தேர்வு குறித்த கலந்துரையாடல் 2025-ஐப் பார்க்குமாறு அனைத்து தேர்வு வீரர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரைப் பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இது மன அழுத்தமில்லாத தேர்வுகளின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய 8 மிகவும் சுவாரஸ்யமான அத்தியாயங்களைக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளதாவது: “தேர்வு குறித்த கலந்துரையாடல் மீண்டும் வந்துவிட்டது, அதுவும் புதிய மற்றும் உயிரோட்டமான வடிவத்தில்!” ”அனைத்து தேர்வு வீரர்கள், அவர்களின் …
Read More »குடியரசுத் தலைவரை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79-வது அமர்வின் தலைவர் சந்தித்தார்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79-வது அமர்வின் தலைவர் திரு பிலிமோன் யாங், இன்று (பிப்ரவரி 6, 2025) குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அமர்வுத் தலைவரை இந்தியாவிற்கு வரவேற்ற குடியரசுத் தலைவர், ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட 80 ஆண்டுகள் என்னும் முக்கியமான மைல்கல்லை நாம் எட்டும் நேரத்தில், ஐ.நா. பொதுச் சபையின் தலைமைப் பதவியை அவர் வகிப்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார். 2025-ம் ஆண்டில் வளர்ச்சிக்கான நிதியுதவி …
Read More »உலக ஒலி-ஒளி பொழுதுபோக்கு உச்சிமாநாட்டில் பட உருவாக்க சவால் போட்டியில் 20 நாடுகள் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து 3,300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன
வேவ்ஸ் என்றழைக்கப்படும் உலக ஒலி-ஒளி பொழுதுபோக்கு உச்சிமாநாட்டில் நடைபெறும் பட உருவாக்க (ரீல் மேக்கிங்) சவால் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா மற்றும் 20 நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து 3,379 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்தப் போட்டிக்கான வரவேற்பை இது எடுத்துக்காட்டுகின்றன. இந்த உச்சிமாநாட்டின் முக்கிய முயற்சியாக தொடங்கப்பட்டுள்ள இந்தப் போட்டி, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கிற்கான உலகின் மையமாக உருவெடுத்துவரும் இந்தியாவின் செல்வாக்கை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் நாட்டில் விரைவாக வளர்ந்து வரும் டிஜிட்டல் படைப்பாளர் பொருளாதாரத்தையும் …
Read More »மகாகும்பமேளா 2025: 233 குடிநீர் தானியங்கி இயந்திரங்கள் மூலம் 24 மணி நேரமும், 40 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கப்படுகிறது
பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவில் நாடு முழுவதிலுமிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தரும் லட்சக்கணக்கான யாத்ரீகர்களுக்குத் தூய்மையான குடிநீர் வழங்க பெரும் அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பமேளா பகுதியில் மொத்தம் 233 குடிநீர் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவை 24 மணி நேரமும் எந்த இடையூறும் இல்லாமல் செயல்படுகின்றன. இந்தக் குடிநீர் தானியங்கி இயந்திரங்கள் மூலம், யாத்ரீகர்கள் தினமும் தூய்மையான ஆர்ஓ (ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ்) குடிநீரைப் பெறுகிறார்கள். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2025 …
Read More »ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு நிலை குறித்த உயர்மட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார்
ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு நிலை குறித்து புதுதில்லியில் இன்று நடைபெற்ற உயர்மட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும், கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை செயலாளர், உளவுத்துறை இயக்குநர், ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர், உள்துறை அமைச்சகம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் கலந்து …
Read More »திரிபுராஅரசால் 2,800-க்கும் மேற்பட்ட பணிநியமனக் கடிதங்களை காணொலிக்காட்சியாக வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்
திரிபுரா அரசால் 2,800-க்கும் மேற்பட்ட பணிநியமனக் கடிதங்களை காணொலிக்காட்சியாக வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த காலங்களில் ஒரு கட்சியின் பணியாளர்களுக்கு மட்டுமே திரிபுராவில் பணிகள் கிடைத்தன என்றும், தற்போது திரிபுரா அரசு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன், எந்த பாகுபாடும், பரிந்துரையும் அல்லது ஊழலும் இல்லாமல் பணிகளை வழங்கி வருகிறது என்று தெரிவித்தார். தற்போதைய திரிபுரா முதலமைச்சர் பேராசிரியர் …
Read More »15-வது சர்வதேச உலக மருந்தியல் கூட்டத்தில் மத்திய சுகாதார, குடும்ப நல இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் சிறப்புரை
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல், அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மருந்தியல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ள 15-வது சர்வதேச உலக மருந்தியல் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் சர்வதேச அளவில் மருந்தியல் துறை தலைவர்கள், ஒழுங்குமுறை அதிகாரிகள், தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மருந்துப் பொருட்களின் தரநிலைகள் மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் திருமதி படேல், சர்வதேச தரத்தில் …
Read More »நொய்டாவில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனத்தில் சிப் வடிவமைப்பிற்கான சிறப்பு மையத்தை மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன் திறந்துவைத்தார்
மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன் நொய்டா வளாகத்தில் உள்ள தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் சிப் வடிவமைப்பு சிறப்பு மையத்தை திறந்து வைத்தார். தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு மையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான சாக்டீம்அப் செமிகண்டக்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சி, இந்தியாவின் குறைமின்கடத்தி வடிவமைப்பு, மேம்பாட்டு திறன்களை முன்னேற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கிறது. மத்திய அரசின் …
Read More »கார்வார் கடற்படை தளத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை முப்படை தலைமைத் தளபதி தொடங்கி வைத்தார்
முப்படைகளின் தலைமைத் தளபதியும் ராணுவ விவகாரங்கள் துறை செயலாளருமான ஜெனரல் அனில் சவுகான், இந்திய கடற்படையின் மூத்த மாலுமிகளுக்கான குடியிருப்புகளையும், கார்வாரில் உள்ள கடற்படைத் தளத்தில் டிரங்க் வசதிகளின் ஒரு அங்கமாக பிரதான விநியோக துணை நிலையத்தையும் 2025 பிப்ரவரி 04-ம் தேதி தொடங்கி வைத்தார். கடற்படை துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் உள்ளிட்ட துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். ராணுவ அதிகாரிகளுக்கான 240 குடியிருப்பு அலகுகளைக் …
Read More »அல்ஜீரியா ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சைத் சானெக்ரிஹா இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார்
அல்ஜீரியாவின் தேசியப் பாதுகாப்பு அமைச்சரின் பிரதிநிதியும், மக்கள் தேசிய இராணுவத் தலைமைத் தளபதியுமான ஜெனரல் சைத் சானெக்ரிஹா 2025 பிப்ரவரி 06 முதல் 12 வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். பெங்களூரில் நடைபெறும் ஏரோ இந்தியா 2025-ன் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்குடன் அவர் உரையாடவுள்ளார். சர்வதேச நாடுகளுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பு தொடர்பான நெகிழ்திறன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்ற தலைப்பில் நடைபெறும் பாதுகாப்பு …
Read More »
Matribhumi Samachar Tamil