Monday, January 19 2026 | 04:34:09 PM
Breaking News

கழிவிலிருந்து செல்வம் வரை

“பாராட்டுக்குரியது! திறமையான மேலாண்மை, செயலூக்கமான நடவடிக்கை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்த முயற்சியான சிறப்பு இயக்கம் 4.0, சிறந்த முடிவுகளை அடைந்துள்ளது. கூட்டு முயற்சிகள் எவ்வாறு நிலையான முடிவுகளுக்கு வழிவகுக்கும், தூய்மை, பொருளாதார விவேகம் இரண்டையும் ஊக்குவிக்கும் என்பதை இது காட்டுகிறது.” -பிரதமர் நரேந்திர மோடி தூய்மை, திறன் வாய்ந்த கழிவு மேலாண்மை ஆகியவை நல்ல நிர்வாகத்தின் அடித்தளங்களாகும். இந்த நடைமுறைகள் ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை உறுதி செய்வது மட்டுமல்லாமல், நிர்வாக செயல்திறன், மக்களை மையமாகக் கொண்ட ஆளுகை ஆகியவற்றையும் …

Read More »

உத்தராகண்டில் புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் – மத்திய உள்ளதுறை அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்பு

உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி முன்னிலையில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் புதுதில்லியில் இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தப்படுவது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உத்தராகண்ட் மாநிலத்தில் காவல்துறை, சிறைச்சாலைகள், நீதிமன்றங்கள், தடயவியல் தொடர்பான பல்வேறு புதிய விதிகளின் அமலாக்கம் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மத்திய உள்துறைச் செயலாளர், உத்தராகண்ட்  தலைமைச் செயலாளர், உத்தரகண்ட் காவல்துறை தலைவர்  உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். …

Read More »

தேசிய விஞ்ஞான நாடக விழா 2024 டிசம்பர் 27, 28 தேதிகளில் நடைபெறுகிறது

தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் கவுன்சிலின் (என்.சி.எஸ்.எம்) முதன்மை நிகழ்வுகளில் ஒன்று, தேசிய அறிவியல் நாடக விழாவாகும். இந்த ஆண்டு இந்த விழா தில்லியில் உள்ள தேசிய அறிவியல் மையத்தில் 2024 டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி முன்னதாக இந்தியாவின் அனைத்து 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் 40,000-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்று படைப்பு அறிவியல் நாடகங்களை கல்வி வடிவத்தில் நிகழ்த்தினர். இதனைத் …

Read More »

10,000-க்கும் அதிகமான கூட்டுறவு சங்கங்களை நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, புதுதில்லி, பூசாவில் உள்ள ஐசிஏஆர் மாநாட்டு மையத்தில் 2024 டிசம்பர் 25, அன்று நடைபெறும் நிகழ்ச்சியில்  புதிதாக நிறுவப்பட்ட 10,000-க்கும் மேற்பட்ட பன்னோக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், பால், மீன்வள கூட்டுறவு சங்கங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பதிவுச் சான்றிதழ்கள், ரூபே கிசான் கடன் அட்டைகள்,  மைக்ரோ ஏடிஎம்களை திரு அமித் ஷா வழங்குவார். இந்த நிதிக் கருவிகள் பஞ்சாயத்துகள் அளவில் கடன் சேவைகளை எளிதாக அணுகுவதற்கும் நிதி …

Read More »

நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முக்கிய முன்முயற்சிகள் – மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைத்தார்

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் தினக் கொண்டாட்டங்களுக்கு இன்று  தலைமை வகித்து பல்வேறு நுகர்வோர் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய திரு பிரல்ஹாத் ஜோஷி, குறைகள் குறித்த காணொலி விசாரணைகள் நுகர்வோருக்கு நீதிக்கான டிஜிட்டல் அணுகலை வழங்குகின்றன என்று கூறினார். நுகர்வோர் குறைகளை நிவர்த்தி செய்வதை டிஜிட்டல் மயமாக்குவதைக் குறிக்கும் வகையில் 2020-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இ-தாகில் …

Read More »

முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளையொட்டி, மத்தியப் பிரதேசத்தில் கென்-பேட்வா நதிகள் இணைப்புக்கான தேசிய திட்டத்திற்கு பிரதமர் டிசம்பர் 25 அன்று அடிக்கல் நாட்டுகிறார்

முன்னாள் பிரதமர் திரு.அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 25 அன்று மத்தியப் பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார். மதியம் 12:30 மணியளவில், கஜுராஹோவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கியும் வைக்கிறார். தேசிய தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், நாட்டின் முதலாவது நதிகள் இணைப்புத் திட்டமான கென்-பெட்வா நதிகளை இணைக்கும் தேசியத் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் …

Read More »

பிரதமருடன் தமிழ்நாடு ஆளுநர் சந்திப்பு

தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என். ரவி இன்று புதுதில்லியில், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ‘தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi) சந்தித்தார்.”

Read More »

நித்தி ஆயோக்கில் பிரபல பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் சந்திப்பு

2025-26-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் தயாரிப்புக்காக புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் குழுவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நித்தி ஆயோக்கில் கலந்துரையாடினார். “உலகின் நிச்சயமற்ற காலகட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை பராமரித்தல்” என்ற கருப்பொருளில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கலந்து கொண்ட நிபுணர்களின் ஆழமான கருத்துக்களுக்கு பிரதமர் தமது உரையில் நன்றி தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வதில் கவனம் செலுத்தும் வகையில் மனப்பாங்கை முற்றாக …

Read More »

புகழ்பெற்ற பாடகர் முகமது ரஃபியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவு கூர்ந்துள்ளார்

புகழ்பெற்ற பாடகர் முகமது ரஃபி-யின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார். முகமது ரஃபி ஒரு இசை மேதை என்றும், அவரது கலாச்சார  தாக்கம், தலைமுறைகளைக் கடந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: புகழ்பெற்ற முகமது ரஃபி சாஹபின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். அவர் ஒரு இசை மேதை. …

Read More »

குடியரசு துணைத்தலைவர் 2024 டிசம்பர் 25 & 26 தேதிகளில் மேடக், ஐதராபாத் பயணம்

குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர்,  2024 டிசம்பர் 25, 26  ஆகிய  தேதிகளில் மேடக், ஐதராபாத் (தெலுங்கானா) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். குடியரசுத் துணைத் தலைவர் தமது பயணத்தின்போது, தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம், துனிகியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஏஆர்) வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெறும் இயற்கை விவசாயிகள் உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்குவார்.

Read More »