ஸ்ரீ குரு தேக் பகதூரின் 350-வது தியாக தினத்தை நினைவுகூரும் வகையில், புதுதில்லியில் நடைபெற்ற சர்வமத மாநாட்டில் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று உரையாற்றினார். ஸ்ரீ குரு தேக் பகதூரை, அவர் தைரியத்தின் கலங்கரை விளக்கமாக வர்ணித்தார். அவரது வாழ்க்கையும், தியாகமும் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் சொந்தமானது என்று குறிப்பிட்டார். ஸ்ரீ குரு தேக் பகதூர், தனது உயிரை அரசியல் அதிகாரத்திற்காகவோ, ஒரு நம்பிக்கையின் மேலாதிக்கத்திற்காகவோ அல்லாமல், தனிநபர்கள் உணர்வுபூர்வமாக வாழவும், வழிபடவும் வழிவகை …
Read More »தேசத்தின் துணிச்சல் மிக்க வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள பரம் வீர் காட்சிக்கூடத்திற்கு பிரதமர் வரவேற்பு
குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள பரம் வீர் விருது பெற்றவர்களின் காட்சிக்கூடத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள படங்கள், தேசத்தின் துணிச்சலான வீரர்களுக்குச் செலுத்தப்படும் மனமார்ந்த அஞ்சலி என்றும், அவர்களின் தியாகங்களுக்கு நாடு செலுத்தும் நன்றியின் அடையாளம் என்றும் அவர் கூறினார். தாய்நாட்டை தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்து பாதுகாத்து, இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்துள்ள அந்த வீரத் தளபதிகளை கௌரவிப்பதாக இந்த படங்கள் உள்ளன …
Read More »அணுசக்தியின் உள்ளடக்கம்
நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் அணுசக்திக்கு மிகப்பெரிய ஆற்றல் உள்ளது. நாட்டில் வரையறுக்கப்பட்ட யுரேனிய வளங்களையும், அதிக தோரியம் வளங்களையும் சரியான முறையில் பயன்படுத்தும் நோக்கில், அணுசக்தி உற்பத்தி மற்றும் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை அடைவதற்காக, அணுசக்தித் துறை, செலவழித்த அணு எரிபொருளின் மறுசுழற்சியை அடிப்படையாகக் கொண்ட மூன்று கட்ட அணுசக்தித் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. தொடர்ச்சியாக செயல்படுத்தப்படவுள்ள மூன்று கட்ட அணுசக்தித் திட்டம், உலைகளில் (முதல் நிலை) இயற்கை யுரேனியத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உள்நாட்டில் …
Read More »இயற்கை வேளாண்முறை கோதுமை மற்றும் பருப்பு வகைகளுக்கான தேவை அதிகரிப்பு
இந்திய சந்தையில் இயற்கை வேளாண்முறை கோதுமை மற்றும் பருப்பு வகைகளுக்கான தேவை குறிப்பிடத்தக்க வகையிலும் சீராகவும் அதிகரித்து வருகிறது. ரசாயனம் இல்லாத முறையில் பயிரிடப்படும் உணவுக்கு நுகர்வோர் விருப்பம் குறிப்பாக நகர்ப்புற மற்றும் பகுதி நகர்ப்புற மையங்களில் மாறி வருகிறது . அதிகரித்து வரும் சுகாதார விழிப்புணர்வு, வீட்டு வருவாய் அதிகரிப்பு, சான்றளிக்கப்பட்ட இயற்கை வேளாண் விநியோகத் தொடர்கள் மீதான நம்பிக்கை ஆகியவை தேவையை மேலும் அதிகரித்துள்ளன. தேசிய கூட்டுறவு …
Read More »சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தும் மத்திய அரசின் முன்முயற்சிகள்
பாதுகாப்பான, நம்பகத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய இணையப் பயன்பாட்டை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு கொள்கைகளை வகுத்து செயல்படுத்தி வருகிறது. இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்படும் இணையவழி அச்சுறுத்தல்கள் குறித்து போதிய விழிப்புணர்வுடனும் முழு கவனத்துடனும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இந்திய கணினி அவசரகால பணிக் குழு மற்றும் தேசிய முக்கியத் தகவல் உள்கட்டமைப்புப் பாதுகாப்பு மையம் ஆகியவை இணைந்து முக்கியத் துறைகள் உட்பட டிஜிட்டல் …
