Sunday, January 25 2026 | 11:46:41 AM
Breaking News

Matribhumi Samachar

ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (i), 2024-ன் இறுதி முடிவுகள்: மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளுக்கான தேர்வு (I), 2024 மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் சேவைகளுக்காக மத்திய தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட நேர்காணல்களின் முடிவுகள் அடிப்படையில் இறுதியாக தகுதி பெற்ற 590 (470 +120) விண்ணப்பதாரர்களின் பட்டியல் கீழ் வரும் பயிற்சிகளில் சேர்வதற்கு தகுதி அடிப்படையில்  வெளியிடப்பட்டுள்ளன. (i) ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை, 121-வது குறுகிய கால சேவைகளுக்கான பயிற்சி வகுப்பு (ஆண்கள்) …

Read More »

பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் 2024-ம் ஆண்டு முக்கிய செயல்பாடுகள்

இந்தியாவில் பழங்குடியினரின் (எஸ்டி) எண்ணிக்கை 10.42 மில்லியன் ஆகும். இது மொத்த மக்கள் தொகையில் 8.6 சதவீதமாக உள்ளது. 705 க்கும் மேற்பட்ட தனித்துவமான பழங்குடியினக் குழுக்களாக நாட்டின் தொலைதூர பகுதிகளில் வசிக்கின்றனர். இந்த சமூகங்களுக்கு ஆதரவளிக்க சமூக பொருளாதார அதிகாரமளித்தல், நிலையான வளர்ச்சி, அவர்களின் துடிப்பான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பல நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் வாழ்க்கை நிலையை மேம்படுத்துதல், கல்வியை மேம்படுத்துதல், பழங்குடி மக்களுக்கு …

Read More »

பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் 2024-ம் ஆண்டு முக்கிய செயல்பாடுகள்

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் எண்ணெய், இயற்கை எரிவாயு ஆய்வு, உற்பத்தி, சுத்திகரிப்பு, விநியோகம், சந்தைப்படுத்துதல், இறக்குமதி, ஏற்றுமதி ஆகிய  நடவடிக்கைகளை கவனித்து வருகிறது. நமது பொருளாதாரத்திற்கு எண்ணெயும் எரிவாயுவும் முக்கியமான இறக்குமதி பொருட்களாக இருப்பதால், எரிசக்தி அணுகல், எரிசக்தி திறன், எரிசக்தி நிலைத்தன்மை, எரிசக்தி பாதுகாப்பு போன்றவற்றுக்காக  அமைச்சகத்தால் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் அமைச்சகம் மேற்கொண்ட முன்முயற்சிகள், திட்டங்கள், செயல்பாடுகள், சாதனைகள் போன்றவற்றில் முக்கியமான சில  பின்வருமாறு: •    பிரதமரின் இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தின் கீழ் 10.33 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன •    …

Read More »

பாஷினி மென்பொருளுடன் கூடிய அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இணையதளம் தற்போது அட்டவணைப்படுத்தப்பட்ட 22 மொழிகளில் செயல்படுகிறது

புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் இணையதளத்தில் பன்மொழி செயல்பாட்டை மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து விவகாரங்களுக்கும் தீர்வு காணும் வகையில் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த இணையதளம் செயல்படுகிறது. இதில் அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் காணலாம். முக்கிய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் …

Read More »

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, புதுதில்லியில் சிபிஐ உருவாக்கிய பாரத்போல் இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) உருவாக்கிய பாரத்போல் இணையதளத்தை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று (07.01.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது, விருது பெற்ற 35 சிபிஐ அதிகாரிகளுக்கு காவல்துறை பதக்கங்களையும் திரு அமித் ஷா வழங்கினார், அவர்களுக்கு சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கம், புலனாய்வில் சிறந்து விளங்கியதற்கான உள்துறை அமைச்சரின் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மத்திய …

Read More »

நாட்டில் சுவாச நோய்களின் தற்போதைய நிலைமை மற்றும் அந்நோய்களை எதிர்கொள்வதற்கான பொது சுகாதார நடவடிக்கைகளின் நிலை குறித்து மத்திய சுகாதார செயலாளர் ஆய்வு

