உரிய கொள்கை நடவடிக்கைகள், வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு, கிராம அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் வேளாண் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கிறது. பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம், நமோ கிசான் திட்டம், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை நடைமுறைகளை பின்பற்றுதல் போன்ற அரசின் பல்வேறு திட்டங்கள் பயிர் உற்பத்தியை அதிகரிக்கின்றன. மத்திய அரசு வேளாண் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டைக் கணிசமாக உயர்த்தியுள்ளது. 2013-14ம் ஆண்டில் ரூ. 21933.50 கோடியாக இருந்த பட்ஜெட் ஒதுக்கீடு 2024-25 ஆம் ஆண்டில் 1,22,528.77 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஏஆர்) ஆதரவின் கீழ் தேசிய வேளாண் ஆராய்ச்சி அமைப்பானது அதன் நிறுவனங்கள், மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் மூலம் மேம்பட்ட தரத்துடன் பல்வேறு தன்மை கொண்ட புதிய கலப்பின பயிர் ரகங்களை உருவாக்கியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் (2014-2024) 92 வகையான சோயாபீன்ஸ், 239 வகையான மக்காச்சோளம், 331 வகையான பருத்திபீட்டா பருத்தி ஆகியவை வெளியிடப்பட்டு வணிக சாகுபடிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த வகைகளின் உயர் விளைச்சல் வகைகள், அவற்றின் மேலாண்மை தொழில்நுட்பங்கள், நடைமுறைகள் போன்றவை நாட்டின் விவசாயிகளுக்கு தவறாமல் பரிந்துரைக்கப்படுகின்றன. பருத்தி, மக்காச்சோளம், சோயாபீன் ஆகியவற்றில் தற்போதுள்ள இயந்திர மற்றும் இரசாயன களைக் கட்டுப்பாட்டு உத்திகளுடன் பல்வேறு களை மேலாண்மை தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு, வேளாண் விவசாய மையங்கள், மாநில விவசாயத் துறைகள் மூலம் பெரும் அளவில் விவசாயிகளிடையே பரப்பப்பட்டுள்ளன. மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் வேளாண் துறை இணையமைச்சர் திரு பகீரத் சௌத்ரி இந்தத் தகவலை தெரிவித்தார்.
Read More »வேளாண் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல்
விவசாயிகளின் உற்பத்தித்திறன், நிலைத்தன்மை மற்றும் வருமானத்தை அதிகரிக்க உதவும் வகையில் விவசாயத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த அரசு பல முக்கிய திட்டங்களைத் தொடங்கியுள்ளது. டிஜிட்டல் வேளாண்மை இயக்கம் என்பது பயிர் கண்காணிப்பு, மண் மேலாண்மை மற்றும் வானிலை முன்னறிவிப்புக்காக செயற்கை நுண்ணறிவு, புவிசார் தரவு போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாகும். கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் 2900 வகைகளை உருவாக்கியுள்ளது. அவற்றில் 2661 வகைகள் …
Read More »வேளாண் மையங்கள், மேம்பாட்டு நிறுவனங்கள்
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் மேற்கு வங்க மாநிலத்தில் 4 ஆராய்ச்சி நிறுவனங்களையும் 10 பிராந்திய ஆராய்ச்சி நிலையங்களையும் நிறுவியுள்ளது. இந்த நிறுவனங்கள் நாட்டின் பிற பகுதிகளின் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் வேளாண் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. அத்துடன் மாவட்ட அளவில், உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களின் பயிற்சி மற்றும் செயல்விளக்கத்திற்காக மேற்கு வங்கத்தில் 23 வேளாண் ஆராய்ச்சி மையங்களும் நிறுவப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களும் …
Read More »ரபி பயிர் விதைப்பு 661.03 லட்சம் ஹெக்டேரைத் தாண்டியுள்ளது
2025 பிப்ரவரி 4-ம் தேதி நிலவரப்படி ரபி பயிர்கள் சாகுபடி பரப்பளவின் முன்னேற்றத்தை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 318.33 லட்சம் ஹெக்டேராக இருந்த கோதுமை சாகுபடி பரப்பளவு, இந்த ஆண்டு இதுவரை 324.38 லட்சம் ஹெக்டேராக உள்ளது. இந்த ஆண்டு இதுவரை 42.54 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இது 40.59 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 137.80 லட்சம் ஹெக்டேரில் பயறு வகைகள் பயிரிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை 140.89 லட்சம் ஹெக்டேரில் பயறு வகைகள் பயிரிடப்பட்டுள்ளன. சிறு தானியங்கள் இந்த ஆண்டு 55.25 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. அனைத்து பயிர்களும் மொத்தம் 661.03 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இது 651.42 லட்சம் ஹெக்டேராக இருந்தது. भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं सारांश कनौजिया की पुस्तकें ऑडियो बुक : भारत …
Read More »இந்திய கடலோர காவல்படை தமது 49-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது
