இந்தியா- பெல்ஜியம் இடையே இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு. பியூஷ் கோயல், பெல்ஜியம் வெளியுறவு, ஐரோப்பிய விவகாரங்கள் மற்றும் வெளியுறவு வர்த்தகத் துறை அமைச்சர் திரு. பெர்னார்ட் குயின்டினை பிரஸ்ஸல்ஸில் இன்று சந்தித்துப் பேசினார். இந்தக் கூட்டத்தில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரமான நீதித்துறை ஆகிய பொதுவான மதிப்புகளின் அடிப்படையில் இந்தியா – பெல்ஜியம் இடையேயான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவதன் தேவை வலியுறுத்தப்பட்டது. …
Read More »அமிர்த உத்யான் பிப்ரவரி 2 முதல் பொதுமக்களுக்காக திறக்கப்படுகிறது
குடியரசுத் தலைவர் மாளிகையின் அமிர்த உத்யான் என்னும் பூந்தோட்டம் 2025 பிப்ரவரி 2 முதல் மார்ச் 30 வரை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும். பராமரிப்பு நாட்களான திங்கட்கிழமை தவிர, வாரத்தில் ஆறு நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் தோட்டத்துக்குச் செல்லலாம். பிப்ரவரி 5 (தில்லி சட்டமன்றத்திற்கான வாக்குப்பதிவு காரணமாக), பிப்ரவரி 20 மற்றும் 21 (ராஷ்டிரபதி பவனில் பார்வையாளர்கள் மாநாடு காரணமாக), …
Read More »சென்னை ஐஐடி, ‘விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கை’யின் கீழ் ஐந்து தேசியத் தடகள வீரர்-வீராங்கனைகளைச் சேர்த்துள்ளது
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), ‘விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கை’ பிரிவின் கீழ் தேசிய அளவில் சாதனை படைத்த ஐந்து தடகள வீரர்-வீராங்கனைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு இளங்கலைப் பட்டப்படிப்பு பாடத்திட்டத்திலும் தலா இரண்டு இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்படுகின்றன. இதில் ஒரு இடம் மாணவிகளுக்கு மட்டும் ஒதுக்கப்படும். நாட்டிலேயே முதன்முறையாக விளையாட்டு வீரர்களுக்கான மாணவர் சேர்க்கையை தனது இளங்கலைப் …
Read More »திருச்சியில் அஞ்சல்துறை சார்பாக ஃபிட் இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
பொது மக்களுக்கு உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அஞ்சல்துறையின் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு நடைபயணம், உடற்பயிற்சி நிகழ்வு ஆகியவை நடைபெற்றன. இதனை அஞ்சல்துறையின் மத்திய மண்டல தலைவர் திருமதி டி நிர்மலா தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். உடற்பயிற்சி நன்மை குறித்து திருச்சி மாவட்ட அலுவலர் திருமதி ஓ ஞானசுகந்தி உரையாற்றினார். விழிப்புணர்வு நடைபயணத்தின் …
Read More »போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சிறப்பு கண்காட்சியை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்
சென்னை ஆவடியில் உள்ள போர் வாகனங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அதன் பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு கண்காட்சியை 2025 ஜனவரி 20 அன்று நடத்தியது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத் தொழில்நுட்பங்கள் குறித்து பள்ளி மாணவர்கள் அறிந்துகொள்ளவும், அதன் தயாரிப்புகளை கண்டுகளிக்கவும் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. போர் வாகனங்களின் பயன்பாடுகள் குறித்த செயல் …
Read More »மெட்ராஸ் ஏற்றுமதி மண்டலம் – சிறப்பு பொருளாதார மண்டலம் தொழில் துறைக்கான ஒப்புதல் குழு ரூ.711.8 கோடி மதிப்பிலான 17 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது
