உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் முன்முயற்சியை வலுப்படுத்தும் வகையில், தில்லியில் உள்ள பகவான் மகாவீர் வனஸ்தலி பூங்காவில் மரம் நடும் இயக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ஒரு மரக்கன்று நட்டார். ஆரவல்லி பசுமைச் சுவர் திட்டத்தின் கீழ் ஆரவல்லி மலைத்தொடரில் காடுகளை மறுசீரமைத்து வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார். உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடர் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, தில்லி ஆகிய பகுதிகளில் பரவியுள்ளதைப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பகுதிகள் பல சுற்றுச்சூழல் …
Read More »உலகளாவிய பேரிடர் அபாயக் குறைப்பு தளம் 2025 இல் உலகளாவிய பேரிடர் மீள்தன்மை மற்றும் பொது சுகாதாரத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியது
உலகளாவிய பேரிடர் அபாயக் குறைப்பு தளம் (GPDRR) 2025-ஐ முன்னிட்டு ஜெனீவாவில் இன்று நடைபெற்ற ஜி20 பேரிடர் அபாயக் குறைப்பு பணிக்குழு வட்டமேசை மாநாட்டில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா பங்கேற்றார். கலந்துரையாடல்களின் போது, வளர்ச்சித் தேவைகளுடன் பொருளாதாரத் திறனை மேம்படுத்துவதன் மூலம் உலகளாவிய பேரிடர் அபாயக் குறைப்பு முயற்சிகளை முன்னேற்றுவதில் ஜி20-இன் முக்கிய பங்கை அவர் வலியுறுத்தினார். சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், உலகளாவிய சவால்களுக்கு எதிராக …
Read More »சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது
சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரம்பு தேதி 2027 மார்ச் 01, 00:00 மணியாக இருக்கும். லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பனிப்பொழிவுப் பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரம்பு தேதி 2026 அக்டோபர் 01, 00:00 மணியாக இருக்கும். மேற்குறிப்பிட்ட தேதிகளுடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் நோக்கம் …
Read More »வேளாண் விஞ்ஞானிகள் விவசாயிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களை வழிநடத்த வேண்டும் – திரு சிவராஜ் சிங் சௌகான்
மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், மகாராஷ்டிராவின் புனே அருகே நாராயண்கோன் பகுதியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் (KVK) விவசாயிகளுடன் இன்று (03.06.2025) கலந்துரையாடினார். முன்னதாக, மத்திய அமைச்சர் நாராயண்கோன் வேளாண் விளைபொருள் சந்தைக் குழு, தக்காளி சந்தை, உள்ளூர் பண்ணை வயல்கள், குளிர்பதன கிடங்கு ஆகியவற்றை வேளாண் விஞ்ஞானிகளுடன் இணைந்து அவர் பார்வையிட்டார். அங்கு அவர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் திரு சௌகான், வேளாண் விஞ்ஞானிகள் வயல்களுக்குச் சென்று விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கத்தின் நோக்கங்களை எடுத்துரைத்த அவர், விவசாயத் துறையில் வளர்ச்சியும், விவசாயிகளின் செழிப்பும் இல்லாமல் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க முடியாது என்று கூறினார். …
Read More »மூன்று லட்சம் பேருடன் என்சிசி விரிவாக்கம் செய்யப்படும் – மத்திய இணையமைச்சர் திரு சஞ்சய் சேத்
போபாலில் இன்று (ஜூன் 03, 2025) நடைபெற்ற தேசிய மாணவர் படையின் (NCC- என்சிசி) சிறப்பு கூட்டு மாநில பிரதிநிதிகள், கூடுதல்/துணைத் தலைமை இயக்குநர்கள் மாநாட்டை மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் மூன்று லட்சம் பேருடன் என்சிசி-யை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பல மாநிலங்கள் இதற்கு ஏற்கெனவே தங்கள் ஒப்புதலை வழங்கி இருப்பதாகவும் அவர் கூறினார். தேவையான பயிற்சி உள்கட்டமைப்புகளை உருவாக்குவதை விரைவுபடுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தேசத்தை சிறப்பாகக் கட்டமைப்பதிலும் இளைஞர் மேம்பாட்டிலும் என்சிசி எனப்படும் தேசிய மாணவர் படை முக்கியப் பங்கு வகிப்பதாவும் அவர் கூறினார். முன்னாள் ராணுவ …
