Saturday, September 26 2026 | 12:35:51 PM
Breaking News

காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் 6-வது பட்டமளிப்பு விழா

மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழில் பூங்காவில் செயல்படும் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் 6-வது பட்டமளிப்பு விழா இன்று (08 ஜனவரி 2025) நடைபெற்றது.    இவ்விழாவில் தோல் ஏற்றுமதி கழகத்தின் தென்னக பிராந்திய தலைவர் திரு அப்துல் வஹாப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 2020-ம் ஆண்டின் இளநிலை மற்றும் 2022-ம் ஆண்டின் முதுநிலை, …

Read More »

ஒடிசா மாநிலம் ஜகத்பூரில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய உயர்திறன் மையத்தை மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே பார்வையிட்டார்

ஒடிசா மாநிலம் ஜகத்பூரில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய உயர்திறன்  மையத்தை  மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே இன்று பார்வையிட்டார். கயாக்கிங், கேனோயிங், படகோட்டுதல் ஆகியவற்றில் ஈடுபட்டு உள்ள பர்மிந்தர் சிங், பி.ரோஜி தேவி, எல்.நேஹா தேவி போன்ற நம் நாட்டு வீரர்கள் மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்களையும் சாம்பியன்களையும் உருவாக்குவதற்கான முக்கிய மையமாக இது உருவெடுத்துள்ளதற்கு இணையமைச்சர் பாராட்டு தெரிவித்தார். …

Read More »

செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் தொழில்நுட்பங்களை மனிதசமுதாயத்தின் நலனுக்காக சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வதே சவால் – மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் தொழில்நுட்பங்கள் இனி விருப்பப்பட்டால் தேர்ந்தெடுத்துக்கொள்பவை அல்ல, அவை எதிர்காலத்திற்கான ஒரே சாத்தியமான தேர்வாகும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். பி.எச்.டி வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பில் இன்று இணையதள பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் குறித்த தேசிய மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் சிங், “மனிதசமுதாயத்தின் நலனுக்காக இந்த தொழில்நுட்பங்களை சிறப்பாகப் பயன்படுத்துவது சவால்மிக்கது” என்று கூறினார். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த வருடாந்திர மாநாட்டில் தனக்குள்ள தொடர்பு …

Read More »

ஸ்டார்ட்-அப் நிலைத்தன்மைக்கு டாக்டர் ஜிதேந்திர சிங் யோசனை

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனி பொறுப்பு); புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நீடித்து நிலைத்திருப்பதை உறுதி செய்ய தொழில்துறையோடு ஆரம்பக் கட்டத்திலேயே  இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். புதிய கண்டுபிடிப்புகளில் பொறுப்புணர்வு மற்றும் பகிரப்பட்ட தன்மையை வளர்க்கும் கூட்டு நிதி அணுகுமுறை வேண்டும் என அவர் …

Read More »

பயணிகளுக்கு பாதுகாப்பான, விரைவான, உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்குவதை ரெயில்வே நோக்கமாகக் கொண்டு நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 76% செலவிடுகிறது

நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு விரைவான, பாதுகாப்பான, உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை குறைந்த செலவில் வழங்குவது எளிதான காரியம் அல்ல. ஆனால், இந்திய ரயில்வே புவியியல், கலாச்சாரம், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ரயில்வே தனது பட்ஜெட் ஒதுக்கீட்டில் 76 சதவீதத்தை நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்கள் மற்றும் 4 நாட்களில் செலவிட்டுள்ளது. 2025-ம் ஆண்டு ஜனவரி 5 வரை இந்திய ரயில்வேயின் …

Read More »

இந்தியாவின் வளர்ச்சிக்கு உணவு பதனப்படுத்தும் தொழில்துறை முக்கியமானது: சிராக் பாஸ்வான்

மத்திய உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் இன்று கிரேட்டர் நொய்டாவில் உள்ள எக்ஸ்போ மையத்தில் இண்டஸ்ஃபுட் 2025-ன் 8-வது பதிப்பைத் தொடங்கி வைத்தார். பாபா ராம்தேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். டிபிசிஐ தலைவர் திரு மோஹித் சிங்லா, அபீடா தலைவர் திரு அபிஷேக் தேவ், பிகாரம் சந்த்மாலின் நிர்வாக இயக்குநர் திரு ஆஷிஷ் அகர்வால், எவரெஸ்ட் உணவுப் பொருட்கள் நிறுவன இயக்குநர் திரு ஆகாஷ் ஷா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற …

