Thursday, December 19 2024 | 09:07:20 AM
Breaking News

தேசிய பஞ்சாயத்து விருதுகளை குடியரசுத் தலைவர் 2024 டிசம்பர் 11 அன்று வழங்குகிறார்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய பஞ்சாயத்து விருதுகள் வழங்கும் விழா 2024, டிசம்பர் 11  அன்று புதுதில்லி, விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில், மத்திய பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் முன்னிலையில், நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கருப்பொருள்களில் அவர்களின் முன்மாதிரியான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், பல்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 விருதாளர்களுக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு …

Read More »

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி புரட்சியில் ராஜஸ்தான் முன்னணியில் நிற்கிறது என்று மத்திய அமைச்சர் திரு. பிரல்ஹாத் ஜோஷி கூறினார்

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளுக்கு ராஜஸ்தானின் முன்னோடி பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டிய மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி புரட்சியில் ராஜஸ்தான் முன்னணியில் நிற்கிறது என்று கூறினார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற ‘ரைசிங் ராஜஸ்தான் உச்சி மாநாட்டில்’ ‘நிலையான எரிசக்தி பொருளாதாரத்தை நோக்கிய மாற்றம்’ குறித்த அமர்வில் அமைச்சர் உரையாற்றினார். தைரியமான இலக்குகள், தொலைநோக்கு சிந்தனை கொள்கைகள் மற்றும் சமீபத்திய …

Read More »

விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் – அக்டோபர், 2024

விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (அடிப்படை: 1986-87=100) 2024, அக்டோபர்  மாதத்தில்  முறையே 11 புள்ளிகள் மற்றும் 10 புள்ளிகள் அதிகரித்து,  1315 மற்றும் 1326 என்ற நிலைகளை எட்டியுள்ளது. 2024, அக்டோபர்  மாதத்தில்  விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான ஆண்டுப்  பணவீக்க விகிதங்கள் முறையே 5.96% மற்றும் 6.00% ஆக பதிவாகியுள்ளன. இது 2023, அக்டோபரில் 7.08% மற்றும் …

Read More »

மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் சேர்க்கை அடையாள அட்டைகள் 25 லட்சத்தை எட்டியது

பிரதமரால் மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் திட்டம் தொடங்கப்பட்டு 2 மாதகாலத்தில் அதில்  பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சம் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ரூ.40 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம்  70 வயது நிறைவடைந்த அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள மூத்த குடிமக்கள்  22000 பேருக்கு பயனளிக்கிறது.  இருதய பரிசோதனை, இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை, பித்தப்பை அகற்றுதல், கண்புரை அறுவை சிகிச்சை, புரோஸ்டேட் அறுவை சிகிச்சை, பக்கவாதம், ஹீமோடையாலிசிஸ், குடல் காய்ச்சல் மற்றும் பிற காய்ச்சல் போன்ற பல்வேறு உபாதைகளுக்கு மூத்த …

Read More »

சிறுதானியம் சார்ந்த உணவுப் பொருட்களை ஊக்குவித்தல்: சுமார் ரூ.4 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது

உணவுப் பொருட்களில் சிறுதானியங்களின் பயன்பாட்டையும்  மதிப்புக் கூட்டலையும் ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு 2022-23-ம் நிதியாண்டு முதல் 2026-27-ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் சிறுதானிய அடிப்படையிலான உணவுப் பொருட்களுக்கு உற்பத்தியுடன் சார்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தை (பிஎல்ஐ) ரூ.800 கோடி செலவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டம் அடிப்படை முதலீட்டுத் தேவையை நீக்குகிறது. இது அதிகமான விண்ணப்பதாரர்களுக்கு பயனிப்பதாக உள்ளது . ஊக்கத்தொகைகளுக்கு தகுதி பெற, திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் அடிப்படை …

Read More »

அஷ்டலட்சுமி மகோத்சவத்தில் “வாங்குவோர்- விற்போர் சந்திப்பு”

வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த துடிப்பான அஷ்டலட்சுமி மகோத்சவம்,  ஒரு பிரத்யேக வாங்குவோர் விற்போர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது. புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, வடகிழக்கு இந்தியாவின் கைவினைஞர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு இடையே நீண்டகால வணிக உறவுகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது. ஜவுளி, பட்டுப்புழு வளர்ப்பு, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள், கற்கள், நகைகள் மற்றும் அது சார்ந்த தயாரிப்புகள், வேளாண்மை மற்றும் …

Read More »

அஷ்டலட்சுமி மகோத்சவத்தில் எட்டு தொழில்நுட்ப அமர்வுகளை வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது

வடகிழக்கு பிராந்தியம் எதிர்கொள்ளும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் தொடர்பாக விவாதிக்க கள வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களாக இருந்த புகழ்பெற்ற குழு உறுப்பினர்களை ஒன்றிணைத்து முதலாவது அஷ்டலட்சுமி பெருவிழாவாவை வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் 2024 டிசம்பர் 7 & 8 தேதிகளில் நடத்தியது. இதில்  எட்டு தொழில்நுட்ப அமர்வுகளுக்கு  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்தப் பிராந்தியத்தில் நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், பெண் தலைமைத்துவம், தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, சுகாதாரம், எரிசக்தி, கலாச்சாரம், கலை, விளையாட்டு போன்றவை  குறித்து ஒவ்வொரு நாளும் …

Read More »

பாதுகாப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு தலைமை இயக்குநர் கிரீஸ் பயணம்

பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.ராணா 2024 டிசம்பர் 10-11 முதல் கிரீஸ் நாட்டில் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, ராணுவத் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் கிரிஸ்டோஸ் சசியாகோஸ் உள்ளிட்ட கிரீஸ் நாட்டின் மூத்த ராணுவத் தலைவர்களுடன் அவர் கலந்துரையாடுவார். முக்கியமான பாதுகாப்பு மற்றும் உத்திசார்ந்த விவகாரங்களில் நிபுணர்களுடன் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக சர்வதேச உறவுகளுக்கான நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள கலந்துரையாடலில் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைமை இயக்குநர் பங்கேற்பார். …

Read More »

ரஷ்யாவில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் துஷில் சேர்க்கப்பட்டது

ஐஎன்எஸ் துஷில் (F 70), அதிநவீன பல்நோக்கு ஏவுகணை போர்க்கப்பல், 2024 டிசம்பர் 09 அன்று ரஷ்யாவின் கலினின்கிராடில் உள்ள யந்தர் கப்பல் கட்டும் தளத்தில் பாதுகாப்புத்துறை  அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் தமது உரையில், இந்த கமிஷன் இந்தியாவின் வளர்ந்து வரும் கடல்சார் வலிமைக்கு பெருமை சேர்க்கும் சான்று என்றும், இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான நீண்டகால நட்புறவில் குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும் விவரித்தார். தற்சார்பு இந்தியா என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு ரஷ்யாவின் …

Read More »

தேசிய அகாடமிகளின் மக்கள் தொடர்பு நடவடிக்கைகள்

நாட்டின் வளமான கலாச்சார பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் வகையில் தேசிய அகாடமிகள் நடவடிக்கைகள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பழங்குடியினர் பகுதிகள் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளையும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அகாடமிகள் மண்டல கலாச்சார மையங்கள், மாநில கலாச்சார மையங்கள் மற்ற பிற அரசு அமைப்புகளுடன் உத்திசார் ஒத்துழைப்புடன் விரிவாக்கம் செய்யப்படுகிறது.  இதன் மூலம் கலைகளுக்கான சூழல்சார் அமைப்பு மேம்படுகிறது . …

Read More »