Saturday, December 06 2025 | 01:14:31 AM
Breaking News

Business

இந்திய மின் துறைக்கான வலுவான டிஜிட்டல் அமைப்பை உருவாக்க ‘இந்திய எரிசக்தித் தொகுப்பு’ என்ற கட்டமைப்பை மின்துறை அமைச்சகம் உருவாக்குகிறது

இந்திய எரிசக்தித் துறைக்கு ஒருங்கிணைந்த, பாதுகாப்பான, டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோடி முயற்சியாக இந்தியா எரிசக்தி தொகுப்பு (IES) என்ற கட்டமைப்பை உருவாக்க ஒரு பணிக்குழுவை அமைப்பதாக மின்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் செல்கிறது. நிகர பூஜ்ஜிய உமிழ்வு உறுதிமொழிகளை நோக்கி இந்தியா முன்னேறும்போது, ​​மின் துறை பெரிய வாய்ப்புகளையும் சிக்கலான சவால்களையும் எதிர்கொள்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகனங்கள், எரிசக்தி சந்தைகளில் நுகர்வோர் பங்கேற்பு ஆகியவற்றில் விரைவான வளர்ச்சி இந்தத் துறையை மாற்றி வருகிறது. ஆனால் துண்டு துண்டான அமைப்புகள் இருப்பதும், தடையற்ற டிஜிட்டல் ஒருங்கிணைப்பு இல்லாததும் முக்கிய தடைகளாகவே உள்ளன. இவற்றை நிவர்த்தி செய்வதற்காக, மின்சார அமைச்சகம், மின் மதிப்புச் சங்கிலி முழுவதையும் நிர்வகிக்க, ஒரு தரப்படுத்தப்பட்ட, பாதுகாப்பான தளமாக, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) எனப்படும் இந்தியா எனர்ஜி ஸ்டேக் (IES -ஐஇஎஸ்) என்ற இந்திய எரிசக்தித் தொகுப்பு மூலம் இத்துறையின் டிஜிட்டல் அடித்தளத்தை வலுப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஐஇஎஸ் மூலமான நன்மைகள்: *நுகர்வோர், சொத்துக்கள் மற்றும் பரிவர்த்தனைகளுக்குத் தனித்துவமான அடையாளங்கள் * உடனடி, ஒப்புதல் அடிப்படையிலான தரவு பகிர்வு * தடையற்ற ஒருங்கிணைப்புக்கான திறந்த நடைமுறை * நுகர்வோர் அதிகாரமளித்தல், சந்தை அணுகல் மற்றும் புதுமைக்கான அம்சங்கள் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மத்திய மின்துறை அமைச்சர் திரு மனோகர் லால், நாட்டில் அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும், மின்துறையில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கவும் மின் துறையில் வலுவான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அவசரத் தேவை உள்ளது என்றார். இந்தியா எனர்ஜி ஸ்டேக் (IES – ஐஇஎஸ்) எனப்படும் இந்திய எரிசக்தித் தொகுப்பு போன்ற டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஒருங்கிணைப்பதிலும், விநியோகச் செயல்திறனை மேம்படுத்துவதிலும், வெளிப்படையான, நம்பகமான மின் சேவைகளை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார். ஐஇஎஸ் தொடர்பான முயற்சிகளை வழிநடத்த, மின்துறை அமைச்சகம் தொழில்நுட்பம், மின் துறை மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட ஒரு பிரத்யேக பணிக்குழுவை அமைத்துள்ளது.

