மலேசியா-இந்தியா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுவின் 13-வது கூட்டம் 2025 பிப்ரவரி 19-ம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்றது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், மலேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் திரு லோக்மான் ஹக்கீம் பின் அலி ஆகியோர் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர். அண்மையில் இரு நாட்டு ஆயுதப் படைகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பு குறித்து இருதரப்பும் மகிழ்ச்சி தெரிவித்தன. பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து …
Read More »இந்திய கடற்படையின் முதலாவது பயிற்சி படைப்பிரிவு கம்போடியாவின் சிஹானுக்வில் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது
இந்தியக் கடற்படைக் கப்பல் (ஐஎன்எஸ்) சுஜாதா, இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பல் (ஐசிஜிஎஸ்) வீரா ஆகியவை மூலம் இந்திய கடற்படையின் முதலாவது பயிற்சி படைப்பிரிவு வெற்றிகரமாக பயணத்தை நிறைவு செய்து கம்போடியாவின் சிஹானுக்வில்லில் இருந்து 2025 பிப்ரவரி 17 அன்று புறப்பட்டது. மூன்று நாள் பயணத்தின் போது, இந்தியக் கடற்படை, ராயல் கம்போடிய கடற்படையுடன் இணைந்து நட்புறவை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டது. ஐஎன்எஸ் சுஜாதா மற்றும் ஐசிஜிஎஸ் …
Read More »ஆயுஷ் மருத்துவமுறைகளின் தரவு மற்றும் சான்றுகள் அடிப்படையிலான ஆராய்ச்சியின் உலகளாவிய அறிக்கை
பாரம்பரிய மருத்துவத்தின் உலகளாவிய அங்கீகாரத்திற்கான ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக உலக சுகாதார அமைப்பு நோய்கள் குறித்த சர்வதேச வகைப்பாட்டிற்கு ஏற்ப அதன் புதுப்பிக்கும் நடைமுறைகளை அறிவித்துள்ளது. இந்த நடைமுறையின்படி பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான புதிய தொகுதியை அறிமுகப்படுத்துகிறது. இது ஆயுர்வேதம், சித்தா, யுனானி தொடர்பான பாரம்பரிய மருத்துவ முறைகளின் முறையான கண்காணிப்பு மற்றும் உலகளாவிய ஒருங்கிணைப்பில் ஒரு முக்கிய நிலையைக் குறிக்கிறது. ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்துவ முறைகளுக்கான நெறிமுறைகள் …
Read More »இந்திய – ஐக்கிய அரபு அமீரிம் இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி 3 ஆண்டுகள் நிறைவடைகிறது
இந்திய-ஐக்கிய அரபு அமீரகம் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (சி.இ.பி.ஏ) கையொப்பமிடப்பட்டு 2025 பிப்ரவரி 18 ஆம் தேதி மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. சி.இ.பி.ஏ என்பது ஒரு முழுமையான மற்றும் ஆழமான ஒப்பந்தமாகும், இது 18 பிப்ரவரி 2022 அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும் ஐக்கிய அரபு அமீரக அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளருமான திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்இடையே ஒரு மெய்நிகர் உச்சிமாநாட்டில் கையெழுத்தானது. …
Read More »இங்கிலாந்து முன்னாள் பிரதமர் திரு ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் நாடாளுமன்ற வளாகத்தைப் பார்வையிட்டார்
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் திரு ரிஷி சுனக், தமது மனைவி திருமதி அக்ஷதா மூர்த்தி, மகள்கள் கிருஷ்ணா, அனுஷ்காவுடன் இன்று நாடாளுமன்ற வளாகத்தைப் பார்வையிட்டார். அவர்களுடன் மாநிலங்களவை உறுப்பினர் திருமதி சுதா மூர்த்தியும் வருகை தந்திருந்தார். மக்களவை செயலாளர் திரு உத்பல் குமார் சிங், திரு சுனக் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்றார். மாநிலங்களவை செயலாளர் திரு. பி.சி. மோடியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த வருகையின் போது, …
Read More »இந்தியா – கத்தார் கூட்டறிக்கை
இந்தியப் பிரதமர் மேதகு திரு. நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி, 2025 பிப்ரவரி 17-18 தேதிகளில் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். மேதகு அமீருடன் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் வர்த்தகத் தலைவர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் வந்திருந்தது. மேதகு அமீர், இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும். பிப்ரவரி 18 அன்று குடியரசுத்தலைவர் மாளிகையின் முகப்பில் இந்தியக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் திரு …
Read More »ஆஸ்திரேலியாவிற்கு முதல் முறையாக இந்திய மாதுளம் பழங்கள் கடல்வழியாக ஏற்றுமதி: அபேடா முன்முயற்சி
இந்தியாவின் விவசாய ஏற்றுமதியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா (APEDA) அமைப்பானது அக்ரா ஸ்டார், கே பீ எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, கடல் வழியாக உயர்தர சங்கோலா, பாக்வா ஆகிய இந்திய மாதுளை ரகங்களை கடல்வழியாக முதல் முறையாக வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய விளைபொருட்களுக்கான சந்தையை விரிவுபடுத்துவதில் இது ஒரு முக்கிய நடவடிக்கையாகும். ஆஸ்திரேலியாவிற்கு மாதுளம் பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான நிலையான …
Read More »ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி 7.21% அதிகரிப்பு
ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி (பொருட்கள் மற்றும் சேவைகள்) 682.59 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஏப்ரல்-ஜனவரி 2023-24-ல் 636.69 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது 7.21% வளர்ச்சியாகும். இந்தக் காலகட்டத்தில் பொருட்கள் ஏற்றுமதியின் ஒட்டுமொத்த மதிப்பு 358.91 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது ஏப்ரல்-ஜனவரி 2023-24 காலகட்டத்தில் 353.97 …
Read More »இந்தியா-கத்தார் கூட்டு வர்த்தக மன்றக் கூட்டம்: புதுதில்லியில் நாளை நடைபெறுகிறது
இந்தியா-கத்தார் கூட்டு வர்த்தக மன்றக் கூட்டம் நாளை (18.02.2025) புதுதில்லியில் நடைபெறுகிறது. இந்தியாவும் கத்தாரும் தங்கள் பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன. மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகத்தின் தொழில் – உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையும் (DPIIT) இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்தியா – கர்த்தார் இடையே முதலீட்டு வாய்ப்புகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை …
Read More »சர்வதேச கடற்படை ஆய்வு 25, கொமோடோ பயிற்சி ஆகியவற்றில் பங்கேற்க இந்திய கடற்படை கப்பல், கண்காணிப்பு விமானம் இந்தோனேசியாவுக்கு சென்றடைந்தன
பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 22 வரை திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச கடற்படை மறுஆய்வு (IFR-ஐஎஃப்ஆர்) 2025-ல் பங்கேற்க இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ் ஷர்துல், நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு பி 8 ஐ விமானம் ஆகியவை இந்தோனேசியாவின் பாலி சென்றுள்ளன. மதிப்புமிக்க பன்னாட்டு கடற்படை நிகழ்வான ஐஎஃப்ஆர், இந்தோனேஷிய அதிபரால் ஆய்வு செய்யப்படும். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கடற்படைகள் பங்கேற்கும். இந்த பயணத்தில், இந்திய கடற்படை, சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கூட்டம், விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும். …
Read More »
Matribhumi Samachar Tamil