புதுதில்லி, ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்), அகமதுநகர் (மகாராஷ்டிரா) , ஹைதராபாத் (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய நான்கு நகரங்களில் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தனது அதிகாரப்பூர்வ முகமை மூலம் வெளிப்படையான சோதனையை நடத்தியது. குரல், தரவு சேவைகளுக்கான செல்லுலார் மொபைல் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களின் சேவை தொடர்பான தரத்தை மதிப்பீடு செய்வதற்கு இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையில் பாரதி ஏர்டெல் நிறுவனம், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் போன்ற நிறுவனங்களின் செயல்திறன், சேவைகளுக்கான உரிமம் பெற்ற பகுதிகளில் பயன்படுத்தப்படும் …
Read More »நிதித்துறை செயலாளர் திரு துஹின் காந்த பாண்டே நிதி அமைச்சகத்தின் வருவாய் துறை செயலாளராக இன்று பொறுப்பேற்றார்
தற்போதைய நிதித்துறை செயலாளர் திரு துஹின் காந்த பாண்டே, நிதி அமைச்சகத்தின் வருவாய் துறையின் செயலாளராக இன்று பொறுப்பேற்றார். அமைச்சரவையின் நியமனக் குழு புதன்கிழமை திரு பாண்டேவை நிதி அமைச்சகத்தின் வருவாய் துறை செயலாளராக நியமித்தது. திரு பாண்டே தொடர்ந்து நிதித்துறை செயலாளராகவும் தொடர்வார் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, ஒடிசா கேடரின் 1987 தொகுதி இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) அதிகாரியான திரு பாண்டே, 24.10.2019 முதல் முதலீடு மற்றும் பொது …
Read More »ஸ்டார்ட்-அப் நிலைத்தன்மைக்கு டாக்டர் ஜிதேந்திர சிங் யோசனை
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனி பொறுப்பு); புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நீடித்து நிலைத்திருப்பதை உறுதி செய்ய தொழில்துறையோடு ஆரம்பக் கட்டத்திலேயே இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். புதிய கண்டுபிடிப்புகளில் பொறுப்புணர்வு மற்றும் பகிரப்பட்ட தன்மையை வளர்க்கும் கூட்டு நிதி அணுகுமுறை வேண்டும் என அவர் …
Read More »பயணிகளுக்கு பாதுகாப்பான, விரைவான, உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்குவதை ரெயில்வே நோக்கமாகக் கொண்டு நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 76% செலவிடுகிறது
நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு விரைவான, பாதுகாப்பான, உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை குறைந்த செலவில் வழங்குவது எளிதான காரியம் அல்ல. ஆனால், இந்திய ரயில்வே புவியியல், கலாச்சாரம், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ரயில்வே தனது பட்ஜெட் ஒதுக்கீட்டில் 76 சதவீதத்தை நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்கள் மற்றும் 4 நாட்களில் செலவிட்டுள்ளது. 2025-ம் ஆண்டு ஜனவரி 5 வரை இந்திய ரயில்வேயின் …
Read More »இந்தியாவின் வளர்ச்சிக்கு உணவு பதனப்படுத்தும் தொழில்துறை முக்கியமானது: சிராக் பாஸ்வான்
மத்திய உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் இன்று கிரேட்டர் நொய்டாவில் உள்ள எக்ஸ்போ மையத்தில் இண்டஸ்ஃபுட் 2025-ன் 8-வது பதிப்பைத் தொடங்கி வைத்தார். பாபா ராம்தேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். டிபிசிஐ தலைவர் திரு மோஹித் சிங்லா, அபீடா தலைவர் திரு அபிஷேக் தேவ், பிகாரம் சந்த்மாலின் நிர்வாக இயக்குநர் திரு ஆஷிஷ் அகர்வால், எவரெஸ்ட் உணவுப் பொருட்கள் நிறுவன இயக்குநர் திரு ஆகாஷ் ஷா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற …
Read More »பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் 2024-ம் ஆண்டு முக்கிய செயல்பாடுகள்
