கூட்டுறவுத் துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்ட 4 ஆண்டுகளுக்குள் 61 சிறப்பு முன்முயற்சிகள் மூலம் கூட்டுறவு இயக்கம் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இன்று நடைபெற்ற கூட்டுறவுத் திருவிழாவில் அவர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் ராஜஸ்தானின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாநில அரசுப்பணிகளுக்குத் தேர்வு செய்யப்டப்ட 8,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். கூட்டுறவுத்துறை சார்பில் பயனாளிகளுக்கு கடன்களை …
Read More »வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர் பயிலரங்கு இன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. மத்திய அரசின் முக்கியமான முன்முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு எடுத்துரைப்பதும் பல்வேறு வளர்ச்சி முன் முயற்சிகளை ஆழமாக புரிந்து கொள்ள உதவுவதும் இந்த பயிலரங்கின் நோக்கமாகும். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் பொறுப்பு …
Read More »2025 ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான இந்தியாவில் மொத்த விலை குறியீட்டு எண்கள் (அடிப்படை ஆண்டு: 2011-12)
அகில இந்திய மொத்த விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட ஆண்டு பணவீக்க விகிதம் 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு (2024ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது) (-) 0.13%-ஆக (தற்காலிகமானது) உள்ளது. 2025 ம் ஆண்டு ஜூன் மாதத்தில், பணவீக்க விகிதம் எதிர்மறையாக உள்ளது. இந்த பணவீக்க விகிதம் முதன்மையாக உணவுப் பொருட்கள், கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்களின் உற்பத்தி, கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றின் விலைகளில் ஏற்பட்ட குறைவு காரணமாக …
Read More »பிரதமர் திரு. நரேந்திர மோடி வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார். மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கு இன்று காணொலி மூலம் 51,000க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்த இளைஞர்களுக்கு புதிய பொறுப்புகள் இன்று தொடங்குகின்றன என்று கூறினார். பல்வேறு துறைகளில் தங்கள் சேவையைத் தொடங்கிய இளைஞர்களை அவர் வாழ்த்தினார். இளைஞர்களுக்கு …
Read More »ஏழு நட்சத்திர, ஐந்து நட்சத்திர மதிப்பீடு பெற்ற சுரங்கங்களுக்கான பாராட்டு விழா நாளை நடைபெறுகிறது
சுரங்க அமைச்சகத்தின் துணை அலுவலகமான இந்திய சுரங்கப் பணியகம், 2023-24-ம் ஆண்டிற்கான நாடு தழுவிய 7 நட்சத்திர, 5 நட்சத்திர மதிப்பீடு பெற்ற சுரங்கங்களின் செயல்திறனை அங்கீகரிக்கும் ஒரு பிரமாண்டமான நிகழ்வை நடத்துகிறது. நாளை (07.07.2025 – திங்கள்கிழமை) ஜெய்ப்பூரில் நடைபெற உள்ள இந்த விழாவில், இத்துறை பிரமுகர்களும், சம்பந்தப்பட்ட தரப்பினரும் சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொள்வார்கள். மத்திய நிலக்கரி, சுரங்க அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி தலைமை …
Read More »உலக சுரங்க பேரமைப்பு கூட்டத்தில் இந்தியாவின் நிலையான சுரங்க தொலைநோக்குத் திட்டத்தை மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி எடுத்துரைத்தார்
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி ஹைதராபாத்தில் இன்று உலக சுரங்க பேரமைப்பின் இந்திய தேசிய குழு கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தேசிய மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்களை அவர் வரவேற்றார். பொறுப்பான, வெளிப்படையான, நிலையான சுரங்க நடைமுறைகளுக்கான இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் உறுதிப்படுத்தினார். 1958-ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல், உலக சுரங்க பேரமைப்பு, சுரங்கத் துறையில் ஒத்துழைப்பு, புதுமைகளை ஊக்குவிப்பதற்கான ஒரு அத்தியாவசிய உலகளாவிய தளமாக செயல்பட்டு வருவதாக …
