Sunday, September 06 2026 | 08:21:16 AM
Breaking News

International

கொச்சியில் தீ விபத்துக்குள்ளான சிங்கப்பூர் கப்பலில் தீயைக் கட்டுபடுத்த கடலோரக் காவல்படை, கடற்படை, விமானப் படை ஆகியவை, அதிக ஆபத்துகளுக்கு இடையில் தீவிர நடவடிக்கை

சிங்கப்பூர் கப்பல் எம்.வி. வான் ஹாய் 503-ல் ஏற்பட்ட தீயை அணைக்கும் நடவடிக்கையிலும் மீட்பு நடவடிக்கையிலும் ஒரு பெரிய முன்னேற்றமாக, இந்திய கடலோர காவல்படை (ஐசிஜி), இந்திய கடற்படை, இந்திய விமானப்படை ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. இவை இணைந்து, நேற்று (ஜூன் 13, 2025) கடலில் தீ விபத்தில் சிக்கிய கொள்கலன் கப்பலை வெற்றிகரமாக இழுத்துச் சென்றன. வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம், பலத்த மேற்கு காற்று ஆகியவை காரணமாக அந்தக் கப்பல் கரையை நோக்கி ஆபத்தான முறையில் நகர்ந்தது. இந்த நிலையில், ஜூன் 13 அன்று கொச்சியில் இருந்து சென்ற கடற்படை ஹெலிகாப்டர், மிகவும் சவாலான சூழ்நிலையில் மீட்புக் குழு உறுப்பினர்களை கப்பலில் வெற்றிகரமாக இணைத்தது. பின்னர் அந்தக் குழு கொச்சி கடற்கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல்கள் தொலைவில் 600 மீட்டர் இழுவைக் கயிற்றை இணைத்தது. இந்தக் கப்பல் இப்போது 1.8 கடல் மைல் வேகத்தில் மேற்கு நோக்கி இழுத்துச் செல்லப்படுகிறது. இன்னும் 35 கடல் மைல்கள் தொலைவு உள்ளது. கடலோர காவல் படையின் 3 ரோந்துக் கப்பல்கள், அந்த தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் தீயை அணைக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. தற்போது, ​​அடர்ந்த புகை மட்டுமே கப்பலில் உள்ளது. சர்வதேச விதிமுறைகளின்படி, அதன் விதி உரிமையாளர்களால் தீர்மானிக்கப்படும் வரை, கப்பல் இந்திய கடற்கரையிலிருந்து குறைந்தது 50 கடல் மைல்கள் தொலைவில் இருப்பதை உறுதிசெய்ய கடலோர காவல் படை, கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்துடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுகிறது. கூடுதல் தீயணைப்பு இழுவைக் கப்பல்கள் வருவதால் நிலைமை மேலும் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More »

இந்தியா-மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி நிறைவு விழாவில் பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு

இந்தியா-மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியான நோமாடிக் எலிபெண்ட்டின் 17வது பதிப்பு இன்று மங்கோலியாவின் உலான்பாதரில் நிறைவடைந்தது. பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், செயல்பாட்டு தளவாடங்கள் மற்றும் உத்திசார்  செயல்பாடுகளின் இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் புஷ்பேந்திர சிங் ஆகியோர் நிறைவு விழாவில் பங்கேற்றனர். அருணாச்சல ஸ்கவுட்ஸ் பட்டாலியனின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களுடன் மொத்தம் 45 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய ராணுவக் குழு, இரண்டு வார காலப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு …

Read More »

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் விரிவான அரசு மற்றும் தொழில்துறையினர் உடனான பேச்சுவார்த்தை மூலம் இந்தியா-ஸ்வீடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறார்

ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் இரண்டு நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். முதல் நாளில் ஸ்வீடன் அரசின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளில் அவர் ஈடுபட்டார். அவரது இந்தப் பயணம் இருதரப்பு பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்துதல், வர்த்தகம், முதலீட்டு திட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பின் புதிய வழிகளை கண்டறிவதை நோக்கமாகக் கொண்டதாகும். அமைச்சர் …

Read More »

பேரிடர்களைத் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த சர்வதேச மாநாட்டின் போது பிரதமரின் உரை

மேன்மை தங்கிய பிரதிநிதிகளே, அன்பான நண்பர்களே, வணக்கம். பேரிடர்களைத் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த சர்வதேச மாநாடு- 2025-க்கு உங்களை வரவேற்கிறோம். இந்த மாநாடு ஐரோப்பாவில் முதன்முறையாக நடத்தப்படுகிறது. எனது நண்பர் அதிபர்  மக்ரோன் மற்றும் பிரான்ஸ் அரசின் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கிறேன். வரவிருக்கும் ஐக்கிய நாடுகளின் பெருங்கடல் மாநாட்டிற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே, இந்த மாநாட்டின் கருப்பொருள் ‘கடலோரப் பகுதிகளுக்கு  தாங்கும் திறன் கொண்ட எதிர்காலத்தை உருவாக்குதல்’. இயற்கைப் பேரழிவுகள் மற்றும் …

