Thursday, March 26 2026 | 07:58:32 PM
Breaking News

Matribhumi Samachar

என்ஐடிடி குளோபல் நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

இன்று நடைபெற்ற என்ஐடிடி குளோபல் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 2025- ல் உலகம் முழுவதிலுமிருந்து 1,500 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் டாடா குழுமத்தின் தலைவர் டாக்டர். என்.சந்திரசேகரன்,  தமிழக அரசின் ஐடி மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இந்நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில், தற்போதைய மாணவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், நிறுவனத்தின் தாக்கத்தை மேம்படுத்துவதற்குமான முன்முயற்சிகள் …

Read More »

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்ட மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது மத்திய சமூக நீதி, அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் திரு விரேந்திர குமார்

மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மண்டல மையத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று மையத்தை மத்திய சமூக நீதி, அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் திரு விரேந்திர குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை இந்த நிகழ்ச்சி பிரதிபலிப்பதாக கூறினார். அது மட்டுமின்றி, உயர்தர சேவைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கான நமது முயற்சிகளை வலுப்படுத்துகிறது என …

Read More »

மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வு துறை பிரதிநிதிகள், பீகாரில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து ஆய்வு

மத்திய அரசின்  நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையின் செயலாளர் திரு  வி. ஸ்ரீனிவாஸ் தலைமையிலான  மூத்த அதிகாரிகள்  குழு, பீகார் பொது மக்கள்  குறைகளைத் தீர்ப்பதற்கான பீகார் உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவதைப் பற்றி  தெரிந்துகொள்வதற்காக  அந்த மாநிலத்துக்கு  ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டது. குழுவில் கூடுதல் செயலாளர் திரு  புனித் யாதவ், இணைச் செயலாளர் திருமதி. சரிதா சவுகான் உள்ளிட்டோர் இடம் …

Read More »

அஜ்மீரில் உள்ள க்வாஜா மொய்னுதீன் சிஷ்டியில் பிரதமர் சார்பாக மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு புனித சால்வை வழங்கினார்

சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, இன்று அஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஷ்டி புனித ஸ்தலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சார்பாக புனித சால்வையை வழங்கினார். நல்லிணக்கம், ஆன்மிகம் மற்றும் பக்தி ஆகியவற்றைக் குறிக்கும் நிகழ்வான சிறந்த சூஃபி துறவியை நினைவுகூரும் ஆண்டு உர்ஸ் என வழங்கப்படுகிறது. இந்தப் புனிதமான விளக்கக்காட்சியுடன் இணைந்து, தர்காவிற்கு வருகை தரும் யாத்ரீகர்களின் அனுபவத்தையும் வசதியையும் …

Read More »

என்டிஎம்சி-யின் ‘தேர்வு வீரர்கள்’ முன்முயற்சி- மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் மாணவர்களுடன் கலந்துரையாடினார்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் பரீட்சைக்கு பயமேன் என்ற புத்தகத்தால் ஈர்க்கப்பட்டு, புதுதில்லி முனிசிபல் கவுன்சில் (NDMC- என்எம்டிசி) நடத்திய தேர்வு வீரர்கள் நிகழ்ச்சியில் மத்திய தகவல்  ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்றார். இந்த முயற்சி மாணவர்களிடையே நேர்மறையான நம்பிக்கையையும், படைப்பாற்றலையும் உருவாக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டது. இதனால் அவர்கள் அமைதியான, சீரான மனநிலையுடன் தேர்வுகளை அணுக முடியும். சுமார் 4,000 மாணவர்கள் பிரதமரின் புத்தகத்தின் செய்திகளால் ஈர்க்கப்பட்டு …

Read More »

தில்லியில் புதிதாக கட்டப்பட்ட பணிபுரியும் பெண்கள் விடுதியைத் திறந்து வைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி) உருவாக்கிய புதிதாக கட்டப்பட்ட பணிபுரியும் பெண்கள் விடுதித் தொகுதியான சுஷ்மா பவனை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார். புதுதில்லி மோதி பாக்கில் அதிநவீன கால்நடை மருத்துவமனையையும் காசொலி மூலம் அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தில்லி துணைநிலை ஆளுநர் திரு. வி.கே. சக்சேனா, புதுதில்லி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. பன்சூரி ஸ்வராஜ் உட்பட பலர் கலந்து …

Read More »

டிஜிட்டல் வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்தும் ஓஎன்டிசி

“ஓஎன்டிசி, சிறு வணிகங்களை மேம்படுத்துவதற்கும் இ-காமர்ஸில் புரட்சியை ஏற்படுத்துவதற்கும் பங்களித்துள்ளது. இதனால் வளர்ச்சி, செழிப்பை மேலும் அதிகரிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.” – பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம்: டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த கட்டமைப்பு (ONDC) என்பது டிஜிட்டல் வர்த்தகத்தை ஜனநாயகமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் தொழில் – உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (DPIIT) முயற்சியாகும். இது ஏப்ரல் 2022-ல் தொடங்கப்பட்டது. ஓஎன்டிசி என்பது டிஜிட்டல் அல்லது மின்னணு …

Read More »

2024-ம் ஆண்டில் நிலக்கரித் துறை இதுவரை இல்லாத அதிகபட்ச உற்பத்தி மற்றும் விநியோகத்தை எட்டியுள்ளது

நிலக்கரி அமைச்சகம் 2024 காலண்டர் ஆண்டிற்கான நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் மிகச் சிறப்பான  முன்னேற்றத்தைப் பதிவுசெய்துள்ளது. எரிசக்தி பாதுகாப்பை அடைவதில் அதன் அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதுடன், தற்சார்பு  இந்தியா பார்வைக்கும் உதவியுள்ளது. 2024 ஆம் ஆண்டில், நிலக்கரி உற்பத்தி 1,039.59 மில்லியன் டன்னாக   (தற்காலிகமானது) இருந்தது. இது முன்பு இல்லாத அளவுக்கு அதிகமாகும்.  இது முந்தைய ஆண்டின் மொத்த 969.07 மில்லியன் டன்னுடன்  ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க 7.28% வளர்ச்சியைக் குறிக்கிறது. …

Read More »

பிரதமர் திரு நரேந்திர மோடி கிராமப்புற பாரதப் பெருவிழா 2025- ஐ தொடங்கி வைத்தார்

புதுதில்லி பாரத மண்டபத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கிராமப்புற பாரத மஹோத்சவ் 2025 என்னும் பெருவிழாவைத் தொடங்கி வைத்தார். வளர்ச்சியடைந்த பாரதம் 2047- க்கு ஒரு நெகிழ்திறன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குவது இந்தப் பெருவிழாவின்  கருப்பொருளாகும். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், கலந்துகொண்டுள்ள அனைவருக்கும் 2025 புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமப்புற பாரதப்  பெருவிழா என்ற பிரம்மாண்டமான அமைப்பு, இந்தியாவின் வளர்ச்சிப் …

Read More »

தில்லியில் நாளை ரூ. 12,200 கோடிக்கு அதிக மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

தில்லியில் உள்ள ரோகினியில் அதிநவீன மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான  அடிக்கல்லை  நாட்டுகிறார் பிரதமர் 12,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி ஜனவரி 5 ஆம் தேதி மதியம் சுமார் 12:15 மணிக்கு தில்லியில் தொடக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டுவார். சாஹிபாபாத் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்திலிருந்து புதிய அசோக் நகர் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்திற்கு காலை 11 மணிக்கு நமோ பாரத் …

Read More »