இந்தியக் கடலோரக் காவல்படை நாட்டிற்காக சுமார் 50 ஆண்டுகளாக மேற்கொண்ட அர்ப்பணிப்புள்ள சேவையைக் குறிக்கும் வகையில் 2025 பிப்ரவரி 01 அன்று தனது 49-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத்தலைவர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் இந்திய கடலோர காவல்படையின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் நாட்டின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரித்து, தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த நாளைக் குறிக்கும் வகையில், இந்திய கடலோர காவல்படையின் இயக்குநர் ஜெனரல் பரமேஷ் சிவமணி, புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, நாட்டின் சேவையில் தங்கள் இன்னுயிரை நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 1977-ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து ஏழு தளங்களுடன், இந்திய கடலோர காவல்படை ஒரு வலிமைமிக்க சக்தியாக …
Read More »புதுதில்லி உலக புத்தக கண்காட்சி 2025-ஐ குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 1, 2025) புதுதில்லியில் 2025-ம் ஆண்டுக்கான புதுதில்லி உலகப் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், புத்தகங்கள் படிப்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அனுபவம். பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களிலிருந்து வரும் புத்தகங்களைப் படிப்பது, பிராந்தியங்கள் மற்றும் சமூகங்களுக்கிடையில் பாலங்களை உருவாக்குகிறது. புதுதில்லி உலக புத்தகக் கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு மொழிகளையும், …
Read More »இஸ்ரோ செலுத்திய 100-வது ராக்கெட் இந்திய விண்வெளி பயணத்தின் மிகப்பெரிய சாதனையாகும்: டாக்டர் ஜிதேந்திர சிங்
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 100-வது ராக்கெட் செலுத்தப்பட்டது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ள மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், “ஜி.எஸ்.எல்.வி-எஃப் 15 / என்.வி.எஸ் -02 மிஷன் செலுத்தப்பட்டது மற்றொரு மைல்கல் மட்டுமல்லாமல், 100-வது ராக்கெட் செலுத்தப்பட்டது இந்தியாவின் விண்வெளி பயணத்தில் மிகப்பெரிய சாதனையைக் குறிக்கிறது என்று குறிப்பிட்டார். ஒன்றன் பின் ஒன்றாக இஸ்ரோவால் பதிவு செய்யப்பட்ட அசாதாரண சாதனைகளால் …
Read More »ஏழு ஆண்டுகளில் ரூ.34,300 கோடி நிதி ஒதுக்கீட்டில் “முக்கிய கனிமங்களுக்கான தேசிய இயக்கத்திற்கு” மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 16,300 கோடி ரூபாய் செலவிலும் பொதுத்துறை நிறுவனங்களின் ரூ.18,000 கோடி முதலீட்டுடனும் “முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களுக்கான தேசிய இயக்கத்தை”த் தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் ஒரு பகுதியாகவும், உயர் தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழில்கள், தூய எரிசக்தி, பாதுகாப்பு ஆகியவற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கனிமவள தாதுக்களின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டும் அத்துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் …
Read More »வரலாற்றுச் சிறப்புமிக்க 100-வது ராக்கெட் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோவுக்கு பிரதமர் வாழ்த்து
வரலாற்றுச் சிறப்புமிக்க 100-வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது விஞ்ஞானிகள், பொறியாளர்களின் தொலைநோக்குப் பார்வை, அர்ப்பணிப்பு, உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது என்று கூறினார். இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் தனியார் துறையின் வளர்ந்து வரும் பங்களிப்பை குறிப்பிட்ட பிரதமர், விண்வெளி ஆய்வில் நாடு தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இது குறித்து சமூக ஊடக …
Read More »தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு வார குறுகிய கால இணையவழி உள்ளக பயிற்சித் திட்டத்தை தொடங்கியுள்ளது
தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு வார குறுகிய கால இணையவழி உள்ளகப்பயிற்சித் திட்டத்தை 2025 ஜனவரி 27 அன்று தொடங்கியது. மனித உரிமைகள், அது தொடர்பான சட்டங்கள் மற்றும் இந்தியாவில் அவற்றின் பயன்பாடு பற்றிய விரிவான புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு கல்வித் துறைகளைச் சேர்ந்த 80 இளங்கலை, முதுகலை மாணவர்கள் இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான நிகழ்ச்சியில் பேசிய தேசிய மனித …
Read More »
Matribhumi Samachar Tamil