ஓய்வூதிய சேவைகளை மேம்படுத்துவதற்கான ஒரு மைல்கல் நடவடிக்கையாக, தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் 1995-ன் கீழ் புதிய மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்குதல் முறையின் முழு அளவிலான கட்டமைப்புப் பணிகளை தொழிலாளர் சேம நல நிதி நிறுவனம் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவு செய்தது. 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 68 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு 1570 கோடி ரூபாய் அளவிற்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் செலுத்தும் முறையின் முதல் சோதனை அடிப்படையிலான செயல்பாடுகள் 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஜம்மு, ஸ்ரீநகர் மண்டல அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 49,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய தொகையாக சுமார் 11 கோடி ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட சோதனை அடிப்படையிலான செயல்பாடுகள் 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 24 மண்டல அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 9.3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு சுமார் 213 கோடி ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை குறித்து அறிவிப்பு வெளியிட்ட மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, ” தொழிலாளர் சேம நல நிதி நிறுவனத்தின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் முறையை முழு அளவில் செயல்படுத்துவது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும் என்று குறிப்பிட்டார். இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதிய தொகையை நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும், அனைத்து வங்கிகிளையிலிருந்தும் தடையின்றி பெற அதிகாரம் அளிக்கிறது.
Read More »சொத்துக்களை மின்னணு ஏலம் விடுவதற்கான புதுப்பிக்கப்பட்ட ‘பாங்க்நெட்’ மின்னணு ஏல போர்ட்டலை நிதிச் சேவைகள் துறை செயலாளர் தொடங்கி வைத்தார்
நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை செயலாளர் திரு எம். நாகராஜு, புதுதில்லியில் இன்று புதுப்பிக்கப்பட்ட மின்னணு ஏல இணையதளமான ‘பாங்க்நெட்’ -ஐ தொடங்கி வைத்தார். இந்தத் தொடக்க விழாவில், கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களின் தலைவர்கள், கடன் வசூல் தீர்ப்பாயங்களின் தலைமை அதிகாரிகள், பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள், இந்திய வங்கி சங்கத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி, பொதுத்துறை வங்கிகளின் மூத்த நிர்வாகிகள் மற்றும் நிதிச் சேவைகள் துறையின் மூத்த அதிகாரிகள் …
Read More »வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, 2023-ல் திருத்தம்
வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை உருவாக்குவது அல்லது திருத்துவது தொடர்பாக இறக்குமதியாளர்கள் / ஏற்றுமதியாளர்கள் / தொழில்துறை வல்லுநர்கள் உட்பட சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள், ஆலோசனைகள், பரிந்துரைகள் பெறப்படும். பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து வெளிநாட்டு வர்த்தக கொள்கையை வகுத்து சட்ட முன்வடிவை உருவாக்கும் வகையில் பத்தி 1.07ஏ மற்றும் 1.07பி ஆகியவற்றைச் சேர்க்க வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, 2023-ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் …
Read More »பிஎஸ்என்எல், ஏஐஎம்ஓ இணைந்து ஸ்மார்ட்ஃபோன் சேவையில் முதல் திறன் பயிற்சித்திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் (பிஎஸ்என்எல்) நிறுவனமானது, அனைத்து இந்திய உற்பத்தியாளர்களின் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இளைஞர்களை சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வலுவூட்டுவதற்கும், தொலைத்தொடர்பு தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்றும் சேவைகள் துறையில் தொழில் முனைவு மற்றும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. சுமார் 20 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் சேவை பயிற்சி குறித்த 3 நாள் பயிற்சித் திட்டத்தின் தொடக்க விழாவை பிஎஸ்என்எல் …
Read More »உலகளாவிய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 3.9 சதவீதமாக உள்ளது
