அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடியை, வாஷிங்டனில் நேற்று அதிபர் டொனால்ட் ஜே.டிரம்ப் வரவேற்றார். சுதந்திரமான, சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், பன்முகத்துவத்தை மதிக்கும் இறையாண்மை மற்றும் உலகின் பெரிய ஜனநாயக நாடுகளின் தலைவர்களான, அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி ஆகியோர் இந்தியா-அமெரிக்காவின் உறுதியான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தினர். இரு நாட்டு மக்களிடையேயான நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் வலுவான ஈடுபாடுகளையும் அவர்கள் உறுதிபடுத்தினர். இரு நாடுகளிடையே “21-ம் நூற்றாண்டிற்கான ராணுவ கூட்டாண்மைக்கான வாய்ப்புகள், விரைவான வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல்” குறித்து அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி புதிய முயற்சியைத் தொடங்கினர். ஒத்துழைப்பில் மாற்றத்தை …
Read More »தாய்லாந்தில் நடைபெற்ற சம்வாத் நிகழ்ச்சியின் போது பிரதமர் ஆற்றிய உரை
நமோ புத்தயா! தாய்லாந்தில் நடைபெறும் இந்த சம்வாத் (விவாத உரையாடல்) பதிப்பில் உங்கள் அனைவருடனும் இணைவது பெரும் கௌரவமாகும். இந்தியா, ஜப்பான் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த பல புகழ்பெற்ற நிறுவனங்கள், தனிநபர்கள் இந்த நிகழ்வை சாத்தியமாக்க பாடுபடுகின்றனர். அவர்கள் அனைவரையும், அவர்களின் முயற்சிகளுக்காக நான் பாராட்டுகிறேன், மேலும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே, எனது நண்பர் திரு ஷின்சோ அபேவை நினைவுகூர இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். 2015-ம் ஆண்டில், சம்வாத் பற்றிய யோசனை …
Read More »சர்வதேச வாழும் கலை மகளிர் மாநாட்டின் தொடக்க அமர்வில் குடியரசுத்தலைவர் கலந்துகொண்டார்
பெங்களூரில் இன்று (பிப்ரவரி 14, 2025) நடைபெற்ற வாழும் கலை அமைப்பின் சர்வதேச மகளிர் மாநாட்டின் தொடக்க அமர்வில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்தியாவின் பெண்கள் சக்தி ஆர்வமாக சாதித்து வருவதாகவும் தங்களின் பங்களிப்பில் உயர்ந்து வருவதாகவும் குடியரசுத் தலைவர் கூறினார். அது அறிவியல், விளையாட்டு, அரசியல், கலை அல்லது கலாச்சாரம் என எத்துறையாக இருந்தாலும், நமது சகோதரிகளும், மகள்களும் தலை நிமிர்ந்து முன்னேறி வருகின்றனர். அவர்கள் …
Read More »பாரம்பரிய மருந்துகள் தர உறுதிப்பாட்டிற்கு இந்தியா – இந்தோனேசியா இடையேயான ஒத்துழைப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது- மத்திய ஆயுஷ் இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ்
பாரம்பரிய மருந்துகள் தர உறுதிப்பாட்டு பிரிவில் ஆயுஷ் அமைச்சகத்தின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையம் மற்றும் இந்தோனேசிய உணவு மற்றும் மருந்து ஆணையம் ஆகியவற்றுக்கு இடையே 2025 ஜனவரி 25-ம் தேதி புதுதில்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தோனேசியாவின் அதிபர் திரு. பிரபோவோ சுபியாண்டோ முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்த …
Read More »ஹரியானாவின் 15வது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை மக்களவைத் தலைவர் தொடங்கி வைக்கிறார்
சண்டிகரில் உள்ள மாநில சட்டமன்ற வளாகத்தில், ஹரியானாவின் 15-வது சட்டமன்றத்திற்குப் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா நாளை (2025 பிப்ரவரி 14) தொடங்கி வைக்கிறார். ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி; ஹரியானா சட்டப் பேரவைத் தலைவர் திரு ஹர்விந்தர் கல்யாண்; சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு பூபிந்தர் சிங் ஹூடா; மாநில அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற …
Read More »உலக வானொலி தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இன்று உலக வானொலி தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த மாதம் 23-ம் தேதி ஒலிபரப்பாகவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சியில் இடம் பெறும் வகையில், தங்கள் கருத்துக்களையும் உள்ளீடுகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் திரு மோடி கூறியிருப்பதாவது: “உலக வானொலி தின வாழ்த்துக்கள்! வானொலியானது மக்களுக்குத் தகவல் அளித்தல், ஊக்கமளித்தல் மற்றும் …
Read More »நீங்கள் சரியாக சாப்பிட்டால், உங்களால் தேர்வுகளை சிறப்பாக எழுத முடியும்!: பிரதமர்
சரியான உணவை உட்கொள்வதும், நன்றாகத் தூங்குவதும் தேர்வுகளை சிறப்பாக எழுத உதவும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவுறுத்தி இருக்கிறார். தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நான்காவது அத்தியாயத்தை நாளை காணுமாறு அவர் கேட்டுக்கொண்டார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவிற்கு பதிலளித்து திரு மோடி கூறியதாவது: “நீங்கள் சரியாக சாப்பிட்டால், உங்களால் தேர்வுகளை சிறப்பாக எழுத முடியும்! தேர்வு குறித்த கலந்துரையாடல் …
Read More »இந்திய குடிமை கணக்குப் பணி, இந்திய அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு (நிதி மற்றும் கணக்குகள்) பணி, இந்திய ரயில்வே மேலாண்மை பணி (கணக்குகள்) மற்றும் இந்திய அஞ்சல் பணியின் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரைச் சந்தித்தனர்
இந்திய குடிமை கணக்குப் பணி, இந்திய அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு (நிதி மற்றும் கணக்குகள்) பணி, இந்திய ரயில்வே மேலாண்மைப் பணி (கணக்குகள்) மற்றும் இந்திய அஞ்சல் பணி ஆகியவற்றின் பயிற்சி அதிகாரிகள் குழுவினர் இன்று (பிப்ரவரி 13, 2025) குடியரசுத்தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், இளம் அதிகாரிகள் பொது நிதிகளை நிர்வகிப்பதாக இருந்தாலும் சரி அல்லது நாடு …
Read More »குடியரசுத்தலைவர் பிப்ரவரி 14 மற்றும் 15 இரு நாட்கள் கர்நாடகா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு பயணம்
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பிப்ரவரி 14 மற்றும் 15 இரு நாட்கள் கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 14-ம் தேதி, பெங்களூரில், வாழும் கலை அமைப்பு ஏற்பாடு செய்துள்ள 10-வது சர்வதேச மகளிர் மாநாட்டின் தொடக்க அமர்வில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். பிப்ரவரி 15-ம் தேதி ராஞ்சியில் உள்ள பிர்லா தொழில்நுட்ப நிறுவனம் – மேஸ்ராவின் பிளாட்டின விழா கொண்டாட்டத்தில் குடியரசுத்தலைவர் உரையாற்றுகிறார்.
Read More »14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்
பாரிஸில் இன்று நடைபெற்ற 14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் திரு. இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் கூட்டாக உரையாற்றினர். பாதுகாப்பு, விண்வெளி, முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, மேம்பட்ட உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, வாழ்க்கை அறிவியல், நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை முறை, உணவு மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் வகையில், இரு தரப்பிலிருந்தும் …
Read More »
Matribhumi Samachar Tamil