குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பிப்ரவரி 14 மற்றும் 15 இரு நாட்கள் கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 14-ம் தேதி, பெங்களூரில், வாழும் கலை அமைப்பு ஏற்பாடு செய்துள்ள 10-வது சர்வதேச மகளிர் மாநாட்டின் தொடக்க அமர்வில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். பிப்ரவரி 15-ம் தேதி ராஞ்சியில் உள்ள பிர்லா தொழில்நுட்ப நிறுவனம் – மேஸ்ராவின் பிளாட்டின விழா கொண்டாட்டத்தில் குடியரசுத்தலைவர் உரையாற்றுகிறார்.
Read More »14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்
பாரிஸில் இன்று நடைபெற்ற 14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் திரு. இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் கூட்டாக உரையாற்றினர். பாதுகாப்பு, விண்வெளி, முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, மேம்பட்ட உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, வாழ்க்கை அறிவியல், நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை முறை, உணவு மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் வகையில், இரு தரப்பிலிருந்தும் …
Read More »ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை அர்ச்சகர் திரு மஹந்த் சத்யேந்திர தாஸ் அவர்களின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை அர்ச்சகர் திரு மஹந்த் சத்யேந்திர தாஸ் அவர்களின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். மதச் சடங்குகள் மற்றும் வேதங்களில் வல்லுநராக மஹந்த் திகழ்ந்தார் என்றும், அவர் தனது முழு வாழ்க்கையையும் பகவான் ஸ்ரீ ராமரின் சேவைக்காக அர்ப்பணித்தார் என்றும் திரு மோடி பாராட்டியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது: “ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை …
Read More »பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணம் குறித்த இந்தியா – பிரான்ஸ் கூட்டு அறிக்கை
பிரெஞ்சுக் குடியரசின் அதிபர் திரு. இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 10 முதல் 12 வரை பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டார். பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய நாட்களில், பிரான்ஸ் மற்றும் இந்தியா இணைந்து செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சிமாநாட்டிற்குத் தலைமை தாங்கின. இதில், பிளெட்ச்லி பார்க் (நவம்பர் 2023) மற்றும் சியோல் (மே 2024) உச்சிமாநாடுகளின் போது எட்டப்பட்ட முக்கியமான முடிவுகளை செயல்படுத்துவதற்காக, அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்கள், சர்வதேச …
Read More »பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்
பிரதமர் திரு நரேந்திர மோடியும் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் தங்களுக்கிடையிலான தனிப்பட்ட நல்லுறவைப் பிரதிபலிக்கும் வகையில், நேற்று பாரிஸிலிருந்து மர்சேயிலுக்கு பிரான்ஸ் அதிபர் விமானத்தில் ஒன்றாகப் பயணித்தனர். இருதரப்பு உறவுகளின் முழு பரிமாணங்கள் மற்றும் முக்கிய உலகளாவிய, பிராந்திய பிரச்சனைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். மர்சேயில் வந்து இறங்கிய பின்னர் தூதுக்குழு நிலை பேச்சுவார்த்தைகள் நடந்தன. கடந்த 25 ஆண்டுகளில் பன்முக உறவாக சீராக உருவாகியுள்ள இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மைக்கான தங்கள் …
Read More »மார்சேயில் இந்திய துணைத் தூதரகத்தை பிரான்ஸ் அதிபரும் இந்திய பிரதமரும் இணைந்து திறந்து வைத்தனர்
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மெக்ரோன் ஆகியோர் இணைந்து மார்சேயில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை இன்று திறந்து வைத்தனர. இந்தத் துணை தூதரகம் திறந்து வைக்கப்பட்டது இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவின் முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இந்த நிகழ்ச்சியில் இருநாட்டுத் தலைவர்களையும் அங்கிருந்த வம்சாவளியினர் அன்புடன் வரவேற்றனர். 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் திரு நரேந்திர மோடி …
Read More »பிரதமரும் பிரான்ஸ் அதிபரும் கூட்டாக ஐடிஇஆர் அணுஉலையைப் பார்வையிட்டனர்
பிரதமர் திரு நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மக்ரோனும் இன்று கடராச்சியில் உள்ள சர்வதேச வெப்ப அணுக்கரு பரிசோதனை உலையை (ஐடிஇஆர்) கூட்டாகப் பார்வையிட்டனர். தலைவர்களை ஐடிஇஆர் தலைமை இயக்குநர் வரவேற்றார். இன்று உலகின் மிகவும் லட்சிய அணுக்கரு இணைவு எரிசக்தி திட்டங்களில் ஒன்றான ஐடிஇஆர்-க்கு எந்தவொரு நாட்டின் தலைவரோ அல்லது அரசாங்கத் தலைவரோ வருகை தருவது இதுவே முதல் முறையாகும். இந்த வருகையின் போது, உலகின் …
Read More »யுனானி தினத்தையொட்டி நாளை தில்லியில் ஒருங்கிணைந்த சுகாதார தீர்வுகள் குறித்த சர்வதேச மாநாட்டை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார்
யுனானி தினத்தையொட்டி தில்லியில் நாளை இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைக்கிறார். மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ஆயுஷ் இணை அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். ஆண்டுதோறும் பிப்ரவரி 11 அன்று, புகழ்பெற்ற யுனானி மருத்துவர், கல்வியாளர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஹக்கீம் அஜ்மல் கானின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில், யுனானி தினம் கொண்டாடப்படுகிறது. மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு முதன்மை ஆராய்ச்சி குழுமமான மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி குழுமம், …
Read More »மஹாகும்ப மேளா 2025: பிரயாக்ராஜில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது; எய்ம்ஸ், பனராஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவ நிபுணர்கள் கனடா, ஜெர்மனி, ரஷ்யாவைச் சேர்ந்த நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்
மஹாகும்பமேளா 2025-ல் யாத்ரீகர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும் மேளா நிர்வாகம் விரிவான மருத்துவ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது. பொதுவான நோய்கள் முதல் சிறப்பு சிகிச்சைகள் வரை, விரிவான சுகாதார வசதிகள் கிடைக்கின்றன. இதுவரை, 7 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகளை உலகத் தரமானதாக மாற்ற, கனடா, ஜெர்மனி, ரஷ்யாவைச் சேர்ந்த நிபுணர்கள், தில்லி எய்ம்ஸ் மற்றும் பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஐ.எம.எஸ். மருத்துவர்களுடன் …
Read More »பிரான்ஸ், அமெரிக்க பயணத்தையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
அதிபர் மேக்ரோனின் அழைப்பையடுத்து, பிப்ரவரி 10 முதல் 12 வரை பிரான்சில் பயணம் மேற்கொள்கிறேன். பாரிஸில், உலகத் தலைவர்கள் மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் கூட்டமான செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாட்டில் இணைத்தலைமை தாங்க நான் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். அங்கு புதுமைக்கண்டுபிடிப்புகள் மற்றும் பரந்த அளவிலான பொது நன்மையைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த, பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான கூட்டு அணுகுமுறை குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள இருக்கிறோம். எனது பயணம் …
Read More »
Matribhumi Samachar Tamil