Thursday, April 09 2026 | 06:51:22 PM
Breaking News

தேசிய நுகர்வோர் தின கொண்டாட்டம் புதுதில்லியில் திரு பிரலாத் ஜோஷி தலைமையில் நாளை நடைபெறுகிறது

ஒவ்வொரு ஆண்டும், தேசிய நுகர்வோர் தினம் டிசம்பர் 24 அன்று பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. ஏனெனில் இந்த நாள் இந்தியாவில் நுகர்வோர் இயக்கத்தின் மாறிவரும் முக்கியத்துவத்தை குறிக்கிறது. இந்த நாளில்தான் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. நுகர்வோரின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்காகவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், மோசடி,  சுரண்டல் ஆகியவற்றிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அப்போதிருந்து, வளர்ந்து வரும் சந்தைச் சூழலில் நுகர்வோர் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட பிரச்சினைகள், போக்குகள் மற்றும் சவால்களை …

Read More »

டிராய்-ன் புதிய இணையதளம் அறிமுகம் (https://trai.gov.in/)

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தனது சேவைகளை விரிவுபடுத்தும் வகையில், மேம்படுத்தப்பட்ட இணைய தளத்தை அறிமுகம் செய்துள்ளது.  அதிகரித்து வரும் சமூக ஊடகங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில்,  அனைத்து தரப்பினருக்கும் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட தகவல் பகரப்படுவதற்கு புதிய பகிர்வு அம்சங்கள் உதவிசெய்யும். இந்த இணையதளம், தொலைத்தொடர்பு, ஒலிபரப்பு விதிமுறைகள், கொள்கைகள், சட்டங்கள், புள்ளிவிவரங்கள், உள்ளிட்ட பல்வேறு விரிவான தகவல்களை வழங்குகிறது. இந்தத் தரவுகளை பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், சர்வதேச பிரதிநிதிகள் எளிதில் அணுகிப் பயன்படுத்தலாம். புதிய இணையதளம் பின்வரும் கூடுதல் அம்சங்களை உள்ளடக்கியுள்ளது து: …

Read More »

உலகின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும்: திரு சிவராஜ் சிங் சவுகான்

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்களிப்பு 18 சதவீதமாக உள்ளது. குறிப்பாக கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், நாட்டின் வேளாண் துறை பிற நாடுகளைக் காட்டிலும் வலுவானதாக இருந்தது  என்பதை உலக நாடுகள்  அறிந்து கொண்டுள்ளன. இந்தத் துறையை வலுப்படுத்த மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவை உலகின் உணவு உற்பத்தி மையமாக உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு  வருவதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் …

Read More »

முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பிறந்த நாளையொட்டி பிரதமர் அவரை நினைவுகூர்ந்துள்ளார்

முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவரை நினைவுகூர்ந்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “ஏழைகள் மற்றும் விவசாயிகளின் உண்மையான நலன் விரும்பியான முன்னாள் பிரதமர் பாரத ரத்னா சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்குத்  தாழ்மையுடன் மரியாதை செலுத்துகிறேன். தேசத்திற்கான அவரது அர்ப்பணிப்பும் சேவையும் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.”

Read More »

வேலைவாய்ப்புத் திருவிழாவின்கீழ் மத்திய அரசுத் துறைகள், நிறுவனங்களில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 71,000 -க் கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார்

அரசுத் துறைகள், அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 71,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம்  இன்று வழங்கினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமரின் உறுதிப்பாட்டை இந்த வேலைவாய்ப்புத் திருவிழா எடுத்துக் காட்டுவதாக உள்ளது. நாட்டைக் கட்டமைப்பது, சுய அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கு பங்களிப்பதற்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும். வேலைவாய்ப்புத் திருவிழாவில் உரையாற்றிய பிரதமர் , குவைத் …

Read More »

வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

புதுதில்லியில் உள்ள வர்த்மான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனையின் பட்டமளிப்பு விழாவில் இன்று (டிசம்பர் 23, 2024) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மருத்துவத் தொழில் என்பது வாழ்வாதாரம் மட்டுமின்றி, மக்களின் துன்பங்களைக் குறைப்பது, நோயுற்றவர்களுக்கு சிகிச்சையளிப்பது, சமூகத்தின் நல்வாழ்வுக்கு பங்களிப்பது ஆகிய புனிதமான கடமைகளையும் கொண்டுள்ள தொழிலாகும் என்று கூறினார். மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்களாக, மக்களின் ஆரோக்கியத்தையும் …

