Friday, December 05 2025 | 08:10:31 PM
Breaking News

National

புராதன கலாச்சார பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாத்தல்

இந்திய தொல்லியல் சர்வே நாடு முழுவதும் 3698 மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் மற்றும் இடங்களின் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.  இந்திய தொல்லியல் துறை அலுவலர்களால் நினைவுச் சின்னங்கள் மற்றும் இடங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, தேவை மற்றும் கிடைக்கும் இடங்களுக்கேற்ப நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக கடந்த 5 ஆண்டுகளில் செலவிடப்பட்ட நிதி விவரம் வருமாறு:                                               (தொகை ரூபாய் கோடிகளில்) வ.எண் ஆண்டு ஒதுக்கீடு செலவினம் 1. 2019-20 435.61 435.39 2. 2020-21 260.90 260.83 3. 2021-22 270.00 269.57 4. 2022-23 392.71 391.93 5. 2023-24 443.53 443.53 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை அழிப்பவர்கள், அகற்றுபவர்கள், மாற்றுபவர்கள், சிதைப்பவர்கள், ஆபத்தை விளைவிப்பவர்கள் அல்லது தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Read More »

பிரதமரின் கதிசக்தி திட்டத்தின்கீழ் முக்கிய ரயில், சாலை உள்கட்டமைப்பு திட்டங்கள் மதிப்பீடு

உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த நெட்வொர்க் திட்டமிடல் குழுவின் 85 வது கூட்டத்தில் பிரதமரின் கதிசக்தி திட்டத்தின் கீழ் ஐந்து திட்டங்கள் (2 ரயில்வே, நெடுஞ்சாலை மேம்பாட்டின் 3 திட்டங்கள்) மதிப்பீடு செய்யப்பட்டன.  பல்முனை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த  ஒருங்கிணைந்த மேம்பாடு, கடைக்கோடி பகுதிக்கும் இணைப்பு , பல்வகை வாகன முனையங்களுக்கிடையில் இணைப்பு ஆகிய குறிக்கோள்கள் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த திட்டங்கள் மூலம் பயண நேரங்களைக் குறைக்கவும், போக்குவரத்து வசதியை அதிகரிப்பதன் மூலமும் …

Read More »

தேசிய ஆயுஷ் இயக்கத்தில் சித்த மருத்துவர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது – ஆயுஷ் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா

பொது சுகாதாரத்திற்கான சித்த மருத்துவம் என்ற கருப்பொருளில் 8 வது சித்த தினம் 19 டிசம்பர் 2024 அன்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கில் கொண்டாடப்பட்டது, இவ்விழாவை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தமிழ்நாட்டின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்ச்சியில் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்திய ராஜேஷ் கோட்டெச்சா சிறப்பு …

Read More »

நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறாவிட்டால், அது பொருத்தமற்றதாக மாறிவிடும்: குடியரசு துணைத்தலைவர்

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இல்லாவிட்டால் அவை நடவடிக்கைகள் அர்த்தமற்றதாக இருக்கும்  என்று  குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். மக்கள் பிரச்சனைகள் குறித்து அவையில் விவாதிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும்  ஆக்கப்பூர்வமான விவாதங்கள் ஜனநாயக மாண்புகளைக் காக்க உதவிடும் என்றும் கூறினார். இந்திய அரசியலமைப்புச் சட்டம்  ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து உறுப்பினர்கள் செயல்பட வேண்டும்  என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்திய வனப்பணி பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றிய திரு. தன்கர், வளர்ச்சி, சுற்றுச்சூழல் விவகாரங்களை அரசியல் ஆக்கக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார். “தேசிய பாதுகாப்பு மற்றும்  நாட்டின் மேம்பாட்டுத்திட்டங்கள் குறித்த விவாதங்கள் ஜனநாயக மாண்புகளைக் காக்கும் வகையில் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார். …

Read More »

தேசிய அளவில் பல மாநில கூட்டுறவு சங்கங்கள்

மத்திய கூட்டுறவு அமைச்சகம் ஏற்றுமதி, இயற்கை விளைபொருள் மற்றும் தரமான விதைகளுக்கு தலா ஒன்று வீதம் மூன்று தேசிய அளவிலான பல மாநில கூட்டுறவு சங்கங்களை அமைத்துள்ளது. இச்சங்கங்கள் பல மாநில கூட்டுறவு சங்க சட்டம், 2002-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சங்கத்திற்கும் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள அனைத்து நிலைகளிலும் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் உறுப்பினராவதற்கு தகுதியுடையவையாகும். அதன் விவரம் வருமாறு: இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட், கிரிஷக் பாரதி …

Read More »

தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் எல்பிஜி எரிவாயுவை விநியோகிக்க அனுமதி

தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களின் (பிஏசிஎஸ்) செயல்பாடுகளை விரிவுபடுத்தி, அதன் மூலம் அவற்றை நிதி ரீதியாக வலுவாகவும், நிலையானதாகவும் ஆக்குவதற்காக, அவை சமையல் எரிவாயு டீவர்ஷிப் பெற விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தனது வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்து பிஏசிஎஸ்-ஐ சமையல் எரிவாயு விநியோகஸ்தராக தகுதி பெறச் செய்துள்ளது. விரிவான அடிமட்ட கட்டமைப்புடன், கிராமப்புற சமூகங்களிடையே நம்பிக்கையுடன் செயல்படும் பிஏசிஎஸ், தொலைதூரப் பகுதிகளில் எல்பிஜி விநியோகத்தில் உள்ள இடைவெளியைக் குறைக்க நன்கு …

