லார்சன் & டூப்ரோ லிமிடெட் நிறுவனத்துடன் 155 மிமீ / 52 காலிபர் கே 9 வஜ்ரா-டி ரக பீரங்கிகள் கொள்முதல் செய்வதற்காக 7,628.70 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. 2024-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் எல் அண்ட் டி நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த …
Read More »உணவு மற்றும் பொது விநியோகத்துறை
2024-ம் ஆண்டில் உணவு மற்றும் பொது விநியோகத்துறை மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் வருமாறு:- ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினர் நாட்டில் கோவிட் பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார இடையூறுகளால் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதனை கருத்தில் கொண்டு பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு உணவுத் திட்டத்தின்(கரீப் கல்யாண் அன்ன யோஜனா)கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ் இதுவரையிலான 7 கட்டங்களில் 1118 லட்சம் மெட்ரிக்டன் உணவு தானியங்கள் ஒதுக்கப்பட்டது. …
Read More »அஞ்சல் துறை: 2024 ஆம் ஆண்டின் செயல்பாடுகள்
அஞ்சல் துறை இந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க சாதனைகள், முன்னேற்றங்கள் மற்றும் மைல்கற்களை படைத்துள்ளது. இவை சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்குமான அதன் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன. 2024-ம் ஆண்டிற்கான முக்கிய முயற்சிகள் மற்றும் முன்னேற்றங்கள் பற்றிய சிறு கண்ணோட்டம்: அஞ்சல் நிலைய சட்டம் 2023 என்ற புதிய அஞ்சல் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இது டிசம்பர் 24, 2023 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. இந்த சட்டம் ஜூன் 18, 2024 அன்று நடைமுறைக்கு வந்தது, இது 1898-ம் ஆண்டின் இந்திய …
Read More »இந்திய ரயில்வேயின் பாதுகாப்பிற்கு கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு – இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை
ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடுகளுக்காக கூடுதல் தொலைத்தொடர்பு அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வதற்கான பரிந்துரைகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தொடர்புத் துறைக்கு இந்திய ரயில்வே 26.07.2023 அன்று கடிதம் எழுதியுள்ளது. இந்தக் கடிதத்தில், தனது பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்காக கூடுதல் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யுமாறு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை ஆய்வு செய்து, …
Read More »2024 ஆம் ஆண்டில் தொழிலக மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் செயல்பாடுகள்
உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் சாதனைகளை அடைவது முதல் ஸ்டார்ட்அப் சூழல் அமைப்புகளை ஊக்குவித்தல், அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரித்தல் வரை என பல செயல்பாடுகள் மூலம் இந்தியாவை தற்சார்பானதாகவும் மற்றும் உலக அளவில் சந்தைப் போட்டியை எதிர்கொள்ளும் வகையிலும் உருவாக்குவதில் தொழிலக மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை முக்கிய பங்கு வகித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் இத்துறையின் சில முக்கிய முயற்சிகள் மற்றும் சாதனைகள்: …
Read More »மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், வர்த்தகம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு, நிறுவனங்களுக்கிடையேயான உறவுகள் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான ஐரோப்பிய ஆணையர் திரு மரோஸ் செஃப்கோவிக் உடன் காணொலிக்காட்சி மூலம் உரையாடினார்
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், வர்த்தகம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு, நிறுவனங்களுக்கிடையேயான உறவுகள் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான ஐரோப்பிய ஆணையர் திரு மரோஸ் செஃப்கோவிக் உடன் இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய ஆணையராகப் பொறுப்பேற்ற பின் இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் அறிமுகக் கூட்டமான இதில், இந்திய-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை, உயர்நிலை பேச்சுவார்த்தை, இந்திய-ஐரோப்பிய ஒன்றிய …
Read More »ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேரிட்ட சாலை விபத்துக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி அறிவிப்பு
ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது: “ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் …
Read More »திரு ஓம் பிரகாஷ் சவுதாலா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
ஹரியானா முன்னாள் முதலமைச்சர் திரு ஓம் பிரகாஷ் சவுதாலா மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது: “ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் பல ஆண்டுகளாக மாநில அரசியலில் தீவிரமாக செயல்பட்டவர். சவுத்ரி தேவி லால் அவர்களின் பணிகளை முன்னெடுத்துச் செல்ல தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டார். இந்தத் துயரமான …
Read More »நாடாளுமன்றத்தின் கண்ணியம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பது அனைத்து உறுப்பினர்களின் கூட்டுப் பொறுப்பாகும்: மக்களவைத் தலைவர்
நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும், ஒழுங்கையும் காக்க வேண்டியது அனைத்து உறுப்பினர்களின் கூட்டுப் பொறுப்பு என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று குறிப்பிட்டுள்ளார். 18-வது மக்களவையின் (குளிர்கால கூட்டத்தொடர்) மூன்றாவது கூட்டத்தொடர் இன்று முடிவடைந்த நிலையில், நாடாளுமன்றத்தின் எந்த வாயிலிலும் தர்ணாக்கள் அல்லது ஆர்ப்பாட்டங்களை நடத்துவது பொருத்தமானதல்ல என்று அவர் வலியுறுத்தினார். அத்தகைய விதிமுறைகள் மீறப்பட்டால், அதன் கண்ணியத்தையும் ஒழுங்கையும் பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றத்திற்கு உரிமை உண்டு என்று அவர் மேலும் கூறினார். அனைத்து உறுப்பினர்களும், அனைத்து …
Read More »குடியரசுத் துணைத் தலைவர் சண்டிகர் பயணம்
குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், 2024-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி ஒருநாள் பயணமாக சண்டிகர் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் 5-வது சர்வதேச முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டத்தை அந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், குடியரசுத் துணைத் தலைவருமான திரு ஜக்தீப் தன்கர் தொடங்கி வைக்கிறார்.
Read More »
Matribhumi Samachar Tamil