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் எண்ணெய், இயற்கை எரிவாயு ஆய்வு, உற்பத்தி, சுத்திகரிப்பு, விநியோகம், சந்தைப்படுத்துதல், இறக்குமதி, ஏற்றுமதி ஆகிய நடவடிக்கைகளை கவனித்து வருகிறது. நமது பொருளாதாரத்திற்கு எண்ணெயும் எரிவாயுவும் முக்கியமான இறக்குமதி பொருட்களாக இருப்பதால், எரிசக்தி அணுகல், எரிசக்தி திறன், எரிசக்தி நிலைத்தன்மை, எரிசக்தி பாதுகாப்பு போன்றவற்றுக்காக அமைச்சகத்தால் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் அமைச்சகம் மேற்கொண்ட முன்முயற்சிகள், திட்டங்கள், செயல்பாடுகள், சாதனைகள் போன்றவற்றில் முக்கியமான சில பின்வருமாறு: • பிரதமரின் இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தின் கீழ் 10.33 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன • …
Read More »சமையல் எண்ணெய்களுக்கான தேசிய இயக்கம் – பனை எண்ணெய் திட்டத்தின் கீழ் முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் வலியுறுத்தல்
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான், தேசிய சமையல் எண்ணெய்கள் இயக்கம் -பனை எண்ணெய் (NMEO-OP) திட்டத்தின் கீழ் உற்பத்திக்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தியுள்ளார். சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை அடைவது, இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைப்பது, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது போன்ற நாட்டின் தொலைநோக்குப் பார்வையை எட்டும் வகையில் இந்த சமையல் எண்ணெய்களுக்கான இயக்கம் செயல்படுகிறது. உள்நாட்டு சமையல் எண்ணெய் …
Read More »மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில்துறை அமைச்சர் பி.எல்.ஐ திட்டம் 1.1 ஐ அறிமுகப்படுத்தி, விண்ணப்ப சாளரத்தை நாளை திறக்கிறார்
மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் திரு எச்.டி. குமாரசாமி, 6 ஜனவரி 2025 அன்று புது தில்லியின் மௌலானா ஆசாத் சாலையில் உள்ள விஞ்ஞான் பவனில் எஃகுத் தொழிலுக்கான ‘பிஎல்ஐ திட்டம் 1.1’ ஐ அறிமுகப்படுத்தி விண்ணப்பங்களை வரவேற்கிறார். உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) என்ற கருத்து 2020- ம் ஆண்டின் உலகளாவிய முழு அடைப்பின் போது உருவாக்கப்பட்டது. இது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. …
Read More »2024-ம் ஆண்டில் நிலக்கரித் துறை இதுவரை இல்லாத அதிகபட்ச உற்பத்தி மற்றும் விநியோகத்தை எட்டியுள்ளது
நிலக்கரி அமைச்சகம் 2024 காலண்டர் ஆண்டிற்கான நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் மிகச் சிறப்பான முன்னேற்றத்தைப் பதிவுசெய்துள்ளது. எரிசக்தி பாதுகாப்பை அடைவதில் அதன் அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதுடன், தற்சார்பு இந்தியா பார்வைக்கும் உதவியுள்ளது. 2024 ஆம் ஆண்டில், நிலக்கரி உற்பத்தி 1,039.59 மில்லியன் டன்னாக (தற்காலிகமானது) இருந்தது. இது முன்பு இல்லாத அளவுக்கு அதிகமாகும். இது முந்தைய ஆண்டின் மொத்த 969.07 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க 7.28% வளர்ச்சியைக் குறிக்கிறது. …
Read More »‘ஃபரல் சகி’ முன்முயற்சியின் மூலம் பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிக்க மீரா பயந்தர் மாநகராட்சியுடன் மகளிர் தொழில்முனைவோர் தளம் கூட்டு சேர்ந்துள்ளது
மகாராஷ்டிராவின் மீரா பயந்தர் நகரில் உள்ள பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘ஃபரல் சகி’ என்ற முதன்மை முயற்சியை மீரா பயந்தர் மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. பாரம்பரிய சிற்றுண்டி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெண் தொழில்முனைவோருக்கு அவர்களின் முயற்சிகளை நிலையானதாகவும் திறம்படவும் அளவிட உதவும் விரிவான பயிற்சியையும், ஆதரவையும் இந்த திட்டம் வழங்கும். பாரம்பரிய பண்டிகைக்கால தின்பண்டங்களின் (‘ஃபரல்’) உற்பத்தி மற்றும் விற்பனையில் பெண்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களுக்கு நிரந்தர வேலை …
Read More »
Matribhumi Samachar Tamil