Saturday, December 06 2025 | 03:46:37 AM
Breaking News

அரசியலமைப்பு படுகொலை தினத்தன்று ஜனநாயக பாதுகாவலர்களுக்கு பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்

அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதன் 50-வது ஆண்டினைக் குறிக்கும் நாளான இன்று, நாட்டின் வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக இருந்த காலத்தில் ஜனநாயகத்தை பாதுகாக்க உறுதியுடன் நின்ற எண்ணற்ற இந்தியர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அரசியல் சட்ட மாண்புகள் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதலை நினைவுகூர்ந்த பிரதமர், அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்ட, பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்ட, எண்ணற்ற அரசியல் தலைவர்கள், சமூக ஊழியர்கள், மாணவர்கள், …

Read More »

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் ஆகியவற்றுக்கு எதிரான சர்வதேச போதைபொருள் ஒழிப்புத் தினத்தை நாளை (ஜூன் 26-ம் தேதி) மத்திய அரசு கடைப்பிடிக்கிறது

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி நாளை (ஜூன் 26-ம் தேதி) புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் சர்வதேச நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு பி.எல். வர்மா தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார். இதில் துறை சார்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் …

Read More »

அரசு இணைய சந்தையில் கொள்முதல் குறித்த பயிலரங்கை பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று சென்னையில் நடத்தியது

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், அரசு இணைய சந்தையில் (GeM) எவ்வாறு கொள்முதல் செய்வது என்பது குறித்த பயிலரங்கை தகவல் மாளிகையில் உள்ள அதன் அலுவலகத்தில் இன்று (25.06.2025) நடத்தியது. இந்தப் பயிலரங்கில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகம், டிடி தமிழ், ஆகாஷ்வாணி, வெளியீட்டுப் பிரிவு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டவர்களுக்கு மத்திய அரசின் கொள்முதல் தளமான https://gem.gov.in/ ஜெம்(GeM)-ல் …

Read More »

அவசரநிலை பிரகடனத்தின் 50-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது குறித்த தீர்மானத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுகளைத் தகர்க்கும் முயற்சியையும் துணிச்சலுடன் எதிர்த்த எண்ணற்ற நபர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து கௌரவிக்கத் தீர்மானிக்கப்பட்டது. 1974-ம் ஆண்டு நவநிர்மாண் இயக்கம், சம்பூர்ண கிராந்தி இயக்கம் ஆகியவற்றுக்கும் தடை விதிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு, பின்னர் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் பல …

Read More »

ஜனநாயக செயல்முறைகளை வலுப்படுத்த நிறுவன ஒருங்கிணைப்பு, நிதி பொறுப்புடைமை மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஆளுகையை மக்களவை தலைவர் வலியுறுத்தியுள்ளார்

மும்பையில் உள்ள மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அன்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தொடங்கி வைத்த நாடாளுமன்றம் மற்றும் மாநில, யூனியன் பிரதேச சட்டப் பேரவைகளின் மதிப்பீட்டுக் குழுக்களின் தலைவர்களின் இரண்டு நாள் தேசிய மாநாடு இன்று நிறைவடைந்தது. இந்நிறைவு அமர்வில் உரையாற்றிய மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, ஜனநாயக செயல்முறைகளை வலுப்படுத்த நிறுவன ஒருங்கிணைப்பை வளர்ப்பது, நிதி பொறுப்புடைமையை மேம்படுத்துவது மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆளுகையை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். …

Read More »

ஸ்ரீ நாராயண குரு – மகாத்மா காந்தி இருவருக்கிடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடலின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

இந்தியாவின் மகத்தான ஆன்மிக மற்றும் அறநெறித் தலைவர்களான ஸ்ரீ நாராயண குரு – மகாத்மா காந்தி ஆகிய இருவருக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடல் குறித்து புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற  நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.  பிரதமர் அனைவருக்கும் தமது மரியாதை கலந்த வாழ்த்துகளை தெரிவித்ததோடு இன்று இந்த அரங்கம் முன்னெப்போதும் இல்லாத தேசத்தின் வரலாற்றுத் தருணத்தைக் காண்கிறது என்றார். நமது சுதந்திரப் …

Read More »

தீவிரவாத எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், ரூபாய் 2,000 கோடி மதிப்பிலான அவசரகாலக் கொள்முதல் ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் இறுதி செய்துள்ளது

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ராணுவத்தின் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, அவசரகாலக் கொள்முதல் தொடர்பான நெறிமுறைகளின் கீழ் பாதுகாப்பு அமைச்சகம் பதின்மூன்று ஒப்பந்தங்களை  இறுதி செய்துள்ளது.  ஒட்டுமொத்தமான ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் ரூ. 1,981.90 கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தங்கள், இறுதி செய்யப்பட்டுள்ளன. அவசரகால கொள்முதல் ஆணையின் கீழ் கொள்முதல் நடைமுறைகள் விரைவுப்படுத்தப்படும். தீவிரவாத செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் பாதுகாப்பு படையினரின் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதை  இந்தக் …

Read More »

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் மத்திய மண்டல கவுன்சிலின் 25வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமை தாங்கினார்

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா, இன்று உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற மத்திய மண்டல கவுன்சிலின் 25வது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் திரு. புஷ்கர் சிங் தாமி, மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் திரு. விஷ்ணு தியோ சாய் ஆகியோர் கலந்து கொண்டனர். உறுப்பு மாநிலங்களின் மூத்த அமைச்சர்கள், மத்திய உள்துறை …

Read More »

கிழக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடனான மண்டல மின்சார மாநாடு மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில் நடைபெறுகிறது

கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மாநிலங்கள் மற்றும்  யூனியன் பிரதேச அரசுகளுடனான மண்டல மின்சார மாநாடு இன்று (ஜூன் 24-ம் தேதி) பாட்னாவில் மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக், ஒடிசா மாநில துணை முதலமைச்சர் திரு கனக் வர்தன் சிங் …

Read More »

இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜூன் 23, 2025) புதுதில்லியில் நடைபெற்ற இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், நம் நாட்டின் வரலாற்றில், கணக்காளர்கள் சமூகத்தில் மிகுந்த மதிப்பைப் பெற்றுள்ளனர் என்று கூறினார். கணக்கியல் மற்றும் பொறுப்புகள் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளதே இதற்கு காரணமாகும். இந்த துறையின் உயர் பொறுப்புணர்வு காரணமாக, அது சிறப்பான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. நவீன காலத்தில், …

Read More »