மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம், மருத்துவ ஜவுளிகளுக்கான தரக் கட்டுப்பாட்டு ஆணையை (QCO) வெளியிட்டுள்ளது. மருத்துவ ஜவுளி (தரக் கட்டுப்பாடு) ஆணை, 2024-ன் கீழ் வரும் முக்கியத்துவம் வாய்ந்த தயாரிப்புகளின் பாதுகாப்பு, செயல்திறனை உறுதி செய்வதற்காக அதற்கான சோதனை நெறிமுறைகள், முத்திரையிடல் தேவைகள் உள்ளிட்ட கடுமையான தரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. சிறு, நடுத்தர நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரத்யேகமான சவால்களை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அமைச்சகம் இந்த தரக்கட்டுப்பாடுகளுக்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. …
Read More »புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை 2025 ஜனவரி 4 அன்று நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது
1985 ஜனவரி 4 அன்று நிறுவப்பட்ட அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை தனது 40-வது நிறுவன தினத்தை 2025 ஜனவரி 4 அன்று புதுதில்லி ஜன்பத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் கொண்டாட உள்ளது. மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்குவார். …
Read More »தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் விரைவில் நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்கும்
இந்தியப் பயணிகளுக்கு விரைவான, பாதுகாப்பான ரயில் பயணத்தை வழங்க புத்தாண்டு தயாராக உள்ளது. குறுகிய தூர மற்றும் நடுத்தர தூர அமர்ந்து செல்லும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வேகமான, பாதுகாப்பான, உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வெற்றிகரமாக வழங்கியதையடுத்து, நீண்ட தூர ரயில்களுக்கும் இதை இந்திய ரயில்வே நனவாக்க உள்ளது. தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் கடந்த மூன்று நாட்களில் அதன் பல சோதனைகளில் மணிக்கு 180 கி.மீ …
Read More »இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு பகுதியிலும் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக முன்னேற விரும்பும் மாவட்டம் (ஆஸ்பைரேஷனல் மாவட்டம்) என்ற கருத்தியல் உருவானது : டாக்டர் ஜிதேந்திர சிங்
மோடி அரசின் முன்னேற விரும்பும் மாவட்டம் என்ற கருத்தியல், இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு பகுதியிலும் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்ற உறுதிப்பாட்டால் உருவானதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். தமது மூன்று நாள் பயணத்தின் மூன்றாவது நாளில், அமைச்சர், கடப்பாவில் முன்னேற விரும்பும் மாவட்டத் திட்டம் குறித்த விரிவான ஆய்வை மேற்கொண்டார். மேலும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் உரையாடி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விவாதித்தார். …
Read More »இந்தியாவில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை சுய உதவிக் குழுக்கள் பிரதிபலிக்கின்றன: டாக்டர் ஜிதேந்திர சிங்
“பெண்கள் தலைமையிலான வளர்ச்சி”யின் முக்கியத்துவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருவதாக மொராகுடி கிராமத்தில் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 3,000 பெண்கள் திரண்டிருந்த கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை புவி அறிவியல் , பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளி, பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். இந்தியாவில் பெண்கள் …
Read More »நாடு முழுவதும் தொழிலாளர் சேம நல நிதி அமைப்பின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் முறை முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது
ஓய்வூதிய சேவைகளை மேம்படுத்துவதற்கான ஒரு மைல்கல் நடவடிக்கையாக, தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் 1995-ன் கீழ் புதிய மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்குதல் முறையின் முழு அளவிலான கட்டமைப்புப் பணிகளை தொழிலாளர் சேம நல நிதி நிறுவனம் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவு செய்தது. 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 68 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு 1570 கோடி ரூபாய் அளவிற்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் செலுத்தும் முறையின் முதல் சோதனை அடிப்படையிலான செயல்பாடுகள் 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஜம்மு, ஸ்ரீநகர் மண்டல அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 49,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய தொகையாக சுமார் 11 கோடி ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட சோதனை அடிப்படையிலான செயல்பாடுகள் 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 24 மண்டல அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 9.3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு சுமார் 213 கோடி ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை குறித்து அறிவிப்பு வெளியிட்ட மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, ” தொழிலாளர் சேம நல நிதி நிறுவனத்தின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் முறையை முழு அளவில் செயல்படுத்துவது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும் என்று குறிப்பிட்டார். இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதிய தொகையை நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும், அனைத்து வங்கிகிளையிலிருந்தும் தடையின்றி பெற அதிகாரம் அளிக்கிறது.