Read More »இந்தியாவிலிருந்து 153 நாடுகள் பொம்மைகளை இறக்குமதி செய்கின்றன: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
ஒரு காலத்தில் இறக்குமதியையே பெரிதும் நம்பியிருந்த இந்தியாவின் பொம்மைத் தொழில், தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்து 153 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இன்று புதுதில்லியில் நடைபெற்ற 16வது பொம்மை வர்த்தக சர்வதேச பி2பி கண்காட்சி 2025-இல் உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இந்தக் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எடுத்துரைத்தார். நிலையான கொள்கை ஆதரவு, தரங்களை அமல்படுத்துதல் மற்றும் உள்ளூர் உற்பத்தித் தொகுப்புகளை வலுப்படுத்துதல் மூலம் இந்த மாற்றம் …
Read More »ரயில்ஒன் செயலி தொடக்கம்: அனைத்து பயணிகள் சேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு
ரயில்வே தகவல் அமைப்புகள் மையத்தின் 40-வது நிறுவன தினத்தையொட்டி புதுதில்லியில் இன்று ரயில் ஒன் என்ற புதிய செயலியை ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அறிமுகம் செய்தார். எளிதில் பயன்படுத்தக் கூடிய இந்த செயலியை ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது அனைத்து பயணிகள் சேவைகளையும் ஒருங்கிணைக்கிறது. முன்பதிவு செய்யப்படாத மற்றும் நடைமேடை டிக்கெட்டுகள் 3% தள்ளுபடியுடன் பெற்றுக்கொள்வது, …
Read More »மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2025 ஜூன் 30 முதல் ஜூலை 5 வரை ஸ்பெயின், போர்ச்சுகல், பிரேசில் நாடுகளுக்கு பயணம்
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2025 ஜூன் 30 முதல் ஜூலை 5 வரை ஸ்பெயின், போர்ச்சுகல், பிரேசில் நாடுகளுக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொள்கிறார். அவரது தலைமையில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையைச் சேர்ந்த இந்தியக் குழுவும் பயணம் மேற்கொள்கிறது. தனது பயணத்தின் ஒரு பகுதியாக, ஸ்பெயினில் உள்ள செவில்லி நகரில், ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4-வது சர்வதேச மேம்பாட்டு நிதி மாநாட்டில் கலந்து கொள்ளும் மத்திய நிதியமைச்சர், இந்தியா சார்பில் அறிக்கையை சமர்ப்பிக்கிறார் …
Read More »19-வது புள்ளியியல் தினத்தை முன்னிட்டு (ஜூன் 29, 2025) நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த பிரசுரங்கள் வெளியீடு
19-வது புள்ளியியல் தினத்தை முன்னிட்டு, இன்று (ஜூன் 29, 2025) புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) குறித்த தகவல்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது. தேசிய முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில், நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) செயல்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், தொடர்புடைய அமைச்சகங்கள்/துறைகள், ஐநா நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினருடன் கலந்தாலோசித்து, நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான தேசிய குறியீட்டுக் கட்டமைப்பை (NIF) உருவாக்கியுள்ளது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் புள்ளியியல் தினத்தன்று (அதாவது, ஜூன் 29 அன்று), புள்ளியியல் அமைச்சகம் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த முன்னேற்ற அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இதில் இந்த 2025-ம் ஆண்டு புள்ளியியல் தினத்தை முன்னிட்டு, இன்று (ஜூன் 29, 2025) புள்ளியியல் அமைச்சகம் அது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. நிலையான வளர்ச்சி இலக்குகள் தேசிய குறியீட்டுக் கட்டமைப்பு முன்னேற்ற அறிக்கை -2025 என்ற இது 17 நிலையான வளர்ச்சி இலக்குகளில் தேசிய அளவிலான முன்னேற்றத்தைக் கண்காணிப்பதில் ஒரு முக்கிய கருவியாக இருக்கும். நிலையான வளர்ச்சி இலக்குகள் பற்றிய இந்த அறிக்கைகள் பொதுமக்கள் எளிதாக அணுகக்கூடியவை. www.mospi.gov.in என்ற புள்ளியியல் அமைச்சகத்தின் இணையதளத்தில் இவை இடம்பெற்றுள்ளன.
Read More »
Matribhumi Samachar Tamil