Read More »இந்தியா-ஜோர்டான் வர்த்தக மன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகியோர் உரையாற்றினர்
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகியோர் இன்று அம்மான் நகரில் நடைபெற்ற இந்தியா-ஜோர்டான் வர்த்தக மன்றத்தில் உரையாற்றினர். இந்த மன்றத்தில் பட்டத்து இளவரசர் ஹுசைன் மற்றும் ஜோர்டான் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான வணிகத் தொடர்புகளை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை ஜோர்டான் மன்னரும், பிரதமரும் ஏற்றுக்கொண்டனர். மேலும், இரு தரப்பிலிருந்தும் வந்திருந்த தொழிலதிபர்களை, சாத்தியக்கூறுகளையும் வாய்ப்புகளையும் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான பாதையாக மாற்றிக்கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர். ஜோர்டானின் தடையற்ற வர்த்தக …
Read More »புது தில்லியில் நடைபெறவுள்ள உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது உச்சிமாநாட்டில் ஆயுஷ் கண்காட்சி
மத்திய ஆயுஷ் அமைச்சகம், உலக சுகாதார அமைப்புடன் இணைந்து, 2024 டிசம்பர் 17 முதல் 19 வரை புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெறும் இரண்டாவது உலக சுகாதார நிறுவன உலகளாவிய பாரம்பரிய மருத்துவ உச்சிமாநாட்டின் ஒரு முக்கிய அம்சமாக ஆயுஷ் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த உச்சி மாநாட்டில் ஒரு முக்கிய தளமாக இந்தக் கண்காட்சி அமைகிறது. இது இந்தியாவின் ஆயுஷ் மருத்துவ முறைகளையும், உலகம் முழுவதிலுமிருந்து வரும் …
Read More »தேசிய கோகுல் இயக்கம் மற்றும் காமதேனு திட்டம்
கால்நடை உற்பத்தித்திறனை அதிகரிக்க மாநிலங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உதவும் வகையில், மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை நாடு முழுவதும் பின்வரும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளான பீதர் மாவட்டம் போன்றவை இதில் அடங்கும். இங்கு கால்நடைகள் கிராமப்புற வருமானத்தின் முக்கிய ஆதாரமாக அமைகின்றன: 1) தேசிய கோகுல் இயக்கம் : உள்நாட்டு இனங்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு, …
Read More »காசநோய் ஒழிப்புப் பணிகள் குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா கலந்துரையாடினார்
காசநோய் இல்லா இந்தியாவை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் தமிழ்நாட்டின் பங்களிப்பு குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா இன்று கலந்துரையாடினார். காசநோய் ஒழிப்பில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், 2015-ம் ஆண்டு காசநோயால் ஒரு லட்சம் பேரில் 237 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 2024-ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 21 சதவீதம் குறைந்து …
Read More »உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமிலான உயர்மட்ட குழு பஞ்சாயத்து அளவில் பேரிடர் அபாயக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு ₹507.37 கோடி ஒப்புதல் வழங்கியுள்ளது
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையில் இயங்கும் உயர்மட்டக் குழு, 20 மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பேரிடர் அபாயக் குறைப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான தேசிய திட்டத்திற்கு ரூ.507.37 கோடி நிதிக்கு இன்று (டிசம்பர் 16) ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் (NDMA) இணைந்து செயல்படுத்தப்படுகிறது. எந்தவொரு பேரிடரையும் தாங்கும் வகையில் …
Read More »
Matribhumi Samachar Tamil