Read More »

பிரதமர் திரு நரேந்திர மோடியை இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் திரு டேவிட் லாமி சந்தித்தார்

இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் திரு டேவிட் லாமி இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை பங்களிப்பு மாநாடு தொடர்பான வெற்றிகரமான முடிவுகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி திருப்தி தெரிவித்தார். மேலும் இந்த மைல்கல் முடிவுகளுக்கு வழிவகுத்த இரு தரப்பினரின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டையும் அவர் பாராட்டினார். இருதரப்பு உறவுகளில் வளர்ந்து வரும் வேகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். …

Read More »

பிரெசியாவில் இத்தாலி துணைப் பிரதமர் அன்டோனியோ தஜானியுடன் மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் உயர்மட்ட அளவிலான சந்திப்பை நடத்தினார்

இத்தாலியின் தொழில் உற்பத்தி மையமான பிரெசியாவில் இத்தாலி துணைப் பிரதமரும் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத் துறை அமைச்சருமான அன்டோனியோ தஜானியுடன், மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் உயர்நிலை சந்திப்புக் கூட்டத்தை நடத்தினார்.  2025 ஜூன் 5 அன்று நிறைவடைந்த இத்தாலி பயணத்தின் போது பொருளாதார ஒத்துழைப்புக்கான  இந்தியா – இத்தாலி கூட்டு ஆணையத்தின் 22-வது அமர்வுக்கு இருதலைவர்களும் கூட்டாகத் தலைமை தாங்கினர். ஆக்கப்பூர்வமான …

Read More »

வியட்நாமின் தூதுக்குழு மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகனுடன் சந்திப்பு – இருநாடுகளுக்கிடையே ஊடகம், பொழுதுபோக்கு துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகனை, வியட்நாம் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினரும்,  வியட்நாம் கம்யூனிஸ்ட்டின் தகவல், கல்வி, மக்கள் தொடர்புக்கான மத்திய ஆணையத்தின் தலைவருமான திரு நுயென் ட்ராங் நிகியா தலைமையிலான வியட்நாம் அரசின் உயர் அதிகாரிகள் குழு புதுதில்லியில் இன்று (05.06.2025) சந்தித்தது. இந்த சந்திப்பின் போது, ​​ஊடகம், பொழுதுபோக்கு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியாவும் வியட்நாமும் ஒப்புக்கொண்டன. இந்த கூட்டத்தில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன், அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜுவும் கலந்து கொண்டனர். இந்தியாவும் வியட்நாமும் பாரம்பரியமாக நெருங்கிய இருதரப்பு உறவுகளை நீண்டகாலமாகப் பகிர்ந்து கொள்கின்றன. 2022-ம் ஆண்டில், இரு நாடுகளும் தூதரக உறவுகளை நிறுவிய 50-வது ஆண்டு …

Read More »

இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான அரசு முறை இத்தாலி பயணத்தை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் தொடங்கியுள்ளார்

இத்தாலிக்கான அரசுமுறை பயணத்தை மத்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தொடங்கினார். 2025 ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் அவர் இத்தாலியில் பயணம் மேற்கொள்வார். இந்தியா-பிரான்ஸ் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் பிரான்சில் பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து அவர் தற்போது இத்தாலி சென்றுள்ளார். இந்தப் பயணம் முக்கியமான ஐரோப்பிய பங்குதாரர்களுடன் உத்திசார் கூட்டாண்மையை விரிவுபடுத்துவதிலும், பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதிலும் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மேலும் இத்தாலியுடன் …

Read More »

புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்திரேலிய துணைப் பிரதமருடன் இருதரப்பு பேச்சு நடத்தினர்

புதுதில்லியில் 2025 ஜூன் 04 அன்று ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான திரு ரிச்சர்ட் மார்லஸுடன் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சு நடத்தினார். பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை இரண்டு அமைச்சர்களும் கடுமையாகக் கண்டித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காப்புக்காக தாக்குதல் தொடுக்கும் இந்தியாவின் உரிமையை பாதுகாப்பு அமைச்சர் எடுத்துரைத்தார். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் …

Read More »

இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சியான தர்மா கார்டியனில் பங்கேற்க இந்திய ராணுவக் குழு ஜப்பான் புறப்பட்டது

தர்மா கார்டியன் எனப்படும் இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சியின் 6-வது பதிப்பில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவக் குழுவினர் இன்று (22.02.2025) ஜப்பானுக்குப் புறப்பட்டுச் சென்றனர். இந்த பயிற்சி 2025 பிப்ரவரி 24 முதல் மார்ச் 09 வரை ஜப்பானின் கிழக்கு புஜி பகுதியில் நடைபெறவுள்ளது. தர்மா கார்டியன் பயிற்சி என்பது இந்தியாவிலும் ஜப்பானிலும் மாறி மாறி ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும். இந்தப் பயிற்சியின் முந்தைய பதிப்பு ராஜஸ்தானில் 2024 …

Read More »