புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் மத்திய தகவல் , ஒளிபரப்பு, ரயில்வே, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் முக்கிய முன் முயற்சிகளை தொடங்கிவைத்தனர். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, மத்திய கலாச்சாரத்துறை செயலாளர் அருண் சாவ்லா, இந்திய திரைப்பட தயாரிப்பாளர் திரு சேகர் கபூர் மற்றும் பிரசார் பாரதியின் தலைமை …
Read More »மஹா கும்பமேளா 2025: பிரயாக்ராஜில் அமைக்கப்பட்டுள்ள மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகத்தின் அரங்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வை உருவாக்குகிறது
பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளா – 2025-ல் பார்வையாளர்களிடையே சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகம் 2025 ஜனவரி 13 முதல் 15 வரை ஓர் அரங்கை அமைத்திருந்தது. நீடித்த வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான பல்வேறு தொழில்நுட்பங்களை இந்த அரங்கு காட்சிப்படுத்தியது. மெய்நிகர் காட்சி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சைக்கிள் ஓட்டுதல், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான செல்ஃபி போன்ற நவீன தொழில்நுட்பங்களை அனுபவிக்கும் வாய்ப்பு இந்த அரங்கிற்கு வருகை புரிந்தவர்களுக்கு கிடைத்தது. இந்த அரங்கிற்கு வருகைபுரிந்தவர்கள் …
Read More »கடல்சார் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்தோனேசிய கடற்படை குழுவுக்கு இந்தியா வரவேற்பு
குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இந்தியா வந்துள்ள இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன், அந்நாட்டு கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் முகமது அலியுடன் கூடிய உயர்நிலைக்குழுவும் வந்துள்ளது. தனது இந்தப் பயணத்தின் போது, இந்தோனேசிய கடற்படைத் தளபதி அட்மிரல் முகமது அலி, இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதியை சந்தித்து இருநாடுகளுக்கிடையேயான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இருநாடுகளைச் சேர்ந்த கடற்படைகளின் …
Read More »சட்டமுறை எடையளவு (இந்திய நிலையான நேரம்) விதிகள், 2025-ன் வரைவு அறிக்கையை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ளது
‘ஒரே நாடு, ஒரே நேரம்’ என்ற முறையை இலக்காகக் கொண்டு, துல்லியமான நேரத்தை நாடு முழுவதிலும் கடைபிடிக்கும் வகையில் மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறையானது தேசிய இயற்பியல் ஆய்வகம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய நிலையான நேரத்தை துல்லியமாகக் கணக்கிடும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஐந்து எடையளவு தொடர்பான சட்டமுறை ஆய்வகங்களிலிருந்து நேரத்தை கணக்கிடும் முறைக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் …
Read More »இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மற்றும் அயர்லாந்து பிரதமருக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவல் மேக்ரோன், அயர்லாந்து பிரதமர் திரு மைக்கேல் மார்ட்டின் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபரின் எக்ஸ் தள பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது: “எனதருமை நண்பர், அதிபர் இம்மானுவல் மேக்ரோன் அவர்களே @EmmanuelMacron, இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு உங்களின் அன்பான வாழ்த்துகள் மிகவும் பாராட்டத்தக்கவை. …
Read More »ஒடிசா, உத்தராகண்ட் மாநிலங்களுக்கு பிரதமர் நாளை(ஜனவரி 28) பயணம் மேற்கொள்கிறார்
பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (ஜனவரி 28) ஒடிசா, உத்தராகண்ட் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில், புவனேஸ்வரில் உள்ள ஜனதா மைதானத்தில் செழிப்பான ஒடிசா – ஒடிசாவில் உற்பத்தி செய்வோம் மாநாடு 2025-ஐ அவர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்குச் செல்லும் அவர், மாலை 6 மணியளவில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்கிறார். ஒடிசா அரசால் நடத்தப்படும் இந்த முதன்மையான …
