புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி) உருவாக்கிய புதிதாக கட்டப்பட்ட பணிபுரியும் பெண்கள் விடுதித் தொகுதியான சுஷ்மா பவனை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார். புதுதில்லி மோதி பாக்கில் அதிநவீன கால்நடை மருத்துவமனையையும் காசொலி மூலம் அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தில்லி துணைநிலை ஆளுநர் திரு. வி.கே. சக்சேனா, புதுதில்லி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. பன்சூரி ஸ்வராஜ் உட்பட பலர் கலந்து …
Read More »டிஜிட்டல் வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்தும் ஓஎன்டிசி
“ஓஎன்டிசி, சிறு வணிகங்களை மேம்படுத்துவதற்கும் இ-காமர்ஸில் புரட்சியை ஏற்படுத்துவதற்கும் பங்களித்துள்ளது. இதனால் வளர்ச்சி, செழிப்பை மேலும் அதிகரிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.” – பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம்: டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த கட்டமைப்பு (ONDC) என்பது டிஜிட்டல் வர்த்தகத்தை ஜனநாயகமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் தொழில் – உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (DPIIT) முயற்சியாகும். இது ஏப்ரல் 2022-ல் தொடங்கப்பட்டது. ஓஎன்டிசி என்பது டிஜிட்டல் அல்லது மின்னணு …
Read More »2024-ம் ஆண்டில் நிலக்கரித் துறை இதுவரை இல்லாத அதிகபட்ச உற்பத்தி மற்றும் விநியோகத்தை எட்டியுள்ளது
நிலக்கரி அமைச்சகம் 2024 காலண்டர் ஆண்டிற்கான நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் மிகச் சிறப்பான முன்னேற்றத்தைப் பதிவுசெய்துள்ளது. எரிசக்தி பாதுகாப்பை அடைவதில் அதன் அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதுடன், தற்சார்பு இந்தியா பார்வைக்கும் உதவியுள்ளது. 2024 ஆம் ஆண்டில், நிலக்கரி உற்பத்தி 1,039.59 மில்லியன் டன்னாக (தற்காலிகமானது) இருந்தது. இது முன்பு இல்லாத அளவுக்கு அதிகமாகும். இது முந்தைய ஆண்டின் மொத்த 969.07 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க 7.28% வளர்ச்சியைக் குறிக்கிறது. …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடி கிராமப்புற பாரதப் பெருவிழா 2025- ஐ தொடங்கி வைத்தார்
புதுதில்லி பாரத மண்டபத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கிராமப்புற பாரத மஹோத்சவ் 2025 என்னும் பெருவிழாவைத் தொடங்கி வைத்தார். வளர்ச்சியடைந்த பாரதம் 2047- க்கு ஒரு நெகிழ்திறன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குவது இந்தப் பெருவிழாவின் கருப்பொருளாகும். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், கலந்துகொண்டுள்ள அனைவருக்கும் 2025 புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமப்புற பாரதப் பெருவிழா என்ற பிரம்மாண்டமான அமைப்பு, இந்தியாவின் வளர்ச்சிப் …
Read More »தில்லியில் நாளை ரூ. 12,200 கோடிக்கு அதிக மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
தில்லியில் உள்ள ரோகினியில் அதிநவீன மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான அடிக்கல்லை நாட்டுகிறார் பிரதமர் 12,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி ஜனவரி 5 ஆம் தேதி மதியம் சுமார் 12:15 மணிக்கு தில்லியில் தொடக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். சாஹிபாபாத் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்திலிருந்து புதிய அசோக் நகர் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்திற்கு காலை 11 மணிக்கு நமோ பாரத் …
Read More »சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கான நடவடிக்கையாக புதுவை பல்கலைக்கழகத்தில் மரக்கன்று நடும் நிகழ்வு
புதுவை பல்கலைக்கழகம் அதன் வெள்ளி விழா வளாகத்தில் நடைபெற்ற மரம் நடும் நிகழ்வின் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது. 104 மரங்களை வேரோடு சாய்த்த ஃபெங்கல் சூறாவளி காரணமாக இழந்த பசுமையை மீட்டெடுப்பதும், வளாகத்தில் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதும் இந்த முயற்சியின் நோக்கமாகும். இதன் ஒரு பகுதியாக 1,040 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியை, தலைமை விருந்தினரான புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் மற்றும் புதுவை பல்கலைக்கழகத்தின் முதன்மை …
Read More »மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) 67-வது நிறுவன தினத்தை போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கொண்டாடுகிறது
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் 67-வது நிறுவன தினத்தை போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(சி.வி.ஆர்.டி.இ ) இன்று (2025-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி) ஆவடியில் உள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் கொண்டாடப்பட்டது. டிஆர்டிஓ ஆர் & டி செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத், புது தில்லியில் உள்ள எஸ் கோத்தாரி அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் …
