Saturday, March 07 2026 | 05:53:30 PM
Breaking News

ஜம்மு-காஷ்மீரின் கத்துவாவில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் குடிநீர் திட்டங்கள்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்

மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை, பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீரில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து குடிநீர் திட்டங்களையும் திறம்பட செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். அங்குள்ள கத்துவாவின் ஜஸ்ரோட்டா கிராமத்தில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஏழு குடிநீர் விநியோகத் திட்டங்களை தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார். 25.31 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டங்களால், ஜஸ்ரோட்டா, ராக் ஹோஷியாரி, பட்யாரி, சக்தா சக், பதோலி சார்பாட், மங்க்தியான் உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள 2584 வீடுகளை உள்ளடக்கிய 15,881  பேர் பயனடைவார்கள் என்று அவர் கூறினார். ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் கத்துவா மாவட்டத்தில் 1369.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 303 குடிநீர் வழங்கல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். திட்டங்களை முறையாக செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகள் ஜம்மு-காஷ்மீர் அரசுடன் ஒருங்கிணைந்து தீர்க்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் முதல் 100 நாட்களில் தமது நாடாளுமன்றத் தொகுதியில் செய்யப்பட்ட பணிகளை அமைச்சர் விவரித்தார். தற்போதைய அரசு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு சேவை செய்வதில் ‘முழு அரசு’ அணுகுமுறையுடன் செயல்படுகிறது என்று அவர் தெரிவித்தார். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், வாழ்வாதாரங்களை அதிகரிப்பதற்கும் சுற்றுலாவின் திறனை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், இப்பகுதியில் பசோஹ்லி, மந்தாலியா போன்ற இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். உதம்பூர் மாவட்டத்தின் மன்சர் பகுதி சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றார். வரும் காலங்களில், கத்துவா மாவட்டம் பொருளாதார நடவடிக்கைகளின் முக்கிய மையமாக மாறும் என்றும், உள்ளூர் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்புக்கான வழிகள் அதிகரிக்கும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். ஜம்மு காஷ்மீர் ஜல்சக்தி அமைச்சர் திரு ஜாவேத் அகமது ராணா, ஜல்சக்தித் துறை அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Read More »

புதுதில்லி உலக புத்தக கண்காட்சியில் 41 புத்தகங்களை திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்

புது தில்லி உலக புத்தகக் கண்காட்சி 2025-ல் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமரின் யுவா 2.0 திட்டத்தின் கீழ் 41 புதிய புத்தகங்களை மத்திய கல்வி அமைச்சர் திரு  தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். திரிபுரா ஆளுநர் திரு  இந்திரசேன ரெட்டி நல்லு, இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் உரையாற்றிய திரு  தர்மேந்திர பிரதான், புத்தகங்கள் வெளியிடப்பட்ட 41 இளம் எழுத்தாளர்களை வாழ்த்தினார். அவர்களின் திறனில் நம்பிக்கையை …

Read More »

ஏரோ இந்தியா 2025

அறிமுகம்: ஏரோ இந்தியா, ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சியாகும். பெங்களூருவில் நடைபெறும் இரு வருட விமான கண்காட்சியான இது பாதுகாப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஏரோ இந்தியா இந்தியாவின் முதன்மையான செயல்பாடு விண்வெளி, பாதுகாப்பு கண்காட்சியாகும். இதில் உலகளாவிய விமானத் துறை தொழில் துறையினரும் இந்திய விமானப்படையும் (ஐ. ஏ. எஃப்) பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும். இது உலகளாவிய தொழில்துறை தலைவர்கள், அரசு அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பாதுகாப்பு நிபுணர்களை …

Read More »

தற்சார்பு இந்தியா: இந்திய கடற்படைக்கு 28 இஓஎன்-51 அமைப்புகளுக்காக பிஇஎல் நிறுவனத்துடன் ரூ. 642 கோடி ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது

பாதுகாப்பு அமைச்சகம், இன்று (2025 பிப்ரவரி 08) புதுதில்லியில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) நிறுவனத்துடன் 11 புதிய தலைமுறை கடல் ரோந்து கப்பல்களுக்கான 28 இஓஎன்-51 அமைப்புகளுக்கும் இந்திய கடற்படைக்கு மூன்று கேடட் பயிற்சி கப்பல்களை வாங்குவதற்குமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இஓஎன்-51 என்பது எலக்ட்ரோ ஆப்டிகல் தீ கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும். இது எலக்ட்ரோ ஆப்டிகல், தெர்மல் இமேஜர்ஸ் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இலக்குகளைத் தேடுதல், கண்டறிதல், …

Read More »

