தேசிய தூய்மை கங்கை இயக்கத்தின் கீழ், மகா கும்பமேளா 2025-க்காக ரூ.152.37 கோடி செலவில் சிறப்பு தூய்மை மேலாண்மை நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த முயற்சிகள் நவீன தொழில்நுட்பத்தை பாரம்பரிய நடைமுறைகளுடன் இணைத்து சுத்தமான, நிலையான சூழலை உறுதி செய்கின்றன. கங்கையின் தூய்மையைப் பராமரித்தல், பயனுள்ள கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் இல்லாத மண்டலங்களை உருவாக்குதல் ஆகியவை மகா கும்பமேளா 2025-ன் முன்னுரிமைகளாகும். செப்டிக் டேங்குகள் பொருத்தப்பட்ட 12,000 பிளாஸ்டிக் கழிப்பறைகள், உறிஞ்சும் குழிகளுடன் கூடிய 16,100 எஃகு கழிப்பறைகள் என …
Read More »நான்கு நகரங்களில் நடத்தப்பட்ட மொபைல் சேவைகள் குறித்த அறிக்கையை இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது
புதுதில்லி, ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்), அகமதுநகர் (மகாராஷ்டிரா) , ஹைதராபாத் (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய நான்கு நகரங்களில் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தனது அதிகாரப்பூர்வ முகமை மூலம் வெளிப்படையான சோதனையை நடத்தியது. குரல், தரவு சேவைகளுக்கான செல்லுலார் மொபைல் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களின் சேவை தொடர்பான தரத்தை மதிப்பீடு செய்வதற்கு இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையில் பாரதி ஏர்டெல் நிறுவனம், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் போன்ற நிறுவனங்களின் செயல்திறன், சேவைகளுக்கான உரிமம் பெற்ற பகுதிகளில் பயன்படுத்தப்படும் …
Read More »உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாட்டில் 2025-ல் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ்-க்ளோஸ்டர்ஸில் 2025-ம் ஆண்டு ஜனவரி 20 முதல் 24 தேதி வரை நடைபெறவுள்ள 55- வது உலக பொருளாதார மன்றத்தின் (WEF) வருடாந்திர கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படவுள்ளது. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது முதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன்களை விரிவுபடுத்துவது, உலக நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவது போன்ற பல்வேறு அம்சங்களில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து “அறிவார்ந்த யுகத்திற்கான ஒத்துழைப்பு.” என்ற கருப்பொருளில் விவாதிக்ப்படவுள்ளது. இந்த மாநாட்டை மையமாகக் கொண்டு …
Read More »18-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டின் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான விருதுகளை வழங்கினார்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இன்று (ஜனவரி 10, 2025) நடைபெற்ற 18-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டின் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், வெளிநாடுவாழ் இந்தியர்கள் நமது நாட்டின் சிறந்த பிரதிநிதிகள் என்று கூறினார். இந்தப் புனித பூமியில் பெறப்பட்ட அறிவு மற்றும் திறன்களை மட்டும் அவர்கள் தங்களுடன் எடுத்துச் செல்லவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது …
Read More »திருச்சி என்ஐடி-யில் ஆறு நாள் ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம்
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் பொறியியல் துறை, செயல் மாதிரியாக்கம், உருவகப்படுத்துதல் மற்றும் செயலாக்கக் கட்டுப்பாட்டில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த ஆறு நாள் ஏ.ஐ.சி.டி.இ. அடல் ஆன்லைன் ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டம் இத்துறைகளில் பேராசிரியர்கள் தங்களின் அறிவுத் திறன்களை மேம்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இந்தத் திட்டமானது, இந்தியா முழுவதிலுமிருந்து 14 மாநிலங்களைச் சேர்ந்த 140 பங்கேற்பாளர்களை ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பல்வேறு துறைகளின் நிபுணர்கள், தங்கள் அறிவுத்திறனைப் பகிர்ந்துகொள்ள ஒன்று கூடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த எஃப் டி பி -யில் இந்தியாவிலிருந்து 10 சிறந்த பேச்சாளர்கள் மற்றும் கனடா மற்றும் ஸ்பெயினிலிருந்து 2 சர்வதேச நிபுணர்களைக் கொண்ட 13 தொழில்நுட்ப …
Read More »மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் மண்டபம் மண்டல மையத்தில் கடற்பாசிகளுக்கான சிறப்பு மையத்தை தொடங்கி வைத்தார்
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் 2025 ஜனவரி 9 அன்று, இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் – மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்டபம் மண்டல மையத்தில் கடற்பாசிகளுக்கான சிறப்பு மையத்தை தொடங்கி வைத்தார். நாட்டில் கடற்பாசி வளர்ப்பின் முழுமையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சிறப்பு மையத்தின் பெயர் பலகையையும், கடற்பாசிகளுக்கான ஆலை உற்பத்தி அலகையும் அவர் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து மையத்தில் உள்ள கடற்பாசி செடிகள் உற்பத்தி அலகு, கடல் குஞ்சு பொரிப்பக வளாகம், தேசிய …
Read More »அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் சென்னையில் 24.01.2025 அன்று நடைபெற உள்ளது
அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் சென்னை மத்தியக் கோட்டம் தியாகராயநகர் அலுவலகத்தில் 24.01.2025 அன்று காலை 11 மணிக்கு முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பின்வரும் அஞ்சல் அலுவலகங்களின் சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்கள் புகார்கள் ஏதேனும் இருப்பின் தபால் மூலமாகவும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் 8939646404 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் 20.01.2025-க்குள் அனுப்பலாம். தியாகராய நகர், தலைமை தபால் அலுவலகம்- 600 017, தியாகராய நகர் வடக்கு தபால் அலுவலகம்- 600 017. …
Read More »வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் 2025 புதுதில்லியில் 2025 ஜனவரி 10 முதல் 12 வரை நடைபெறுகிறது
மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இளைஞர் நலத்துறை 2025 ஜனவரி 10 முதல் 12 வரை புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு புதுமையான தீர்வுகளை வழங்க இளைஞர்களுக்கு ஒரு தனித்துவமான தளத்தை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று …
Read More »மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி உதய்பூரில் நாளை தொடங்குகிறது
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ராஜஸ்தானின் உதய்பூர் நகரில் 2025 ஜனவரி 10 முதல் 12 வரை சிந்தனை அரங்கம் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த மூன்று நாள் நிகழ்வு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் உட்பட முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்து, நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் நலனில் சவால்களை ஏற்படுத்தும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், சவால்களைச் சமாளிக்க சிறந்த தீர்வுகளை வெளிக்கொணரவும் உதவும். இந்த நிகழ்ச்சியில் …
Read More »சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் : 2024-ம்ஆண்டு செயல்பாடுகள்
பாரத்மாலா பரியோஜனா போன்ற முன்னோடித் திட்டங்கள் மூலம் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு 60% வளர்ச்சியடைந்துள்ளது. 2014-ல் 91,287 கிமீ ஆக இருந்த நெடுஞ்சாலை தற்போது 146,195 கிமீ ஆக அதிகரித்துள்ளது. தேசிய அதிவேக வழித்தடங்கள் 2014-ல் 93 கிலோமீட்டராக இருந்தது தற்போது 2,474 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் …
Read More »
Matribhumi Samachar Tamil