Read More »மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் சென்னையில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனங்கள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கல்வி நிறுவனத்திற்கு (NIEPMD) வருகை
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், சென்னையில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனங்கள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய நிறுவனத்தை இன்று பார்வையிட்டார். அமைச்சரின் இந்தப் பயணத்தின் போது, என்.ஐ.இ.பி.எம்.டி.க்கு வழங்கப்பட்ட தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுமத்தின் (என்ஏஏசி) சான்றிதழை வெளியிட்டார். இது ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள் கொண்ட நபர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் சிறந்து விளங்கும் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க செயல்பாடுகளைக் குறிக்கிறது. ஆட்டிசம் மேலாண்மை குறித்த இ- புத்தகத்தையும் வெளியிட்டார். டாக்டர் வீரேந்திர குமார் என்.ஐ.இ.பி.எம்.டி வளாகத்தில் தேசிய திறந்தநிலை பள்ளியின் (என்.ஐ.ஓ.எஸ்) மையத்தை திறந்து வைத்தார். இந்த மையம் குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு கல்வியை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர்களின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப தரமான கல்வி, திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை பெறுவதை உறுதி செய்கிறது. இந்த ஆண்டு பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பயிற்சி பெற்று பதக்கங்களை வென்ற பல்வேறு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர்களின் விடாமுயற்சியைப் பாராட்டிய அவர், திறமையை வளர்த்து கொள்வதிலும், விளையாட்டில் உள்ளடக்கிய தன்மையை ஊக்குவிப்பதிலும் நிறுவனத்தின் முயற்சிகளைப் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியின் போது, என்ஏஏசி சான்றிதழ், பயிற்சி, ஆராய்ச்சி, மறுவாழ்வு சேவைகளில் உயர் தரத்தை பராமரிப்பதற்கான என்.ஐ.இ.பி.எம்.டி.-ன் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று அமைச்சர் கூறினார். என்.ஐ.ஓ.எஸ் மையத்தை தொடங்குவதன் மூலம், கல்வி கற்பதில் உள்ள இடைவெளியை குறைப்பதிலும், வாழ்நாள் முழுவதும் கற்றலை ஊக்குவிப்பதிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதிலும் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார். உள்ளடக்கிய, நெகிழ்வு தன்மையுடன் கூடிய கற்றல் முறைகளை வழங்குவதன் மூலம், ஒரு சமமான, உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கும் அரசின் பார்வையுடன் ஒத்துப்போகிறது. பல்வேறு குறைபாடுகள் கொண்ட திறமையான நபர்களை ஊக்குவிக்கும் வகையில் என்.ஐ.இ.பி.எம்.டி மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
Read More »‘ஃபரல் சகி’ முன்முயற்சியின் மூலம் பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிக்க மீரா பயந்தர் மாநகராட்சியுடன் மகளிர் தொழில்முனைவோர் தளம் கூட்டு சேர்ந்துள்ளது
மகாராஷ்டிராவின் மீரா பயந்தர் நகரில் உள்ள பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘ஃபரல் சகி’ என்ற முதன்மை முயற்சியை மீரா பயந்தர் மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. பாரம்பரிய சிற்றுண்டி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெண் தொழில்முனைவோருக்கு அவர்களின் முயற்சிகளை நிலையானதாகவும் திறம்படவும் அளவிட உதவும் விரிவான பயிற்சியையும், ஆதரவையும் இந்த திட்டம் வழங்கும். பாரம்பரிய பண்டிகைக்கால தின்பண்டங்களின் (‘ஃபரல்’) உற்பத்தி மற்றும் விற்பனையில் பெண்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களுக்கு நிரந்தர வேலை …
Read More »மேற்கு வங்க மாநிலம் நாடியாவின் ஃபுலியாவில் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய வளாகத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் 04.01.2025 அன்று திறந்து வைக்கிறார்
மேற்கு வங்க மாநிலம் நாடியாவின் ஃபுலியாவில் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய வளாகத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் 04.01.2025 அன்று திறந்து வைக்கிறார். கைத்தறியின் தனித்துவமான அடையாளத்தைப் பாதுகாக்கவும், கைத்தறித் தொழிலுக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப மனிதவளத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மத்திய அரசு “இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம்” என்ற பெயரில் 06 தொழில்நுட்ப நிறுவனங்களை கைத்தறி தொழில் அதிகம் உள்ள சேலம், வாரணாசி, …
Read More »
Matribhumi Samachar Tamil