தொழில்துறையின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்த தீர்க்கமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. கார்பன் உமிழ்வைக் குறைக்கவும், நிகர பூஜ்ஜிய இலக்கை நோக்கி முன்னேறவும் எஃகு தொழில்துறைக்கு உதவுவதற்காக ரூ.15,000 கோடி மதிப்பில் ‘பசுமை எஃகு இயக்கத்தை’ எஃகு அமைச்சகம் உருவாக்கி வருகிறது. பசுமை எஃகுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதற்கான ஊக்கத்தொகை மற்றும் அரசு நிறுவனங்கள் கட்டாயமாக பசுமை எஃகு வாங்க வேண்டும் ஆகியவை இந்த இயக்கத்தில் அடங்கும். புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி …
Read More »பணிபுரிவதற்கு சிறந்த இடமாக செயில் நிறுவனத்திற்கு இரண்டாவது முறையாகவும் சான்றளிக்கப்பட்டுள்ளது
இந்திய எஃகு நிறுவனம் லிமிடெட்டுக்கு 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலத்திற்கு பணிபுரிவதற்கு ஏற்ற சிறந்த இடத்திற்கான சான்றிதழைப் பெற்றுள்ளது. இந்த சான்றிதழ் இந்தியாவில் உள்ள பணிபுரிவதற்கு சிறந்த இடம் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய எஃகு நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக கிடைத்துள்ள இரண்டாவது சான்றிதழ் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2023-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலகட்டத்திற்கு இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக …
Read More »இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தமும் வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகி வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன
இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தமும் வர்த்தக ஒப்பந்தமும் (இந்தியா-ஆஸ்திரேலியா ECTA) இரண்டு ஆண்டு குறிப்பிடத்தக்க வெற்றியை நிறைவு செய்துள்ளது, பரஸ்பர வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, இரு பொருளாதாரங்களின் பரஸ்பர திறனையும் இது வெளிப்படுத்துகிறது. இந்தியா-ஆஸ்திரேலிய இசிடிஏ வர்த்தக உறவுகளை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. இரு நாடுகளிலும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், வணிகங்கள், வேலைவாய்ப்புகளுக்கு புதிய வாய்ப்புகளை இந்த ஒப்பந்தம் உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் அவர்களின் பொருளாதார ஒத்துழைப்பின் அடித்தளத்தை இது வலுப்படுத்துகிறது. …
Read More »ஈஸ்டர்ன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 97-வது ஆண்டுக் கூட்டம் நடைபெற்றது
எஃகு அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆர்என்ஐஎல்-ன் துணை நிறுவனமான ஈஸ்டர்ன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் (EIL) பொதுத் துறை நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM) -2024 டிசம்பர் 28 அன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் உள்ள நிர்வாகக் கட்டிடத்திலிருந்து இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு ஆர்ஐஎன்எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) திரு அஜித் குமார் சக்சேனா தலைமை வகித்தார். நாட்டின் பல்வேறு …
Read More »குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பு: 2023-24
கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்கு பின்னர் இயல்பு நிலைமை திரும்பியுள்ள நிலையில், குடும்ப நுகர்வு செலவினங்கள் குறித்து கணக்கெடுப்புகளை நடத்த மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் முடிவு செய்தது. இதன் அடிப்படையில் முதல் கணக்கெடுப்பு 2022 ஆகஸ்ட் மாதம் முதல் 2023 ஜூலை மாதம் வரை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2-வது கணக்கெடுப்பு 2023 ஆகஸ்ட் மாதம் முதல் …
Read More »மீனாட்சி நிலக்கரி சுரங்கத்திற்கான உரிமை ஒப்படைப்பு ஆணையை நிலக்கரி அமைச்சகம் வழங்கியது
நிலக்கரி அமைச்சகத்தின் நியமன ஆணையம், மீனாட்சி நிலக்கரி சுரங்கத்திற்கான உரிமை ஒப்படைப்பு ஆணை ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு இன்று வழங்கியது. இது நவம்பர் 22, 2024 அன்று நிலக்கரி சுரங்க மேம்பாடு மற்றும் உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்தானதன் தொடர்ச்சியாகும். மீனாட்சி நிலக்கரி சுரங்கம் அதன் உச்ச மதிப்பிடப்பட்ட திறன் அடிப்படையில் ரூ.1,152.84 கோடி ஆண்டு வருவாயை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.1,800 கோடி மூலதன முதலீட்டுடன், இந்தச் சுரங்கம் நாட்டின் நிலக்கரி உற்பத்தியைக் …
Read More »ஒசாமு சுசூகி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
உலக வாகனத் தொழில்துறையில் புகழ்பெற்ற ஒசாமு சுசுகி மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ஒசாமு சுசூகியின் தொலைநோக்குப் பார்வை உலகளாவிய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அவரது தலைமையின் கீழ், சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் உலகளாவிய அதிகார மையமாக உருவெடுத்தது. சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு புதுமை, தொழில் விரிவாக்கத்தை மேற்கொண்டது. இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் …
Read More »நுகர்வோர் விவகாரங்கள் துறையின் 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்
நுகர்வோர் விவகாரங்கள் துறையானது தனது விலை கண்காணிப்பு பிரிவு மூலம் 38 உணவுப் பொருட்களின் விலையை கண்காணித்து வருகிறது .பொருட்களின் விலையை கட்டுப்படுத்த கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு போன்றவற்றின் சில்லறை விற்பனை மூலம் நுகர்வோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அன்றாட விலைகளை கண்காணித்து பொருட்களின் விலையை நிலையானதாக இருக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 22 அத்தியாவசியப் பொருட்களின் அன்றாட சில்லறை மற்றும் மொத்த …
Read More »2024 ஆம் ஆண்டில் வர்த்தகத் துறையின் செயல்பாடுகள்
2024-ம் ஆண்டில் வர்த்தகத் துறையின் முக்கிய சாதனைகள் பின்வருமாறு: சுதந்திரமான வர்த்தக உடன்படிக்கை இந்தியாவும், ஐரோப்பிய வர்த்தக சங்கமும், வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்தில் 2024 ஆண்டு மார்ச் 10-ம் தேதி கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, லிச்சென்ஸ்டீன் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அந்நிய நேரடி முதலீடுகள் செய்யப்படும். இதன் மூலம் 1 மில்லியன் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் “இந்தியாவில் உற்பத்தி …
Read More »அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பாப்கார்ன் மீதான ஜி.எஸ்.டி விகிதம்
கேள்வி 1. பாப்கார்ன் மீதான ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டுள்ளதா? பதில்: சமீபத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பாப்கார்ன் மீதான ஜி.எஸ்.டி விகிதம் உயர்த்தப்படவில்லை. உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் கலந்த பாப்கார்னுக்கான ஜி.எஸ்.டி விகிதத்தை தெளிவுபடுத்துமாறு உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து கோரிக்கை பெறப்பட்டது. இந்த விவகாரம் 55-வது ஜி.எஸ்.டி கவுன்சிளின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, அதை தெளிவுபடுத்த கவுன்சில் பரிந்துரைத்தது. கேள்வி 2. பல்வேறு வகையான பாப்கார்னின் மாறுபட்ட வகைகளுக்கு என்ன அடிப்படை? …
Read More »
Matribhumi Samachar Tamil