Wednesday, January 28 2026 | 05:51:04 PM
Breaking News

பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டில் இந்தியா தனது நான்காவது ஈராண்டு புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பித்தது

பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டில்(UNFCCC) இந்தியா தனது 4வது ஈராண்டு புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை  30 டிசம்பர் 2024 அன்று சமர்ப்பித்தது. இந்த 4 ஆவது அறிக்கையில் மூன்றாவது தேசிய தொடர்பியல்  புதுப்பிக்கப்பட்டதுடன் 2020 -ம் ஆண்டிற்கான தேசிய பசுமைக்குடில் வாயு இலக்குகளில் அண்மைத் தகவல்கள் சேர்க்கப்பட்டும் உள்ளன. இந்தியாவின் தேசிய சூழ்நிலைகள், தணிவிப்பு நடவடிக்கைகள், தடைகள், இடைவெளிகள், தொடர்புடைய நிதி, தொழில்நுட்பம் மற்றும் திறன் வளர்ப்புக்கான தேவைகள் பற்றிய தகவல்களையும் இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சர் திரு பூபேந்தர் …

Read More »

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் 67-வது நிறுவன தினத்தையொட்டி மூத்த விஞ்ஞானிகள், அதிகாரிகளை பாதுகாப்பு அமைச்சர் சந்தித்தார்

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இன்று (2025 ஜனவரி 02 ) புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைமையகத்திற்குச் சென்று, 67-வது நிறுவன தினத்தைக் குறிக்கும் வகையில் அங்கிருந்த மூத்த விஞ்ஞானிகள், அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத்தும் கலந்து கொண்டார். அப்போது பேசிய திரு ராஜ்நாத் சிங், ஆயுதப்படைகளை அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களுடன் ஆயத்தப்படுத்துவதன் மூலம் …

Read More »

சனாதன தர்மத்தின் இதயத்தை நோக்கிய பயணம்: மகா கும்பமேளா 2025

ஆன்மீக உற்சாகத்திற்கு இடையே,மகா கும்ப நகரில் உள்ள மத்திய மருத்துவமனை நம்பிக்கை மற்றும் உயிர்ச்சக்தியின் புதிய அத்தியாயத்தை எழுதுகிறது. மகா கும்பமேளா திருவிழா தொடங்குவதற்கு சற்று முன்பு ‘கங்கா’ என்று பெயரிடப்பட்ட பெண் குழந்தை பிறப்பது, புனித நதிகளின் தூய்மை மற்றும் சாரத்தை  நினைவூட்டுவதாக உள்ளது.. ‘கும்பமேளா’ என்று பெயரிடப்பட்ட மற்றொரு ஆண் குழந்தையும் பிறந்தது. , இந்தப் பிறப்புகள் வாழ்க்கை வட்டத்தையும் மகா கும்பமேளா பண்டிகையின் ஆசீர்வாதங்களையும் வெளிப்படுத்தும் அம்சங்களாக உள்ளன.. மகா கும்பமேளா அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கு முன்பே …

Read More »

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் மேம்பட்ட தொலைத் தொடர்பு வசதிகள் – தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது மத்திய தொலைத் தொடர்புத் துறை

மகா கும்பமேளா 2025 நெருங்கி வருவதால், தொலைத் தொடர்புத் துறை கோடிக் கணக்கான பக்தர்கள், பார்வையாளர்களுக்கு தடையற்ற தொலைத்தொடர்பு வசதியை உறுதி செய்வதற்காக அதாவது டிஜிட்டல் மகா கும்ப மேளா 2025 என்ற நிலையை உருவாக்க குறிப்பிடத்தக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அவற்றில் சில: *பிரயாக்ராஜ் நகரம், மேளா நடக்கும் பகுதி, உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள முக்கிய பொது இடங்கள் முழுவதும் தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பை இத்துறை மேம்படுத்தியுள்ளது.  மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் …

Read More »

மொத்த விற்பனை விலை குறியீட்டு எண்ணின் தற்போதைய தொடர் திருத்தத்துக்கான பணிக்குழு அமைப்பு

2011-12 ஆம் ஆண்டு அடிப்படை என்பதில் இருந்து  2022-23-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாக  மொத்த விற்பனை விலை குறியீட்டு எண்ணின் தற்போதைய தொடர் திருத்தத்துக்கான பணிக்குழுவை அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. கீழ்க்கண்டவாறு பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது: 1)    பேராசிரியர் ரமேஷ் சந்த், உறுப்பினர், நிதி ஆயோக்,  குழுத் தலைவர் 2)    கூடுதல் தலைமை இயக்குநர், கள நடவடிக்கைப் பிரிவு, புள்ளியியல் மற்றும்  திட்ட அமலாக்க அமைச்சகம்- உறுப்பினர் 3)    …

