Sunday, September 06 2026 | 08:21:24 AM
Breaking News

International

இந்தியப் பிரதமரின் அமெரிக்கப் பயணத்தையொட்டி வெளியிடப்பட்ட இந்தியா – அமெரிக்கா கூட்டு அறிக்கை

அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடியை, வாஷிங்டனில் நேற்று அதிபர் டொனால்ட் ஜே.டிரம்ப் வரவேற்றார். சுதந்திரமான, சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், பன்முகத்துவத்தை மதிக்கும் இறையாண்மை மற்றும் உலகின் பெரிய ஜனநாயக நாடுகளின் தலைவர்களான, அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி ஆகியோர் இந்தியா-அமெரிக்காவின் உறுதியான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தினர். இரு நாட்டு மக்களிடையேயான நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் வலுவான ஈடுபாடுகளையும் அவர்கள் உறுதிபடுத்தினர். இரு நாடுகளிடையே “21-ம் நூற்றாண்டிற்கான ராணுவ கூட்டாண்மைக்கான வாய்ப்புகள், விரைவான வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல்”  குறித்து அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி புதிய முயற்சியைத் தொடங்கினர். ஒத்துழைப்பில் மாற்றத்தை …

Read More »

தாய்லாந்தில் நடைபெற்ற சம்வாத் நிகழ்ச்சியின் போது பிரதமர் ஆற்றிய உரை

நமோ புத்தயா! தாய்லாந்தில் நடைபெறும் இந்த சம்வாத் (விவாத உரையாடல்) பதிப்பில் உங்கள் அனைவருடனும் இணைவது பெரும் கௌரவமாகும். இந்தியா, ஜப்பான் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த பல புகழ்பெற்ற நிறுவனங்கள், தனிநபர்கள் இந்த நிகழ்வை சாத்தியமாக்க பாடுபடுகின்றனர். அவர்கள் அனைவரையும், அவர்களின் முயற்சிகளுக்காக நான் பாராட்டுகிறேன், மேலும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே, எனது நண்பர் திரு ஷின்சோ அபேவை நினைவுகூர இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். 2015-ம் ஆண்டில், சம்வாத்  பற்றிய யோசனை …

Read More »

பாரம்பரிய மருந்துகள் தர உறுதிப்பாட்டிற்கு இந்தியா – இந்தோனேசியா இடையேயான ஒத்துழைப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது- மத்திய ஆயுஷ் இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ்

பாரம்பரிய மருந்துகள் தர உறுதிப்பாட்டு பிரிவில் ஆயுஷ் அமைச்சகத்தின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையம் மற்றும் இந்தோனேசிய உணவு மற்றும் மருந்து ஆணையம் ஆகியவற்றுக்கு இடையே 2025 ஜனவரி 25-ம்  தேதி புதுதில்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தோனேசியாவின் அதிபர் திரு. பிரபோவோ சுபியாண்டோ முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்த  …

Read More »

14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்

பாரிஸில் இன்று நடைபெற்ற 14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் திரு. இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் கூட்டாக உரையாற்றினர். பாதுகாப்பு, விண்வெளி, முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, மேம்பட்ட உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, வாழ்க்கை அறிவியல், நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை முறை, உணவு மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் வகையில், இரு தரப்பிலிருந்தும் …

Read More »

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணம் குறித்த இந்தியா – பிரான்ஸ் கூட்டு அறிக்கை

பிரெஞ்சுக் குடியரசின் அதிபர் திரு. இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 10 முதல் 12 வரை  பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டார். பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய நாட்களில், பிரான்ஸ் மற்றும் இந்தியா இணைந்து செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சிமாநாட்டிற்குத் தலைமை தாங்கின. இதில், பிளெட்ச்லி பார்க் (நவம்பர் 2023) மற்றும் சியோல் (மே 2024) உச்சிமாநாடுகளின் போது எட்டப்பட்ட முக்கியமான முடிவுகளை செயல்படுத்துவதற்காக, அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்கள், சர்வதேச …

Read More »

பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்

பிரதமர் திரு நரேந்திர மோடியும் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் தங்களுக்கிடையிலான  தனிப்பட்ட நல்லுறவைப் பிரதிபலிக்கும் வகையில், நேற்று பாரிஸிலிருந்து மர்சேயிலுக்கு பிரான்ஸ் அதிபர் விமானத்தில் ஒன்றாகப் பயணித்தனர். இருதரப்பு உறவுகளின் முழு பரிமாணங்கள் மற்றும் முக்கிய உலகளாவிய, பிராந்திய பிரச்சனைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். மர்சேயில் வந்து இறங்கிய பின்னர் தூதுக்குழு நிலை பேச்சுவார்த்தைகள் நடந்தன. கடந்த 25 ஆண்டுகளில் பன்முக உறவாக சீராக உருவாகியுள்ள இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மைக்கான தங்கள் …

Read More »

மார்சேயில் இந்திய துணைத் தூதரகத்தை பிரான்ஸ் அதிபரும் இந்திய பிரதமரும் இணைந்து திறந்து வைத்தனர்

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மெக்ரோன் ஆகியோர் இணைந்து மார்சேயில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை இன்று திறந்து வைத்தனர. இந்தத்  துணை தூதரகம்  திறந்து வைக்கப்பட்டது இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவின் முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது.  வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இந்த நிகழ்ச்சியில் இருநாட்டுத் தலைவர்களையும் அங்கிருந்த வம்சாவளியினர் அன்புடன் வரவேற்றனர். 2023-ம் ஆண்டு ஜூலை மாதம்  பிரதமர் திரு நரேந்திர மோடி …

Read More »

பிரதமரும் பிரான்ஸ் அதிபரும் கூட்டாக ஐடிஇஆர் அணுஉலையைப் பார்வையிட்டனர்

பிரதமர் திரு நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மக்ரோனும் இன்று கடராச்சியில் உள்ள சர்வதேச வெப்ப அணுக்கரு பரிசோதனை உலையை (ஐடிஇஆர்) கூட்டாகப் பார்வையிட்டனர். தலைவர்களை ஐடிஇஆர் தலைமை இயக்குநர் வரவேற்றார். இன்று உலகின் மிகவும் லட்சிய அணுக்கரு இணைவு எரிசக்தி திட்டங்களில் ஒன்றான ஐடிஇஆர்-க்கு எந்தவொரு நாட்டின் தலைவரோ அல்லது அரசாங்கத் தலைவரோ வருகை தருவது இதுவே முதல் முறையாகும். இந்த வருகையின் போது, உலகின் …

Read More »

மஹாகும்ப மேளா 2025: பிரயாக்ராஜில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது; எய்ம்ஸ், பனராஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவ நிபுணர்கள் கனடா, ஜெர்மனி, ரஷ்யாவைச் சேர்ந்த நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்

மஹாகும்பமேளா 2025-ல் யாத்ரீகர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும் மேளா நிர்வாகம் விரிவான மருத்துவ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது. பொதுவான நோய்கள் முதல் சிறப்பு சிகிச்சைகள் வரை, விரிவான சுகாதார வசதிகள் கிடைக்கின்றன. இதுவரை, 7 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகளை உலகத் தரமானதாக மாற்ற, கனடா, ஜெர்மனி, ரஷ்யாவைச் சேர்ந்த நிபுணர்கள், தில்லி எய்ம்ஸ் மற்றும்  பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஐ.எம.எஸ். மருத்துவர்களுடன் …

Read More »

பிரான்ஸ், அமெரிக்க பயணத்தையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை

அதிபர் மேக்ரோனின் அழைப்பையடுத்து, பிப்ரவரி 10 முதல் 12 வரை பிரான்சில் பயணம் மேற்கொள்கிறேன். பாரிஸில், உலகத் தலைவர்கள் மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் கூட்டமான செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாட்டில் இணைத்தலைமை தாங்க நான் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். அங்கு புதுமைக்கண்டுபிடிப்புகள் மற்றும் பரந்த அளவிலான பொது நன்மையைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த, பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான கூட்டு அணுகுமுறை குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள இருக்கிறோம். எனது பயணம் …

Read More »