பாலின ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்து பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் முன்னோடி திட்டமான பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் 10-வது ஆண்டு நிறைவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இன்று கொண்டாடியது. புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. அன்னபூர்ணா தேவி, பெண்கள் மற்றும் …
Read More »தேசிய சுகாதார இயக்கத்தின் (2021-24) சாதனைகள்: இந்தியாவின் பொது சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் ஒரு மைல்கல்
மனித வளங்களை விரிவுபடுத்துதல், முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், சுகாதார அவசரநிலைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வை கண்டறிதல் போன்ற தொடர் முயற்சிகள் வாயிலாக நாட்டின் பொது சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் தேசிய சுகாதார இயக்கம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், தாய்-சேய் நலம், நோய் ஒழிப்பு, சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேசிய சுகாதார இயக்கம் கணிசமான அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த …
Read More »தேசிய சுகாதார இயக்கம் (2021-24) கீழ் படைக்கப்பட்டுள்ள சாதனைகளை மத்திய அமைச்சரவை மதிப்பீடு செய்தது: இது நாட்டின் பொது சுகாதார மேம்பாட்டில் ஏற்பட்டுள்ள தாக்கத்தின் மைல்கல் ஆகும்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் தேசிய சுகாதார இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பச்சிளங்குழந்தை இறப்பு விகிதம், கர்ப்பிணிகள் இறப்பு விகிதம், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் மற்றும் மொத்த கருவுறுதல் விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில், காலரா, டெங்கு, காசநோய், தொழுநோய், வைரஸ், மஞ்சள்காமாலை போன்ற பல்வேறு நோய்களுக்கான தடுப்பு திட்டங்கள், தேசிய சிக்கல் செல் இரத்த சோகை நோய் ஒழிப்பு இயக்கம் போன்ற புதிய முயற்சிகள் தொடர்பான திட்டங்களின் …
Read More »பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தின் 10-ம் ஆண்டு விழா: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கொண்டாட உள்ளது
பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தின் 10-ம் ஆண்டு நிறைவு விழாவை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கொண்டாட உள்ளது. இது நாட்டில் பெண் குழந்தைகளைப் பாதுகாத்தல், கல்வி கற்பித்தல் மற்றும் அதிகாரம் அளித்தல் ஆகியவற்றிற்கான ஒரு பத்தாண்டுக்கால இடைவிடாத முயற்சிகளைக் குறிக்கிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி புதுதில்லி விஞ்ஞான் பவனில் நாளை (2025 ஜனவரி 22) நடைபெற உள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஜே.பி.நட்டா, மத்திய மகளிர் மற்றும் …
Read More »செல்வமகள் சேமிப்புத் திட்டம்
செல்வமகள் சேமிப்புத் திட்டம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளம் பெண்களுக்கு நம்பிக்கை மற்றும் அதிகாரமளித்தலின் அம்சமாகத் திகழ்கிறது. இது அவர்களின் கனவுகள், விருப்பங்களுக்கான அரசின் உறுதியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஜனவரி 22 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு 2025 ஜனவரி 22 செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் 10 ஆண்டுகள் …
Read More »நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 128 வது பிறந்த தினத்தையொட்டி அவரது மரபுகளை கௌரவிக்கும் வகையில் பராக்கிரம தினம் 2025-ஐ இந்தியா கொண்டாடுகிறது
பராக்கிரம தினம் 2025-யையொட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த இடமான வரலாற்று நகரம் கட்டாக்கில் உள்ள பாராபதி கோட்டையில் 2025 ஜனவரி 23 முதல் 25 வரை பிரமாண்டமான கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இந்தப் பன்முக கொண்டாட்டம் நேதாஜியின் 128-வது பிறந்த நாளையொட்டி அவரது பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் அமையும். இந்த மூன்று நாள் நிகழ்வை ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி 23.01.2025 அன்று தொடங்கி வைக்கிறார். நேதாஜியின் பிறந்த தினத்தை ‘பராக்கிரம தினம்’ என்று நினைவுகூர அரசு 2022 இல் எடுத்த முடிவைத் தொடர்ந்து, அந்த ஆண்டு …
Read More »அமிர்த உத்யான் பிப்ரவரி 2 முதல் பொதுமக்களுக்காக திறக்கப்படுகிறது
குடியரசுத் தலைவர் மாளிகையின் அமிர்த உத்யான் என்னும் பூந்தோட்டம் 2025 பிப்ரவரி 2 முதல் மார்ச் 30 வரை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும். பராமரிப்பு நாட்களான திங்கட்கிழமை தவிர, வாரத்தில் ஆறு நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் தோட்டத்துக்குச் செல்லலாம். பிப்ரவரி 5 (தில்லி சட்டமன்றத்திற்கான வாக்குப்பதிவு காரணமாக), பிப்ரவரி 20 மற்றும் 21 (ராஷ்டிரபதி பவனில் பார்வையாளர்கள் மாநாடு காரணமாக), …
Read More »மனதின் குரல் நிகழ்ச்சியின் 118-வது அத்தியாயத்தில், 19.01.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று 2025ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல். நீங்கள் அனைவரும் ஒரு விஷயத்தைக் கண்டிப்பாக கவனித்திருப்பீர்கள். ஒருஒரு முறையும் மனதின் குரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று இடம்பெறும், ஆனால் இந்த முறை, நாம் ஒரு வாரம் முன்னதாகவே, நான்காவது ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று சந்திக்கின்றோம். ஏனென்றால் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று நமது குடியரசுத் தினமாகும். நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் குடியரசுத் திருநாளுக்கான முதன்மையான நல்வாழ்த்துக்களைத் …
Read More »சட்டப்பூர்வ நில உரிமையுடன் கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துதல் -65 லட்சம் ஸ்வாமித்வா சொத்து அட்டைகள் விநியோகம்
“கிராமப்புற மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதே எனது அரசின் முன்னுரிமைப் பணியாகும்” –பிரதமர் திரு நரேந்திர மோடி 2020 ஏப்ரல் 24 அன்று தேசிய பஞ்சாயத்து ராஜ்தினத்தன்று பிரதமரால் தொடங்கப்பட்ட ஸ்வாமித்வா திட்டம், கிராம பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு “உரிமைகப் பதிவு” வழங்குவதன் மூலம் கிராமப்புற இந்தியாவின் பொருளாதார மாற்றத்தை இயக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நில எல்லை வரையரைக்கு, மேம்பட்ட ட்ரோன், ஜிஐஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த திட்டம் சொத்து பணமாக்குதலை …
Read More »ஸ்வமித்வா பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்
10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 230-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 50,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு ஸ்வமித்வா திட்டத்தின் கீழ், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து அட்டைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று வழங்கினார். நிகழ்வின் போது, ஸ்வமித்வா திட்டம் தொடர்பான ஐந்து பயனாளிகளின் அனுபவங்களை அறிய அவர்களுடன் அவர் கலந்துரையாடினார். மத்தியப் பிரதேச மாநிலம் செஹோரைச் சேர்ந்த ஸ்வமித்வா …
Read More »
Matribhumi Samachar Tamil