புதிய முதலீட்டு திட்டங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம், கொள்கை முன்முயற்சிகள் குறித்த மெட்ராஸ் ஏற்றுமதி மண்டலம் – சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கூட்டம் அதன் மேம்பாட்டு ஆணையர் திரு அலெக்ஸ் பால் மேனன் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்வு வேலைவாய்ப்பு நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும், கணிசமான அளவில் தொழில்துறை முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியை எடுத்துக்காட்டியது. முக்கிய ஒப்புதல்கள் & முதலீடுகள் இந்தக் கூட்டத்தில், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் உற்பத்தி, சரக்கு போக்குவரத்து மற்றும் சேவைத் துறைகளில் உள்ள ஏற்றுமதி சார்ந்த பிரிவுகளை உள்ளடக்கிய 17 முன்மொழிவுகள் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டன. சிறப்பு பொருளாதார மண்டலத்தில் …
Read More »180 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான புவி காந்த வானியல் ஆய்வகத்தின் தரவுத் தொகுப்புகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக கொலாபா ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது
இந்திய புவிகாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் கொலாபா ஆராய்ச்சி மையத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர் திறந்து வைத்தார். இந்நி்கழ்ச்சியில் பேசிய அவர், பழங்காலத்து கருவிகளுடன் புவி காந்த தரவுகளை இந்த கொலாபா ஆய்வகம் ஆவணப்படுத்தி உள்ளதை வரலாற்று ரீதியாக அவர் எடுத்துத்தார். மேலும் இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக புவி காந்த புயல்களின் செயல்பாடுகளை பதிவு செய்திருப்பதோடு இந்தியாவின் அறிவியல் ஆய்வின் ஒரு …
Read More »இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தி்ன் 3-வது சர்வதேச மாநாட்டில் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் உரை
புதுதில்லியில் நடைபெற்ற இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நீடித்த சுற்றுவரிசை குறித்த 3-வது சர்வதேச மாநாட்டில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் உரையாற்றினார். ‘இயற்கை முறையில் மறுசுழற்சி’ என்ற கருபொருளில் நடைபெற்ற இந்த மாநாடு, வாகன உற்பத்தித் துறையைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்களை ஒன்றிணைத்து நிலையான வளர்ச்சி, சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த அம்சங்களை விரிவாக விவாதித்தது. பயணியர் வாகன …
Read More »தேசிய மாணவர் படையினர் இந்தியாவின் சொத்துக்கள், அவர்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவின் பார்வையை நனவாக்க முயற்சிக்க வேண்டும்: என்.சி.சி குடியரசு தின முகாம் 2025-ல் பாதுகாப்பு அமைச்சர்
பிரதமர் திரு நரேந்திர மோடியின் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்க கடுமையாகப் பாடுபட வேண்டும் என்று தேசிய மாணவர் படையினரை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று தில்லி கண்டோன்மெண்டில் நடைபெற்ற என்.சி.சி குடியரசு தின முகாமில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர், தேசிய மாணவர் படையினர் அவர்கள் சேவையாற்றும் துறைகளுக்கு இடையே, என்.சி.சி அவர்களுக்கு கற்றுக்கொடுத்த ‘தலைமைத்துவம்’, ‘ஒழுக்கம்’, ‘லட்சியம்’,’தேசபக்தி’ …
Read More »உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் வெண்மைப் பொருட்களுக்கான ரூ.3,516 கோடி முதலீட்டுடன் 24 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன
மூன்றாம் சுற்றில் மொத்தம் 24 நிறுவனங்கள் ரூ.3,516 கோடி அளவிற்கு முதலீடு செய்ய உள்ளதையடுத்து, உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் குளிர்சாதனக் கருவிகள், எல்.ஈ.டி விளக்குகள் போன்ற வெண்மைப் பொருட்கள் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இதற்கென தயாரிக்கப்பட்ட பட்டியலில் 3-வது சுற்றில் மொத்தம் 38 நிறுவனங்களிடமிருந்த ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களின் பரிசீலனைக்குப் பிறகு 18 புதிய …
Read More »
Matribhumi Samachar Tamil