மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், வர்த்தகம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு, நிறுவனங்களுக்கிடையேயான உறவுகள் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான ஐரோப்பிய ஆணையர் திரு மரோஸ் செஃப்கோவிக் உடன் இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய ஆணையராகப் பொறுப்பேற்ற பின் இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் அறிமுகக் கூட்டமான இதில், இந்திய-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை, உயர்நிலை பேச்சுவார்த்தை, இந்திய-ஐரோப்பிய ஒன்றிய …
Read More »ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேரிட்ட சாலை விபத்துக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி அறிவிப்பு
ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது: “ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் …
Read More »திரு ஓம் பிரகாஷ் சவுதாலா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
ஹரியானா முன்னாள் முதலமைச்சர் திரு ஓம் பிரகாஷ் சவுதாலா மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது: “ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் பல ஆண்டுகளாக மாநில அரசியலில் தீவிரமாக செயல்பட்டவர். சவுத்ரி தேவி லால் அவர்களின் பணிகளை முன்னெடுத்துச் செல்ல தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டார். இந்தத் துயரமான …
Read More »நாடாளுமன்றத்தின் கண்ணியம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பது அனைத்து உறுப்பினர்களின் கூட்டுப் பொறுப்பாகும்: மக்களவைத் தலைவர்
நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும், ஒழுங்கையும் காக்க வேண்டியது அனைத்து உறுப்பினர்களின் கூட்டுப் பொறுப்பு என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று குறிப்பிட்டுள்ளார். 18-வது மக்களவையின் (குளிர்கால கூட்டத்தொடர்) மூன்றாவது கூட்டத்தொடர் இன்று முடிவடைந்த நிலையில், நாடாளுமன்றத்தின் எந்த வாயிலிலும் தர்ணாக்கள் அல்லது ஆர்ப்பாட்டங்களை நடத்துவது பொருத்தமானதல்ல என்று அவர் வலியுறுத்தினார். அத்தகைய விதிமுறைகள் மீறப்பட்டால், அதன் கண்ணியத்தையும் ஒழுங்கையும் பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றத்திற்கு உரிமை உண்டு என்று அவர் மேலும் கூறினார். அனைத்து உறுப்பினர்களும், அனைத்து …
Read More »குடியரசுத் துணைத் தலைவர் சண்டிகர் பயணம்
குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், 2024-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி ஒருநாள் பயணமாக சண்டிகர் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் 5-வது சர்வதேச முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டத்தை அந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், குடியரசுத் துணைத் தலைவருமான திரு ஜக்தீப் தன்கர் தொடங்கி வைக்கிறார்.
Read More »நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்புகளை மதிக்க வேண்டும்: மாநிலங்களவைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்
மாநிலங்களவையில் ஏற்பட்ட அமளிக்கு இடையில், நாடாளுமன்ற நடவடிக்கைகளின் நிலை குறித்து மாநிலங்களவை தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கவலை தெரிவித்துள்ளார். “மாண்புமிகு உறுப்பினர்களே என விளித்து உலகநாடுகள் நமது ஜனநாயக நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளுக்கு ஏற்படுத்தும் இடையூறுகள் மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளையும் சீர்குலைப்பதாகவும் அவர் கூறினார். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய கடமையை புறந்தள்ளக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டுமென்றும், …
Read More »மாநிலங்களவை 266-வது கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் நிறைவுரை
மாண்புமிகு உறுப்பினர்களே, எனது நிறைவுரையை முன்வைக்கிறேன். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டு நிறைவையொட்டி, இந்தக் கூட்டத்தொடரை நிறைவு செய்யும் வேளையில், ஆழ்ந்த சிந்தனைக்கான தருணத்தையும் நாம் எதிர்கொள்கிறோம். வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்ற வளாகத்தில், அரசியல் சாசன தினத்தை நாம் கொண்டாடியது ஜனநாயக விழுமியங்களை மீண்டும் உறுதிப்படுத்துவதாக இருந்தது. இந்தக் கூட்டத் தொடரின் அவை நடவடிக்கைகள் 40.03% ஆக இருந்தது. 43 மணிநேரம் 27 நிமிடங்கள் மட்டுமே அவை ஆக்கப்பூர்வமாக …
Read More »செகந்திராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரிக்கு கௌரவம் மிக்க கொடியை குடியரசுத் தலைவர் வழங்கினார்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு (டிசம்பர் 20, 2024) செகந்திராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரிக்கு கௌரவம் மிக்க கொடிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நாட்டின் மேம்பட்ட பாதுகாப்பு மேலாண்மைத் திறனானது தூதரக ரீதியில் ராணுவ கூட்டாண்மையை வலுப்படுத்தவும், பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவிடும் என்று கூறினார். உலகளவிலான பாதுகாப்பு மன்றங்களில் ஆக்கப்பூர்வமான நிலைப்பாட்டை பராமரிக்கவும் இது இந்தியாவுக்கு உதவிடும். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தேசிய …
Read More »நாடாளுமன்ற கேள்வி:- வனவிலங்கு வாழ்விடங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சி
வனவிலங்கு வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கும், மனித-வனவிலங்கு மோதலை தடுப்பதற்கும் ‘வனவிலங்கு வாழ்விடங்களின் மேம்பாடு’, ‘புலிகள் – யானைகள் திட்டம்’ ஆகியவற்றை உள்ளடக்கிய மத்திய அரசின் நிதியுதவி பெற்ற ‘ஒருங்கிணைந்த வனவிலங்கு வாழ்விட மேம்பாடு’ திட்டத்தின் கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய வனத்துறை அமைச்சகம் நிதி உதவி வழங்குகிறது. நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு பொறுப்பேற்கும் ‘ வன உயிரின வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்திற்கு மொத்தம் ரூ. 10455.46 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.661.78 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ‘புலிகள் – யானைகள் பாதுகாப்புத் திட்டத்திற்கு மொத்தம் ரூ.14757.48 லட்சம் …
Read More »நாடாளுமன்ற கேள்வி:- தேசிய பல்லுயிர் செயல்திட்டம்
கொலம்பியாவின் காலியில் அண்மையில் நடைபெற்ற ஐநா பல்லுயிர் பெருக்க மாநாட்டின் போது இந்தியா தனது தேசிய பல்லுயிர் உத்தி, செயல் திட்டத்தை சமர்ப்பித்தது. இந்தியாவின் தேசிய பல்லுயிர் உத்தி செயல் திட்டம் (NBSAP) பாதுகாப்பு, நிலையான பயன்பாடு, பயன் பகிர்வு ஆகியவற்றை விரிவாக கவனிக்கிறது, நிலப்பரப்பு, கடல் பகுதிகளைப் பாதுகாத்தல், சீரழிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுத்தல், மாசு கட்டுப்பாடு போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. 23 மத்திய அமைச்சகங்கள், பல தேசிய, மாநில அளவிலான அமைப்புகள், சமூகங்கள், பிற பங்குதாரர்களை உள்ளடக்கிய பரந்த ஆலோசனை செயல்முறையின் மூலம் இந்த திட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து …
Read More »
Matribhumi Samachar Tamil