Read More »

அஞ்சல் துறையில் 100 நாள் செயல் திட்டம்

அஞ்சல் துறையின் 100 நாள் செயல் திட்டமானது குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில் சேவை வழங்குவதை மாற்றியமைப்பதையும் செயல்திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது நாடு முழுவதும் 5000 அஞ்சல் சேவை முகாம்களை ஒருங்கிணைத்து அரசின் சேவைகள் நேரடியாக கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்லப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியின் குறிக்கோள், அரசின் சேவைகளை நேரடியாக ஒவ்வொருவரின் வீட்டிற்கும் கொண்டு செல்வதாகும். எனவே, இது வேலைவாய்ப்பு சார்ந்த திட்டம் அல்ல. மாறாக ஒரு சேவை வழங்கும் திட்டமாகும்.  100 நாட்கள் இயக்கத்தின் போது, 16,014 அஞ்சல் சேவை முகாம்கள் நடைபெற்றன. இதில் மொத்தம் 9,31,541 நபர்கள் பங்கேற்றனர். அஞ்சல் ஏற்றுமதி மையத்தின் இணையதளத்தில் 3000 புதிய ஏற்றுமதியாளர்களை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி ஆவண உதவி, சந்தை தகவல், பார்-குறியீடு லேபிள் அச்சிடுதல் மற்றும் காகிதமற்ற சுங்க அனுமதி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குகிறது. ‘ஒரு மாவட்டம் – ஒரு தயாரிப்பு’ முன்முயற்சியுடன் இணைந்து, இந்தத் திட்டம் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும், பொருளாதார வளர்ச்சி மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கு பங்களிக்கும். 100 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் 3400க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் இணைந்துள்ளனர். மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தொலைத்தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர். பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலை தெரிவித்தார்.

Read More »

நாடாளுமன்ற கேள்வி : இந்திய விண்வெளி நிலையம் தொடர்பான பணிகள்

பாரதிய அந்தரிக்ஷ் நிலையம் (பிஏஎஸ்) எனப்படும் இந்திய  விண்வெளி நிலையம் குறைந்த புவி சுற்றுப்பாதையில் (எல்இஓ) இந்தியாவின் மனித விண்வெளிப் பயண நோக்கங்களை நிறைவேற்ற உதவும். மனித விண்வெளிப் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மனித விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ள இது உதவும். மற்ற நாடுகளின் செயல்பாட்டு விண்வெளி நிலையங்களைப் போலவே, தேசிய முன்னுரிமைகள், சமூக பயன்பாடுகளை இலக்காகக் கொண்ட மைக்ரோ கிராவிட்டி சூழலில் அதிநவீன அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பல …

Read More »

வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த மக்களவை சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்

பருவநிலை மாற்றத்தின் சவாலை சமாளிக்க சமச்சீரான வளர்ச்சியும்  நீடித்த தன்மையும்  தேவை என்று மக்களவைத் தலைவர்  திரு ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் பருவநிலை மாற்றமும் ஒன்று என்று கூறிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி சுற்றுச்சூழலுக்கு உகந்த  வாழ்க்கைமுறை இயக்கம் மூலம் இந்த சவாலை எதிர்கொள்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது என்றார். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற 2023-25 தொகுதி இந்திய வனப் பணியைச் …

Read More »

குடியரசுத்தலைவர் நிலையத்தில் டிசம்பர் 29 முதல் 15 நாட்கள் மலர் மற்றும் தோட்டக்கலை திருவிழா நடைபெறுகிறது

செகந்திராபாத் போலரத்தில் உள்ள குடியரசுத்தலைவர் நிலையத்தில், 2024 டிசம்பர் 29 முதல் 15 நாட்கள் ‘உத்யன் உத்சவ்’ எனப்படும் மலர் மற்றும் தோட்டக்கலை திருவிழா நடைபெறும். வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஐதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் திருவிழா, இயற்கையைக் கொண்டாடுவதையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மக்களின் பங்களிப்பின் மூலம் நிலைத்தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.  அரங்குகளை பார்வையிட்டும், பயிலரங்குகளில் பங்கேற்றும்  மக்கள் வேளாணமை, தோட்டக்கலையில் ஏற்பட்டுள்ள புதுமைகள், தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்து அறிந்து கொள்ள முடியும். உத்யன் உத்சவ் எனப்படும் திருவிழாவை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் மற்றும் பார்வையாளர்களுக்கான வசதிகள் குறித்து குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு  இன்று (18.12.2024) ஆய்வு செய்தார். குடியரசுத்தலைவர் நிலையத்தின் பார்வையாளர் மையத்தில் மிட்டி கஃபே உணவகம் மற்றும் நினைவுப் பொருட்கள் கடையை அவர்  திறந்து வைத்தார். உரம் தயாரிக்கும் பணியை நேரில் காண வளாகத்தில் உள்ள உரம் தயாரிக்கும் பிரிவையும் பார்வையிட்டார். தோட்டக் கழிவுகளிலிருந்து கரிம உரங்களை உற்பத்தி செய்வதன் மூலம் இந்த உரம் தயாரிக்கும் அலகு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Read More »