Read More »

60 -நாட்கள் மீள்தன்மை திட்டத்தின் ஒரு பகுதியாக மனநலம் குறித்த பயிலரங்கை இந்திய கப்பல் படை நடத்தியது

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆன்மீக ஆசிரியர் சகோதரி பி.கே.ஷிவானி தலைமையில், ‘சுய மாற்றம் மற்றும் உள் விழிப்புணர்வு’ குறித்த பயிலரங்கை புதுதில்லியில் உள்ள டிஆர்டிஓ பவனில் உள்ள டாக்டர் டி.எஸ்.கோத்தாரி ஆடிட்டோரியத்தில் இந்திய கடற்படை 07 ஜனவரி 25 அன்று நடத்தியது. கடற்படை வீரர்களின் மன வலிமையை மேம்படுத்துவதற்காக இந்தப் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வைஸ் அட்மிரல் கிரண் தேஷ்முக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சகோதரி பி.கே.ஷிவானியின் இரண்டு மணி நேர அமர்வானது மனநல விழிப்புணர்வு …

Read More »

மியாவாக்கி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரயாக்ராஜில் சுமார் 56,000 சதுர மீட்டர் அடர்ந்த காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன

மஹாகும்பமேளா 2025-க்கு தயாராகும் வகையில், பிரயாக்ராஜ் முழுவதும் பல்வேறு இடங்களில் அடர்ந்த காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. நகரத்திற்கு  கோடிக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில், தூய காற்று மற்றும் ஆரோக்கியமான சூழ்நிலையை உறுதி செய்வதற்காக பிரயாக்ராஜ் மாநகராட்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜப்பானிய மியாவாக்கி நுட்பத்தைப் பயன்படுத்தி, பல பிராண வாயு ஆக்ஸிஜன் வங்கிகளை நிறுவியது. அவை இப்போது பசுமையான காடுகளாக மாறியுள்ளன. இந்த முயற்சிகள் பசுமையை மேம்படுத்தியதுடன் மட்டுமல்லாமல், காற்றின் தரத்தை …

Read More »

தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியத்தின்கீழ் ஏ.ஐ-ஆல் இயக்கப்படும் 5ஜி ஆர்.ஏ.என் போர்ட்டலை உருவாக்க ஏ.ஐ டச் மென்பொருள் நிறுவனத்துக்கு மானியம்

ஏ.ஐ டச் மென்பொருள் நிறுவனத்திற்கு, தொலைத்தொடர்புத் துறையின் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியத்தின்  “டிஜிட்டல் பாரத் நிதியின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ரேடியோ அணுகல் இணைப்பு (ஆர்.ஏ.என்) நுண்ணறிவுக் கட்டுப்பாடு (ஆர்.ஐ.சி), சேவை மேலாண்மை மற்றும் நிர்வாகம் (எஸ்.எம்.ஓ) மற்றும் இணைப்பு தரவு பகுப்பாய்வு செயல்பாடு தொகுதிகள் உட்பட பிரிக்கப்பட்ட  5ஜி ஆர்.ஏ.என்னுக்கான கூறுகளை ஏ.ஐ டச் நிறுவனம் உருவாக்கும். செயற்கை நுண்ணறிவு/ இயந்திர கற்றலால் இயங்கும் இன்டென்ட் எஞ்சினுடன்  5ஜி …

Read More »

மகா கும்பமேளாவில் ஆயுஷ் சேவைகள் பக்தர்களின் அனுபவத்தை மேம்படுத்தும்: மத்திய ஆயுஷ் இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ்

வரலாற்று சிறப்புமிக்க மகா கும்பமேளா 2025 ஜனவரி 13 முதல் பிரயாக்ராஜில் நடைபெறவுள்ள நிலையில், ஆயுஷ் இணை அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், ஆயுஷ் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் இந்த நிகழ்வில் ஆயுஷ் அமைச்சகத்தின் முன்முயற்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். முன் முயற்சிகள் குறித்து தமது திருப்தியை வெளிப்படுத்திய அமைச்சர், இந்த மாபெரும் நிகழ்வில் கலந்து கொள்ளும் பக்தர்களின் அனுபவத்தை வளப்படுத்துவதில் குழுவினரின் உறுதிப்பாட்டை பாராட்டினார். …

Read More »