Read More »

ஃபிட் இந்தியா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

இந்திய விளையாட்டு ஆணையத்தின் சென்னை பயிற்சி மையம் சார்பில், சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே இன்று (22/12/2024) காலை ஃபிட் இந்தியா  விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. மூத்த தடகள வீரர் சத்யகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  கொடியசைத்து  இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். சுமார் 25-க்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் ஃபிட் இந்தியா உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர் மாதவரம் ரவுண்டானா முதல் புழல் ஏரி வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த விழிப்புணர்வு  பேரணி நடைபெற்றது.        

Read More »

டாக்டர் மன்சுக் மாண்டவியா ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ முன்முயற்சியைத் தொடங்கி வைத்தார்

இந்த வார தொடக்கத்தில் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர்  மன்சுக் மாண்டவியா, ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ முன்முயற்சியை இன்று காலை இங்குள்ள மேஜர் தியான் சந்த் நேஷனல் ஸ்டேடியத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்வில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை  மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் , இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும்  ஸ்டேடியத்தைச் சேர்ந்த இளம்  உடற்பயிற்சியாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். சைக்கிள் ஓட்டுதலின் பரவலான தாக்கத்தைப் பற்றி டாக்டர் மன்சுக் மாண்டவியா , “ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள் முன்முயற்சியானது இந்தியாவில் 1100+ இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. இந்த வார தொடக்கத்தில் தொடங்கப்பட்ட சைக்கிள் ஓட்டுதல்  பற்றிய விழிப்புணர்வை அதிவேகமாக பரப்பியுள்ளது’’ என்றார். “சைக்கிள் ஓட்டுவது இன்றைய தேவை. வளர்ந்த  பாரதத்தின் பார்வைக்கு ஆரோக்கியமான தனிநபர் தேவை, அவர் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குகிறார், இறுதியில் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குகிறார். சைக்கிள் ஓட்டுதலின் நன்மைகள், 2019-ல் மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடியால்  தொடங்கப்பட்ட ஃபிட் இந்தியா இயக்கத்தின் செய்தியை நிலைநிறுத்துகிறது,” என்று  விளையாட்டுத் துறை  அமைச்சர் மேலும் கூறினார். தேசிய தலைநகரில் நடந்த நிகழ்வில் சிஆர்பிஎப் மற்றும் ஐடிபிபி-யைச் சேர்ந்த ஏராளமான சைக்கிள் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர், மேலும் அவர்கள் உடற்பயிற்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இரண்டையும் ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு  மற்றும் மை பாரத் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் பிராந்திய மையங்கள், தேசிய சிறப்பு மையங்கள் மற்றும் கேலோ இந்தியா மையங்கள்  ஆகியவற்றில் ஒரே நேரத்தில் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

Read More »

