிவு …
Read More »தமிழ்நாடு உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் எஃப்எஸ்எஸ்ஏஐ தலைமைச் செயல் அதிகாரி ஆலோசனை: மாநிலத்தில் உணவு நிறுவனங்களில் ஆய்வுப்பணிகளை தீவிரப்படுத்த வலியுறுத்தல்
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு ஆணையர் திரு லால்வேனா மற்றும் அதிகாரிகளுடன் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய (எஃப்எஸ்எஸ்ஏஐ) தலைமைச் செயல் அதிகாரி திரு ஜி. கமலா வர்தன ராவ் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் உணவு நிறுவனங்களில் ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும் என்றும், உணவு பரிசோதனை ஆய்வகங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்தினார். ஆரோக்கியமான, சுகாதாரமான உணவக மையங்களை (ஃபுட் ஸ்ட்ரீட்) …
Read More »போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்புக் கண்காட்சி
சென்னை ஆவடியில் உள்ள போர் வாகனங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அதன் பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கண்காட்சியை 2025 ஜனவரி 22 அன்று நடத்தியது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத் தொழில்நுட்பங்கள் குறித்து கல்லூரி மாணவர்கள் அறிந்துகொள்ளவும், அதன் தயாரிப்புகள் குறித்து தெரிந்துகொள்ளும் வகையிலும், இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய ராணுவத்தின் முன்கள …
Read More »சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள நிப்மெட் நிறுவனத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு
சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட நபர்களின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் (NIEPMD- நிப்மெட்) நாடாளுமன்ற உறுப்பினர் திரு பி சி மோகன் தலைமையிலான சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, 21.01.2025 அன்று ஆய்வு மேற்கொண்டது. முட்டுக்காடு நிப்மெட் இயக்குநர் டாக்டர் நச்சிகேதா ரவுட், இந்நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் சேவை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பேருந்து சேவை நடைமுறைகள், ஹைட்ரோ தெரபி சிகிச்சை முறைகள் குறித்து …
Read More »
Matribhumi Samachar Tamil