Read More »தேசிய மாணவர் படை பேரணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
தில்லியில் கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் இன்று நடைபெற்ற தேசிய மாணவர் படையின் வருடாந்திர பேரணியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட பிரதமர், சிறந்த மாணவ-மாணவியர்களுக்கான விருதுகளை வழங்கினார். தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு அங்கு கூடியிருந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், 18 நட்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 தேசிய மாணவர் படை வீரர்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டுள்ளதாகவும் அவர்களையும் …
Read More »தேவபூமியான உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியிருப்பது நல்ல அறிகுறி ஆகும் – குடியரசு துணைத்தலைவர்
உத்தராகண்ட் மாநிலம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், இன்றைய நாள் புனிதமானது என்று கூறினார். மாநிலங்களவை உள்ளகப் பயிற்சித் திட்டத்தின் ஐந்தாவது தொகுதி பங்கேற்பாளர்களுக்கான தொடக்க நிகழ்ச்சிக்கு குடியரசுத் துணைத் தலைவர் தலைமை தாங்கினார். குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற உள்ளகப் பயிற்சித் திட்டத்திற்கான இணைய தளத்தையும் குடியரசு துணைத்தலைவர் தொடங்கி வைத்தார். மாநிலங்களவை …
Read More »மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் புதுதில்லியில் கைத்தறி மாநாட்டை 28.01.2025 அன்று தொடங்கி வைக்கிறார்
“கைத்தறி மாநாடு -மந்தன்” என்பது கைத்தறி துறையின் பல்வேறு பங்குதாரர்களுடன் ஒரு கலந்துரையாடும் நிகழ்வாகும். கைத்தறி நெசவாளர்கள்/உற்பத்தியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், வாங்குபவர்கள், வடிவமைப்பாளர்கள், கல்வியாளர்கள், தொடக்க நிறுவனர்கள், கைத்தறி தொழில்முனைவோர், கைத்தறி கூட்டுறவு நிறுவனங்கள், மின்னணு வர்த்தக நிறுவனங்கள், பிரதமரின் பண்ணாயிலிருந்து வெளிநாடு வரையிலான தொலைநோக்கை செயல்படுத்துவதற்கான ஒரு தளமாகும். மாநாட்டில் 21 குழு உறுப்பினர்கள், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வரும் 120 கைத்தறி பயனாளிகள், நெசவாளர் சேவை மையங்கள், சுமார் 25 மாநில அரசுகள் என கிட்டத்தட்ட 250 பங்குதாரர்கள் கலந்துகொள்வார்கள். ஜவுளி அமைச்சகத்தின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகள் (கைத்தறி, பட்டு & ஜவுளி) மற்றும் அதிகாரிகள். கைத்தறித் துறையின் வளர்ச்சிக்கான சிறந்த நடைமுறைகள், புதுமைகள் மற்றும் உத்திகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், பல்வேறு பங்குதாரர்கள் ஒன்றிணைவதற்கும் ஒரு தளமாகச் செயல்படுவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஒட்டுமொத்த கைத்தறி தொழிலை மேம்படுத்துவதற்கும் அரசின் தொடர்ச்சியான முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது. வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ன் வளர்ச்சி இயந்திரமாக செயல்படும் அபரிமிதமான ஆற்றலுடன் கைத்தறி துறையை ஒரு முக்கிய துறையாக மேம்படுத்தவும் இது உதவும். தொடக்க விழாவிற்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
Read More »ராஷ்ட்ரிய கர்மயோகி ஜன் சேவா திட்டம்: தன்னலமற்ற சேவையை வளர்க்கிறது
மத்திய சட்ட விவகாரங்கள் துறை, சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், ராஷ்ட்ரிய கர்மயோகி ஜன் சேவா திட்டத்தை புது தில்லி கேஜி மார்க்கில் உள்ள சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் நிறுவனத்தில் ஏற்பாடு செய்தது. இந்த கலந்துரையாடல் நிகழ்வு, மக்களை மையப்படுத்திய நிர்வாக அணுகுமுறையை வலியுறுத்தும் வகையில், கர்மயோகி வழியைக் கடைப்பிடிக்க, மத்திய அரசு ஊழியர்களை ஊக்குவிக்கவும், அறிவூட்டவும், வழிகாட்டவும் நோக்கமாக கொண்டிருந்தது. . இந்தத் திட்டம் சேவை உணர்வு மற்றும் …
Read More »
Matribhumi Samachar Tamil