Read More »புதுதில்லியில் தீவுகள் மேம்பாட்டு முகமையின் 7- வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார்
தீவுகள் மேம்பாட்டு முகமையின் 7-வது கூட்டம் புதுதில்லியில் இன்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர் அட்மிரல் (ஓய்வு) டி.கே.ஜோஷி, லட்சத்தீவு நிர்வாகி திரு பிரபுல் படேல், மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சகங்களின் செயலாளர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து …
Read More »பெங்களூருவில் நடைபெற்ற தேசிய மனநலம், நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் (நிம்ஹான்ஸ்) பொன்விழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர்
தேசிய மனநலம், நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் மனநலம் என்ற உன்னத நோக்கத்திற்காக ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க பணிகள் சமூகத்தில் முன்மாதிரியான பங்களிப்பை அளிக்க உதவியது என்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார். புதுமையான ஆராய்ச்சிகள், அர்ப்பணிப்புடன் கூடிய நோயாளிகளுக்கான சேவை, மேம்பட்ட கல்வி திட்டங்கள் ஆகியவை மனநலம் , நரம்பியல் அறிவியலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. டெலி-மனஸ் தளம், நாடு முழுவதும் அதன் 53 மையங்களுடன், கடந்த இரண்டு ஆண்டுகளில் 70 லட்சம் மக்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த மொழிகளில் சேவை வழங்கியுள்ளது. நவீன உடல்நல பராமரிப்பு அமைப்புகளை யோகா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய முறைகளுடன் ஒருங்கிணைத்து மனம், உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறது. மனநலம், நரம்பியல் அறிவியலில் அதிநவீன சிகிச்சைக்கான மனநல சிறப்புப் பிரிவு, மத்திய ஆய்வக வளாகம், பீமா விடுதி, அடுத்த தலைமுறை 3டி எம் ஆர் ஐ ஸ்கேனர், மேம்பட்ட டிஎஸ்ஏ அமைப்பு உள்ளிட்ட புதிய வசதிகளை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார். தேசிய மனநலம், நரம்பியல் அறிவியல் நிறுவனத்திற்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. 1970-ம் ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் குறைவாக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் 50 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்திற்கு வரும் ஏராளமான நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கும் அளவிற்கு வசதிகள் இங்குள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக தனது பத்தாண்டு கால பயணத்தில், தேசிய மனநலம், நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் மருத்துவ கவனிப்பு, ஆராய்ச்சி, கல்வி ஆகியவற்றில் உலகளவில் முன்னணியில் உள்ளது, மனநலக் கொள்கைகளுக்கு ஊக்கமளிக்கும் நடைமுறைகளையும் இந்நிறுவனம் வடிவமைத்துள்ளது என்று கர்நாடக மாநில முதலமைச்சர் திரு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Read More »சொத்துக்களை மின்னணு ஏலம் விடுவதற்கான புதுப்பிக்கப்பட்ட ‘பாங்க்நெட்’ மின்னணு ஏல போர்ட்டலை நிதிச் சேவைகள் துறை செயலாளர் தொடங்கி வைத்தார்
நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை செயலாளர் திரு எம். நாகராஜு, புதுதில்லியில் இன்று புதுப்பிக்கப்பட்ட மின்னணு ஏல இணையதளமான ‘பாங்க்நெட்’ -ஐ தொடங்கி வைத்தார். இந்தத் தொடக்க விழாவில், கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களின் தலைவர்கள், கடன் வசூல் தீர்ப்பாயங்களின் தலைமை அதிகாரிகள், பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள், இந்திய வங்கி சங்கத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி, பொதுத்துறை வங்கிகளின் மூத்த நிர்வாகிகள் மற்றும் நிதிச் சேவைகள் துறையின் மூத்த அதிகாரிகள் …
Read More »குடியரசு தின தேசிய மாணவர் படை முகாம் 2025-ல் பங்கேற்கும் 2,361 பேரில் சாதனை அளவாக 917 மாணவிகள் இடம் பெற்றுள்ளனர்
2025 குடியரசு தின முகாமில் தேசிய மாணவர் படையின் (என்.சி.சி) 917 பெண்கள் உட்பட 2,361 மாணவர்கள் பங்கேற்பார்கள் – பெண்கள் பங்கேற்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச எண்ணிக்கையாகும். தில்லி கண்டோன்மென்டில் ஜனவரி 03, 2025 அன்று செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மாணவர் படை தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங், ஒரு மாத கால முகாமில் நாடு முழுவதிலுமிருந்து என் சி சிமாணவர்கள் பங்கேற்பார்கள். இதில் ஜம்மு & காஷ்மீர் மற்றும் …
Read More »
Matribhumi Samachar Tamil