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, திரிபுராவின் தலாய் பகுதியில் ரூ .668 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று திரிபுராவின் தலாய் பகுதியில் ரூ.668 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். தலாய் பகுதியில் உள்ள ஹடுக்லாவ் பாரா புரு செட்டில்மென்ட் காலனியில் (புருஹா பாரா) புரு ரியாங் சமூகத்தினருடன் திரு அமித் ஷா உரையாடினார், மேலும் அவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களைச் சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில், திரிபுரா முதலமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) மாணிக் சாஹா, மத்திய உள்துறை செயலாளர், புலனாய்வு துறை  இயக்குநர் மற்றும் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் தலைமை இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், புரு ரியாங் சமூகத்தைச் சேர்ந்த 38,000 பேரை குடியமர்த்த மத்திய அரசு வசதி செய்துள்ளது என்று கூறினார். சுமார் 25 ஆண்டுகளாக, மிகவும் கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வரும் புரு ரியாங் சகோதர சகோதரிகளுக்கு தண்ணீர், கழிப்பறை, மின்சாரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். நீண்ட காலமாக இங்கு ஆட்சி செய்தவர்கள் புரு ரியாங் மக்களின் வலியை ஒருபோதும் பார்த்ததில்லை என்றும், ஆனால் மோடி, அவர்களின் துன்பங்களைக் கண்டார், புரிந்துகொண்டார் என்றும் அவர் கூறினார். திரிபுராவில் மாற்றம் ஏற்பட்டு, தங்கள் கட்சி அரசை அமைத்தபோது, அந்த நேரத்தில் மத்தியில் நரேந்திர மோடி அரசும் இருந்தது என்று திரு ஷா குறிப்பிட்டார். அப்போதைய உடன்படிக்கையின் படி, 40,000 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும், வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி, சுத்தமான குடிநீர், கழிப்பறைகள் மற்றும் பெண்களுக்கான கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். முந்தைய  ஆட்சிக் காலத்தில், பல திட்டங்கள் வகுக்கப்பட்டன, ஆனால் அவை ஒருபோதும் நடைமுறைக்கு வரவில்லை என்று அவர் கூறினார். 1998 முதல் மோசமான வாழ்க்கை வாழ்ந்து வரும் புரு ரியாங் சகோதர சகோதரிகளுக்காக பிரதமர் மோடி ஒரு திட்டத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், 11 கிராமங்களை ரூ .900 கோடி செலவில் மறுகுடியமர்த்தவும்  ஒரு திட்டத்தை உருவாக்கினார் என்று திரு அமித் ஷா கூறினார். இந்த கிராமங்களில் தற்போது மின்சாரம், சாலைகள், குடிநீர், இணைப்பு, சூரிய ஒளி தெரு விளக்குகள், மானிய விலையில் தானியக் கடைகள், அங்கன்வாடி பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இந்த 11 காலனிகளில் வசிக்கும் மக்களுக்கும் நாட்டின் மற்ற குடிமக்களைப் போலவே அனைத்து உரிமைகளும் வழங்கப்படுவதை பிரதமர் மோடி  உறுதி செய்துள்ளார். இந்த நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக மோடி அரசு அவர்களுக்கு ரேஷன் கார்டுகள், சுகாதார அட்டைகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளையும் வழங்கியுள்ளது என்றும் திரு ஷா மேலும் கூறினார். இந்த மக்களுக்கு தற்போது 1200 சதுர அடி மனைகள் சொந்தமாக இருப்பதாகவும், மத்திய  அரசின் உதவியுடன் அவர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். கூடுதலாக, மோடி அரசு அவர்களுக்கு 24 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ 5000 உதவித்தொகையை வழங்குகிறது. முந்தைய அரசின் ஆட்சிக் காலத்தில் 2.5% மக்களுக்கு மட்டுமே குடிநீர் வசதி இருந்தது, ஆனால் இன்று 85% வீடுகளில் குழாய் நீர் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். முன்னதாக, எந்தவொரு ஏழைக்கும் இலவச ரேஷன் கிடைக்கவில்லை, ஆனால் இன்று, மோடி  தலைமையின் கீழ், திரிபுராவில் 82% மக்கள் 5 கிலோ அரிசியை இலவசமாகப் பெறுகிறார்கள். திரிபுராவில் உள்ள 80% மக்களின் முழு சுகாதார செலவுகளையும் ரூ .5 லட்சம் வரை மோடி அரசு ஏற்றுக்கொள்கிறது என்று திரு ஷா குறிப்பிட்டார். திரிபுராவில் முதலீடுகள் வருகின்றன, சாலைகள் கட்டப்பட்டுள்ளன, மின்சாரம் மற்றும் கழிப்பறைகள் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்துள்ளன என்று அவர் மேலும் கூறினார். திரிபுராவில் இடைநிற்றல் விகிதம் 3% க்கும் குறைவாக குறைந்துள்ளது, மேலும் சேர்க்கை 67% முதல் 99.5% வரை அதிகரித்துள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சிக்கு வரும்போது, அது நாட்டினதும் மாநிலத்தினதும் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது என்பதை மோடி அரசும், திரிபுரா அரசும் காட்டியுள்ளன என்று திரு ஷா கூறினார். மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசும், திரிபுராவில் திரு பிப்லப் தேப் மற்றும் தற்போது பேராசிரியர் (டாக்டர்) மாணிக் சாஹா  ஆகியோரின் அரசுகளும் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றன என்று அவர் வலியுறுத்தினார். மா திரிபுர சுந்தரியின் பிரமாண்டமான கோயிலின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன, இது உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் தேவியை தரிசனம் செய்வதை எளிதாக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Read More »