Read More »டாக்டர் மன்சுக் மாண்டவியா ‘நகர்ப்புறம் குறித்த கலந்துரையாடல் 2025-ஐ தொடங்கி வைத்து சைக்கிள் ஓட்டுதல் குறித்த சிறப்புப் புத்தகங்களை வெளியிட்டார்
மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று புதுதில்லியில் நகர்ப்புறம் குறித்த கலந்துரையாடல் 2025 மாநாட்டைத் தொடங்கி வைத்தார். நிலையான நகர்ப்புற எதிர்காலத்தை உருவாக்க இளையோர்கள், நிபுணர்கள் மற்றும் தலைவர்களை ஒன்றிணைப்பதை மூன்று நாள் மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. அப்போது பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, சைக்கிள் ஓட்டுதல் என்பது உடற்பயிற்சியின் சிறந்த வடிவம் என்றும் அது நம்மை ஆரோக்கியமாக்குவது …
Read More »பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் புதிய சீர்திருத்தம்
பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் முக்கிய சீர்திருத்தத்தை வெளியுறவு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், வாழ்க்கைத் துணைவரின் பெயரை பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் சேர்க்க அல்லது நீக்க விண்ணப்பதாரர்கள் திருமணச் சான்றிதழுக்கு மாற்றாக “இணைப்பு J” எனப்படும் எளிமையான பிரமாணப் பத்திரத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த முயற்சி விண்ணப்ப செயல்முறையை நெறிப்படுத்துவதையும் தாமதங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. “இணைப்பு J” என்பது எளிமைப்படுத்தப்பட்ட பிரமாணப் பத்திரமாகும், இதில் விண்ணப்பதாரர்கள் தங்கள் திருமண நிலையை …
Read More »கிராமங்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான பாதையாகும்: குடியரசுத் துணைத் தலைவர்
மொஹாலியில் தேசிய வேளாண் உணவு மற்றும் உயிரி உற்பத்தி நிறுவனத்தில் மேம்பட்ட தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தைக் குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “தாம் ஒரு விவசாயியின் மகன் என்றும், விவசாயியின் மகன் எப்பொழுதும் உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வான் என்றும் கூறினார். மேலும், “இந்தியாவின் ஆன்மா அதன் கிராமங்களில் வாழ்கிறது, கிராமப்புற அமைப்பு நாட்டின் முதுகெலும்பாகச் …
Read More »பிரதமரின் யோகா விருதுகள் 2025-க்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகளை மார்ச் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் – ஆயுஷ் அமைச்சகம் அறிவிப்பு
சர்வதேச யோகா தினத்தின் (IDY2025) 2025 பதிப்பிற்கான மதிப்புமிக்க பிரதமரின் யோகா விருதுகளுக்கான பரிந்துரைகளைப் பெறத் தொடங்கியுள்ளதாக ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ளது. தேசிய, சர்வதேச அளவில் யோகாவை பிரபலப்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க, நிலையான முயற்சிகளை மேற்கொண்ட தனிநபர்கள், நிறுவனங்களை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன. பிரதமரின் யோகா விருதுகள், நோய் தடுப்பு, சுகாதார மேம்பாடு, வாழ்க்கை முறை தொடர்பான பாதிப்புகளை சரி செய்தல் ஆகியவற்றில் யோகாவின் பங்கை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. தேசிய …
Read More »தேசிய பழங்குடியினர் திருவிழாவான ‘ஆதி மஹோத்சவ’ விழாவைக் குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 16, 2025) புதுதில்லியில் தேசிய பழங்குடியினர் திருவிழாவான ‘ஆதி மஹோத்சவ’ விழாவைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், பழங்குடியின பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்த ஆதி மகோத்சவம் ஒரு முக்கிய நிகழ்வு என்று கூறினார். இதுபோன்ற விழாக்கள் பழங்குடி சமூகத்தின் தொழில்முனைவோர், கைவினைஞர்கள், கலைஞர்களுக்கு சந்தையுடன் இணைவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார். பழங்குடியின சமுதாயத்தின் கைவினைப் …
Read More »
Matribhumi Samachar Tamil