15-வது ஏரோ-இந்தியா சர்வதேச கருத்தரங்கு பெங்களூரில் தொடங்கியது

இரு வருட ஏரோ-இந்தியா சர்வதேச கருத்தரங்கின் 15-வது பதிப்பு இன்று (2025 பிப்ரவரி 08) கர்நாடகாவின் பெங்களூருவில் தொடங்கியது. பாதுகாப்பு ஆராய்ச்சி – மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) இராணுவ விமான தகுதி சான்றிதழ் மையம் (செமிலாக்), ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா (ஏஎஸ்ஐ) உடன் இணைந்து ஏரோ இந்தியா 2025-க்கு முன்னோடியாக இரண்டு நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கருத்தரங்கு உலகளாவிய விண்வெளி அரங்கில் ஒரு முக்கிய நிகழ்வாகும். …

Read More »

வலிமையும் உத்வேகமும் பெற இளைஞர்கள் புத்தகங்களின் பக்கம் திரும்ப வேண்டும்: மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா

மக்கள், குறிப்பாக இளைஞர்கள் வலிமையும் உத்வேகமும் பெற புத்தகங்களை நோக்கி திரும்ப வேண்டும் என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார். புகழ்பெற்ற பத்திரிகையாளரும் ராஜஸ்தான் பத்திரிகாவின் தலைமை ஆசிரியருமான திரு குலாப் கோத்தாரி எழுதிய ‘ஸ்ட்ரீஃ தேஹ் சே ஏஜ்’, ‘மைண்ட் பாடி இன்டலெக்ட்’ ஆகிய இரண்டு புத்தகங்களை புதுதில்லி உலக புத்தகக் கண்காட்சி 2025-ல் அவர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், புத்தகங்கள் தனிப்பட்ட …

Read More »

டாக்டர் ஜாகிர் உசேன் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு தலைவர் மலர் தூவி மரியாதை

முன்னாள் குடியரசு தலைவர்  டாக்டர் ஜாகிர் உசேன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 8, 2025) குடியரசுத் தலைவர் மாளிகையில்  அவருக்கு  குடியரசு தலைவர்  திருமதி திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை  செலுத்தினார்.     भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर …

Read More »

பிப்ரவரி 22 முதல் புதிய வடிவத்தில் காவலர் பணி மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும்

காவலர் பணி மாற்றும் நிகழ்ச்சி, பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பிப்ரவரி 22, 2025 முதல் புதிய வடிவத்தில் நடைபெறும். குடியரசு தலைவர்  திருமதி திரௌபதி முர்மு பிப்ரவரி 16, 2025 அன்று தொடக்க நிகழ்ச்சியைப் பார்வையிடுவார். காவலர் பணி மாற்றும் நிகழ்ச்சியின் புதிய வடிவத்தில், குடியரசுத் தலைவர் மாளிகையின்  பின்னணியில் ஒரு துடிப்பான காட்சி மற்றும் இசை நிகழ்ச்சியை மக்கள் காணலாம். இந்த விழாவில் குடியரசு தலைவரின் மெய்க்காவலர்களின் குதிரைகள் …

Read More »

இந்திய கலை வரலாற்று சபையின் 32-வது அமர்வு பிப்ரவரி 8 முதல் 10 வரை நொய்டாவில் உள்ள இந்திய பாரம்பரிய நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இந்தியக் கலை வரலாற்று சபை என்பது குவஹாத்தியை தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்திய கலை பாரம்பரியத்தை ஆய்வு செய்வதற்கான அகில இந்திய அமைப்பாகும். இந்த ஆண்டு, இந்திய கலை வரலாற்று சபையின் 32-வது அமர்வு, 2025 பிப்ரவரி 8 முதல் 10 வரை நொய்டாவில் உள்ள இந்திய பாரம்பரிய நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இந்த அமர்வு “கலை மற்றும் கலாச்சாரத்தில் இந்தியக் காவியங்களை வழங்குதல்” என்ற கருப்பொருளில் நடத்தப்படுகிறது. இது காவியங்களை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு …

Read More »

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய தேசிய நுகர்வோர் உதவி தொலைபேசி எண் அமைப்பை ஏற்படுத்துதல்

நுகர்வோரின் குறைகளுக்குத் தீர்வு காணும் நடைமுறைகளை மேம்படுத்தும் வகையில், நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய தேசிய நுகர்வோர் உதவி தொலைபேசி எண் அமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் பகுதி வாரியாக குறைகளைப் பகுத்தாய்வு செய்து தீர்வு காண வழி கிடைக்கும். இந்தப் புதிய தொழில்நுட்பம் அடிப்படையிலான அணுகுமுறை நுகர்வோர் தொடர்பான விவகாரங்களுக்கு விரைவாகவும், திறமையாகவும் தீர்வு காணும் நடைமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் விளைவாக …

Read More »