மத்திய சுகாதார செயலாளர் திருமிகு புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா,நேற்று (ஜனவரி 06, 2025) மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் மெய்நிகர் முறையில் ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இந்தியாவில் சுவாச நோய்களின் தற்போதைய நிலைமை குறித்தும் சீனாவில் ஹெச்.எம்.பி.வி பாதிப்புகள் அதிகரிப்பதாக வெளிவரும் ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து அத்தகைய பாதிப்புகள் தொடர்பான நம் நாட்டின் நிலை மற்றும் அவற்றின் நிர்வாகத்திற்கான பொது சுகாதார நடவடிக்கைகள்  குறித்தும் கூட்டத்தின் போது ஆய்வு செய்யப்பட்டது. சுகாதார …

Read More »

8 வது இண்டஸ்ஃபுட் 2025 ஐ மத்திய உணவு பதனப்படுத்தல் தொழில்கள் அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

மத்திய உணவு பதனப்படுத்தல் தொழில்கள் அமைச்சர் திரு சிராக் பாஸ்வான், கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம் புத் நகரில் உள்ள இந்தியா எக்ஸ்போசிஷன் மார்ட் லிமிடெட் நிறுவனத்தில் 8 வது இண்டஸ்ஃபுட் 2025 ஐ, 2025  நாளை (ஜனவரி 8)  தொடங்கி வைக்கிறார்.  இண்டஸ்ஃபுட் என்பது ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசியாவின் முதன்மையான உணவு மற்றும் பானங்களுக்கான வர்த்தக கண்காட்சி ஆகும். இது வர்த்தகத் துறையின் ஆதரவுடன் இந்திய வர்த்தக மேம்பாட்டு குழுமத்தால் ஏற்பாடு …

Read More »

குயெர்ன்சி நகரில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் பேரவைத் தலைவர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள் மாநாட்டின் நிலைக்குழு கூட்டத்திற்கு மக்களவைத் தலைவர் தலைமை வகிக்கிறார்

மக்களவைத் தலைவர்   திரு ஓம் பிர்லா 2025 ஜனவரி 07 முதல் 11-ம் தேதி வரை இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, குயெர்ன்சி ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் சபாநாயகர் ரைட் ஹானரபிள் சர் லிண்ட்சே ஹோய்ல் அழைப்பின் பேரில் திரு பிர்லா 2025 ஜனவரி 07 முதல் 09 வரை இங்கிலாந்து நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ரைட் ஹானரபிள் சர் …

Read More »

‘தனிநபர்களின் கண்ணியமும் சுதந்திரமும்- கையால் மனிதக் கழிவுகளை அகற்றுபவர்களின் உரிமைகள்’ தலைப்பில் விவாதம் நடந்தது

தேசிய மனித உரிமைகள் ஆணையம், புதுதில்லியில் உள்ள அதன் வளாகத்தில் ‘தனிநபர்களின் கண்ணியமும்  சுதந்திரமும் – கையால் கழிவுகளை அகற்றுபவர்களின் உரிமைகள்’ என்ற தலைப்பில் வெளிப்படையான விவாத நிகழ்ச்சியை நடத்தியது. ஆணையத்தின் உறுப்பினர்கள் திருமதி விஜயபாரதி சயானி மற்றும் நீதியரசர் (டாக்டர்) பித்யுத் ரஞ்சன் சாரங்கி, பொதுச் செயலாளர் திரு பாரத் லால் மற்றும் பிற உயர் அதிகாரிகள் முன்னிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி திரு வி ராமசுப்பிரமணியன் தலைமையில் இந்த …

Read More »

சென்னை ஐஐடி, ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடத்தை தொடங்கியுள்ளது

  சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், இந்திய ஆராய்ச்சி மற்றும் தொழில்துறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடத்தைத் தொடங்கியுள்ளது. மேம்பட்ட வசதிகளுடன் கூடிய இந்த ஆராய்ச்சிக் கூடம், சென்னை ஐஐடி மற்றும் நாட்டின் ஆராய்ச்சி– தொழில்நுட்பத் திறன்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சென்னை ஐஐடி -ல் இருந்து 36 கி.மீ. தொலைவில், தையூரில் அமைக்கப்பட்டுள்ள ‘டிஸ்கவரி’ செயற்கைக்கோள் வளாகத்தில் இந்த அதிநவீன ஆராய்ச்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியத் துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள், கடல்சார் பொறியியல் போன்றவற்றில் உள்ள சவாலான பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் சிறப்பு வசதிகள் …

Read More »