Read More »

பயோமாஸ் (உயிரிப் பொருள் திரள்) திட்ட வழிகாட்டுதல்களில் முக்கிய திருத்தங்களை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், தேசிய பயோமாஸ் திட்டத்தின் கட்டம்-I-ன் கீழ் பயோமாஸ் எனப்படும் உயிரி எரிபொருள் திட்டத்திற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது, இது 2021–22 முதல் 2025–26 வரையிலான நிதியாண்டிற்குப் பொருந்தும். இந்தத் திருத்தங்கள் தூய்மையான எரிசக்தி தீர்வுகளை ஊக்குவித்தல், வணிகம் செய்வதை எளிதாக்குதல், இந்தியா முழுவதும் பயோமாஸ் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன. புதிய கட்டமைப்பின் கீழ், காகித கோப்புகள் மூலமான பணிகளைக் குறைத்தல், ஒப்புதல் நடைமுறைகளை எளிதாக்குதல் போன்ற பல செயல்முறைகளை அமைச்சகம் எளிமைப்படுத்தியுள்ளது. இது இந்த தொழில்துறையில் குறிப்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள தங்கள் உற்பத்தியை மேம்படுத்த உதவும். இந்த மாற்றங்கள், 2070-ம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் பரந்த இலக்கை அடையவும், பயிர்க் கழிவு மேலாண்மை தொடர்பான முன்னேற்றத்தை அடையவும் பங்களிக்கும். இந்த திருத்தத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, எஸ்சிஏடிஏ போன்ற உயர் தொழில்நுட்ப அமைப்புகளுக்குப் பதிலாக ஐஓடி அடிப்படையிலான கண்காணிப்பு தீர்வுகள் அல்லது காலாண்டு தரவு சமர்ப்பிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு செய்வதாகும். இந்த செலவு குறைந்த நடவடிக்கை, குறிப்பாக சிறு வணிக நிறுவனங்களை ஊக்குவிக்கிறது. மேலும், மத்திய நிதி உதவி (CFA) அம்சங்களின் கீழ் மானிய விநியோக வழிமுறை செயல்திறன் அடிப்படையிலானதாகவும் வெளிப்படையானதாகவும் மாற்றப்பட்டுள்ளது. முழு அளவில் திறன் வாய்ந்த முறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முழு நிதி உதவியைப் பெறும். அதே நேரத்தில் குறைந்த செயல்திறனுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு விகிதாசார அடிப்படையில் நிதி கிடைக்கும். இந்தத் திருத்தங்கள் பயோமாஸ் திட்டத்தை சீராக செயல்படுத்துவதற்கும், செயல்பாட்டுக்கு வந்த ஆலைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட நிதி உதவியை சரியான நேரத்தில் வழங்குவதற்கும் மட்டுமல்லாமல், இந்த துறை முழுவதையும் ஊக்குவிக்கும்.

Read More »

மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலமும் – சி-டாக் நிறுவனமும் இணைந்து டிஜிட்டல் திறன் இடைவெளியைக் குறைப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொள்கின்றன

மேம்பட்ட டிஜிட்டல் திறன்களுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கும், கல்வி, தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப அதற்கான தொழில்நுட்பத் திறன் அடிப்படையிலான  இடைவெளியைக் குறைப்பதற்கும் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக மெட்ராஸ் ஏற்றுமதி மேம்பாட்டு மண்டலம் – சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் சி-டாக் இணைந்து டிஜிட்டல் திறனை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. சி-டாக் நிறுவனத்தின் வலுவான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் …

Read More »

பதான்கோட்டிலிருந்து கத்தாருக்கு ரோஜா வாசனையுடன் கூடிய லிச்சிப் பழங்கள் ஏற்றுமதி

நாட்டின் தோட்டக்கலை விளைபொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசின் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், பஞ்சாப் மாநில வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து, ஜூன் 23-ம் தேதி பஞ்சாபில் உள்ள பதான்கோட்டிலிருந்து கத்தார் நாட்டின் தோஹா நகருக்கு ஒரு மெட்ரிக் டன் ரோஜா வாசனையுடன் கூடிய லிச்சிப் பழங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. …

Read More »

மத்திய பொதுப்பணித்துறையின் தொழிலாளர் திறன் பயிற்சித் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் – மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் வழங்கினார்

மத்திய பொதுப்பணித் துறை புது தில்லி சேவா நகரில் கஸ்தூர்பா நகரில் குடியிருப்பு விடுதியில்  ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர் திறன் சான்றிதழ் வழங்கும் விழாவில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் கலந்து கொண்டார். மத்திய அரசின் திறன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறன் …