Read More »

டிசம்பர் மாதத்தில் தனிப்பட்ட மற்றும் வணிக சுரங்கங்களின் மாதாந்திர உற்பத்தி மற்றும் விநியோக சாதனை

நாட்டின் நிலக்கரி உற்பத்தி மற்றும் நிலக்கரி விநியோகத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை அறிவிப்பதில் நிலக்கரி அமைச்சகம் மகிழ்ச்சி அடைகிறது. 2024 டிசம்பர் மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் நிலக்கரி உற்பத்தியில் கணிசமான அதிகரிப்பு, தனிப்பட்ட மற்றும் வணிக சுரங்கங்களிலிருந்து விநியோகம் செய்யப்படுவதைக் காட்டுகின்றன, இது இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது. 2024 ஏப்ரல் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31 வரை மொத்த நிலக்கரி உற்பத்தி 131.05 மெட்ரிக் டன்னை எட்டியது. இது …

Read More »

எட்டு முக்கிய தொழில் பிரிவுகளில் நிலக்கரித் துறை நவம்பர் 2024-ல் 7.5% வளர்ச்சியை அடைந்தது

வர்த்தகம் – தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டின்படி (ICI – அடிப்படை ஆண்டு 2011-12), எட்டு முக்கிய தொழில்களில் நிலக்கரித் துறை நவம்பர் 2023-ல் 185.7 புள்ளிகளுடன் இருந்தது. அதை ஒப்பிடுகையில் நவம்பர் 2024-ல், 199.6 புள்ளிகளுடன் 7.5% (தற்காலிக புள்ளி விவரம்)  குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 162.5 புள்ளிகளுடன் ஒப்பிடும்போது ஏப்ரல்-நவம்பர் 2024 காலகட்டத்தில் நிலக்கரி தொழில்துறை குறியீடு …

Read More »

ஜனவரி 3-ந் தேதி தில்லியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்

‘அனைவருக்கும் வீடு’ என்ற தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஜனவரி 3 ஆம் தேதி மதியம் 12:10 மணியளவில் தில்லி, அசோக் விஹாரில் உள்ள ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்பில் குடிசைப்பகுதி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ஜுகி ஜோப்ரி (ஜே.ஜே) தொகுப்புகளில் வசிப்பவர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை பார்வையிடுகிறார். அதன்பிறகு, மதியம் 12:45 மணியளவில், அவர் தில்லியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். ஜே.ஜே. தொகுப்புகளில் வசிப்பவர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள 1,675 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைக்கும் பிரதமர், தில்லி அசோக் விஹாரில் …

Read More »

தொலைதூர மற்றும் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்யும் மகாராஷ்டிர அரசின் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு

மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள்  மற்றும் தொலைதூரப் பகுதிகளில் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்ய மகாராஷ்டிர மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். தேவேந்திர பட்னாவிஸ் பதிவிட்ட எக்ஸ் பதிவுக்கு பதிலளித்த மோடி கூறியிருப்பதாவது: தொலைதூர மற்றும் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் உறுதி செய்வதற்கான மகாராஷ்டிரா அரசின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். இது நிச்சயமாக ‘வாழ்க்கையை எளிதாக்குவதை’ ஊக்குவிப்பதோடு, மேலும் பல …

Read More »

சிறு வணிகங்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், மின்னணு வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதிலும் ஓஎன்டிசி பங்களித்துள்ளது: பிரதமர்

சிறு தொழில்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், மின்னணு வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதிலும் டிஜிட்டல் வணிகத்துக்கான திறந்தநிலை வலைப்பின்னலின்(ஓ.என்.டி.சி.)  பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, வளர்ச்சி மற்றும் செழிப்பை முன்னெடுத்துச் செல்வதில் இந்த அமைப்பு முக்கிய பங்காற்றும் என்று குறிப்பிட்டார். சமூக ஊடகத்தில் பியூஷ் கோயல் எழுதிய பதிவுக்கு பதிலளித்த மோடி பின்வருமாறு கூறியுள்ளார். “ஓஎன்டிசி சிறு வணிகங்களை மேம்படுத்துவதற்கும் மின்னணு வணிகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதற்கும் பங்களித்துள்ளது, இதனால் வளர்ச்சி …

Read More »