‘கடற்படை சிவிலியன்ஸ் ஆண்டு – 2024’ கொண்டாட்டம்

இந்திய கடற்படையின் செயல்பாட்டுத் தயார்நிலையில் கடற்படை சிவிலியன்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை கவுரவிப்பதற்கும் அங்கீகரிப்பதற்கும், 30 டிசம்பர் 2024 அன்று புதுதில்லியில் உள்ள டிஆர்டிஓ பவன்  டாக்டர். டிஎஸ் கோத்தாரி ஆடிட்டோரியத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர்  பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். இந்தியக் கடற்படையானது 2024ஆம் ஆண்டை ‘கடற்படை சிவிலியன்கள் ஆண்டாக’  அறிவித்தது, அதன் நிர்வாகம் மற்றும் அதன் சிவிலியன் பணியாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்துகிறது. இந்த அர்ப்பணிப்பு ஆண்டு, சிவிலியன் மனிதவள நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் சிவிலியன் பணியாளர்களின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான கவனம் செலுத்தும் நடவடிக்கைகளைக் கண்டது. ஆண்டு முழுவதும், நிர்வாகத் திறனை அதிகரிக்கவும், டிஜிட்டல் மாற்றத்தை தழுவவும், புதுமையான பயிற்சி திட்டங்களை அறிமுகப்படுத்தவும், நலன்புரி செயல்பாடுகளை மேம்படுத்தவும் பல முயற்சிகள் செயல்படுத்தப்பட்டன. ‘கடற்படை சிவிலியன்ஸ் ஆண்டில்’ எட்டப்பட்ட முக்கிய மைல்கற்கள், சிவில் பணியாளர்கள் இயக்குநரகத்திற்கான குடிமக்கள் சாசனம், சிவிலியன் பணியாளர் மேலாண்மை குறித்த திருத்தப்பட்ட மனிதவள கையேடு மற்றும் கடற்படை சிவில் மனிதவள மேலாண்மைக்கான பார்வை ஆவணம் போன்ற முக்கிய கொள்கைகள் மற்றும் ஆவணங்களை வெளியிடுதல் ஆகியவை அடங்கும். கடலில் கப்பல்களில் பணிபுரியும் சிவிலியன் பணியாளர்களுக்கு காப்பீடு வழங்குதல் மற்றும் மும்பையில் உள்ள 21 தொழிற்துறை பிரிவுகளுக்கு சிஜிஎச்எஸ்  வசதிகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நலன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்புப் பயிலரங்குகள்  மற்றும் பயிற்சித் திட்டங்களை நடத்துவதன் மூலம் சிவிலியன்  பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் மேம்பாடு வலியுறுத்தப்பட்டது. கடற்படை சிவிலியன்களுக்கான iGOT தளத்தில் பயிற்சி தொகுதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நிதி நன்மைகளை வலுப்படுத்துவதை நோக்கி; பஜாஜ் லைஃப் இன்சூரன்ஸ் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிவிலியன் பணியாளர்களின் ஆயுள் காப்பீட்டுக்காக கையெழுத்திடப்பட்டுள்ளது.  அனைத்து கடற்படை சிவிலியன்களுக்கும் பாதுகாப்பு சம்பள தொகுப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. ‘கடற்படை சிவிலியன்கள் ஆண்டு’, தேசத்தின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு சிறப்பை உறுதி செய்வதில் அதன் சிவிலியன் பணியாளர்களின் முக்கிய பங்கை அங்கீகரிப்பதில் இந்திய கடற்படையின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த முயற்சியானது அனைத்து பங்குதாரர்களுக்கும் வலுவான மற்றும் உள்ளடக்கிய சூழலை வளர்ப்பதற்கான ஒரு சான்றாக விளங்குகிறது.

Read More »