Read More »

தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் மக்களை மையமாக கொண்ட ஆளுகை மூலம் நிதி மேற்பார்வை செயல்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும்; மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா

தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் மக்களை மையமாகக் கொண்ட ஆளுகை மூலம், நிதிசார் கண்காணிப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுச் செலவினங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை, பொறுப்புகள், செயல்திறன் ஆகியவற்றை உறுதிசெய்வதன் மூலம், நிதிசார் ஒழுங்குமுறை பராமரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு நிர்வாக நடைமுறைகள் இருக்க வேண்டும் என்றும், நிதிசார் கண்காணிப்பு வழிமுறைகள் பயனுள்ள வகையில் …

Read More »

இந்தியா வந்துள்ள சிலியின் கோடெல்கோ குழுவை இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் வரவேற்றது

சிலியின் அரசுக்குச் சொந்தமான தாமிரச் சுரங்க நிறுவனமான கோடெல்கோ-வின் (கார்ப்பரேசியன் நேஷனல் டெல் கோப்ரே)  பிரதிநிதிகளை இந்துஸ்தான் காப்பர் நிறுவனம்  இன்று அதிகாலை புதுதில்லியில் வரவேற்றது. சிலி காப்பர் நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்துஸ்தான் காப்பர் நிறுவன அலகுகள் மற்றும் அலுவலகங்களுக்குச் சென்று பல்வேறு சுரங்க மற்றும் செயல்பாட்டு அம்சங்களை மதிப்பிடுவார்கள். இது போன்ற மதிப்பீடு இந்தியாவில் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை ஆகும். …

Read More »

ஏப்ரல் 2025-ல் இபிஎஃப்ஓ 19.14 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது – 8.49 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO) ஏப்ரல் 2025-க்கான தற்காலிக சம்பளப் பட்டியலை வெளியிட்டுள்ளது.  இதன்படி மொத்தம் 19.14 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மார்ச் 2025-ஐ விட 31.31% அதிகமாகும். ஆண்டு பகுப்பாய்வின்படி, ஏப்ரல் 2024 உடன் ஒப்பிடும்போது நிகர சேர்க்கை 1.17% அதிகரித்துள்ளது. இது இபிஎஃப்ஓ-வின் பயனுள்ள மக்கள் தொடர்பு முயற்சிகளாலும், அதிகரித்த வேலைவாய்ப்புகளாலும் ஏற்பட்டுள்ளது.  முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு: ஏப்ரல் 2025-ல் …

Read More »

இந்தியா அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கிக்கு டிஜிட்டல் பேமெண்ட்ஸ் விருது வழங்கி நிதியமைச்சகம் கௌரவிப்பு

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும்  அஞ்சல் துறைக்கு சொந்தமான இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கி நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் நிதிசார் உள்ளடக்கத்தை விரிவுபடுத்துவதில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நிதி அமைச்சகத்தின் நிதிசார் சேவைகள் துறையால்  2024-25-ம் ஆண்டுக்கான டிஜிட்டல் பேமெண்ட்ஸ் விருது  வழங்கப்படுகிறது. இந்த விருதை மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் திரு …

Read More »

லண்டனில் நடைபெற்ற இந்திய உலகளாவிய மன்றம் 2025 இல் இந்தியாவின் உத்திசார் பொருளாதார தொலைநோக்குப் பார்வையை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் காட்சிப்படுத்தினார்

லண்டனில் இன்று நடைபெற்ற இந்திய உலகளாவிய மன்றம் 2025 இல், இந்தியாவின் உத்தி ரீதியான உலகளாவிய கண்ணோட்டத்தையும் பொருளாதாரத் தலைமையையும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் காட்சிப்படுத்தினார். மே 2025 இல் இந்திய-இங்கிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து அவரது வருகை ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. “ஒப்பந்தம் முதல் செயல் வரை: இங்கிலாந்து-இந்தியா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்” என்ற தலைப்பில் இந்திய …

Read More »