2023-ம் ஆண்டில், உலகின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் இந்தியா 6 வது பெரிய நாடாக உள்ளது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி மற்றும் ஆயத்த ஆடையின் பங்கு 2023-24 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவில் 8.21% ஆக உள்ளது. உலக ஜவுளி மற்றும் ஆடை வர்த்தகத்தில் நமது நாட்டின் பங்கு 3.9 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் முக்கிய ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி இலக்கு நாடுகளாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. மொத்த ஜவுளி மற்றும் …
Read More »எஃகு உற்பத்தியில் தரத்தை உறுதி செய்ய தரக்கட்டுப்பாடு ஆணை
நாட்டில் எஃகு உற்பத்தியின் தரத்தை உறுதி செய்ய மத்திய அரசு அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டில் நுகரப்படும் எஃகுக்கான தர நிலைகளை உருவாக்கவும், அவற்றை தரக் கட்டுப்பாட்டு உத்தரவில் (QCO) சேர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தரப்படுத்தல் என்பது எஃகு உற்பத்திக்கான சீரான நடைமுறைகள், சோதனை முறைகள், உற்பத்தி செயல்முறைகள் ஆகியவற்றை நிறுவுவதை உள்ளடக்கியதாகும். இது வெவ்வேறு உற்பத்தியாளர்களிடையே எஃகின் தரத்தில் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. அதற்கு எஃகு …
Read More »இந்திய பொருளாதாரத்திற்கு அதிகாரமளித்தல்
2023 அக்டோபர் மாதம் முதல் 2024 செப்டம்பர் வரையிலான குறிப்பு காலத்தை உள்ளடக்கிய சட்டப்படி இணைக்கப்பெறாத தொழில் நிறுவனங்களின் ஆண்டுக் கணக்கெடுப்பு முடிவுகளை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த விரிவான கணக்கெடுப்பு வேளாண்மை சாராத இணைப்புக்கு உட்படாத தொழில் துறையின் பொருளாதார மற்றும் செயல்பாட்டு நடவடிக்கையை எடுத்துக் காட்டுகிறது. வேலைவாய்ப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி, இந்தியாவின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார நிலப்பரப்பு ஆகியவற்றில் அதன் முக்கியமான பங்களிப்பை …
Read More »ஃபேம்-2 திட்டத்தின் கீழ் 16.15 லட்சம் மின்சார வாகனங்களுக்கு ஊக்கத்தொகை
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்து வசதிகளை குறைந்த செலவில் வழங்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தத் திசையில்,மின்சார வாகனங்களுக்கான தேவை அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம் மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்தியாவில் ஃபேம் இந்தியா (FAME India) திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்துக்கு முதல் கட்டமாக 2015 ஏப்ரல் 1 முதல் தொடங்கி 2 ஆண்டு காலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் …
Read More »மொத்த விற்பனை விலை குறியீட்டு எண்ணின் தற்போதைய தொடர் திருத்தத்துக்கான பணிக்குழு அமைப்பு
2011-12 ஆம் ஆண்டு அடிப்படை என்பதில் இருந்து 2022-23-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாக மொத்த விற்பனை விலை குறியீட்டு எண்ணின் தற்போதைய தொடர் திருத்தத்துக்கான பணிக்குழுவை அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. கீழ்க்கண்டவாறு பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது: 1) பேராசிரியர் ரமேஷ் சந்த், உறுப்பினர், நிதி ஆயோக், குழுத் தலைவர் 2) கூடுதல் தலைமை இயக்குநர், கள நடவடிக்கைப் பிரிவு, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்- உறுப்பினர் 3) …
Read More »டிசம்பர் மாதத்தில் தனிப்பட்ட மற்றும் வணிக சுரங்கங்களின் மாதாந்திர உற்பத்தி மற்றும் விநியோக சாதனை
நாட்டின் நிலக்கரி உற்பத்தி மற்றும் நிலக்கரி விநியோகத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை அறிவிப்பதில் நிலக்கரி அமைச்சகம் மகிழ்ச்சி அடைகிறது. 2024 டிசம்பர் மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் நிலக்கரி உற்பத்தியில் கணிசமான அதிகரிப்பு, தனிப்பட்ட மற்றும் வணிக சுரங்கங்களிலிருந்து விநியோகம் செய்யப்படுவதைக் காட்டுகின்றன, இது இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது. 2024 ஏப்ரல் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31 வரை மொத்த நிலக்கரி உற்பத்தி 131.05 மெட்ரிக் டன்னை எட்டியது. இது …
Read More »
Matribhumi Samachar Tamil