Monday, December 08 2025 | 02:08:05 AM
Breaking News

‘வீர பாலகர் தினம்’ – 2024 டிசம்பர் 26-ல் கொண்டாடப்படுகிறது

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 2024 டிசம்பர் 26 அன்று  வீர பாலகர் தினத்தைக்கொண்டாட இருப்பதோடு பிரதமரின் ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருதுகளை வழங்க உள்ளது. கலை, கலாச்சாரம், துணிச்சல், கண்டுபிடிப்பு, அறிவியல், தொழில்நுட்பம், சமூக சேவை, விளையாட்டு, சுற்றுச்சூழல் ஆகிய ஏழு பிரிவுகளில் சிறப்பான  சாதனைகளைப் புரிந்த குழந்தைகளுக்கு மத்திய அரசு பிரதமரின் ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறது. இந்த ஆண்டு 14 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் …

Read More »

சிறந்த தகவல் தொடர்புக்கான 8 தேசிய விருதுகளை வென்றது செயில் நிறுவனம்

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்துக்கு (செயில்-SAIL) இந்திய மக்கள் தொடர்பியல் சங்கம்  எட்டு தேசிய விருதுகளை வழங்கியுள்ளது. அந்த சங்கத்தின் தேசிய விருதுகள் 2024 டிசம்பர் 20-22,  ஆகிய தேதிகளில் ராய்ப்பூரில் நடைபெற்ற 46-வது அகில இந்திய மக்கள் தொடர்பியல் மாநாட்டில் வழங்கப்பட்டன. செயில் நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்டு  விருதுகள் வழங்கப்பட்டன. மின்-செய்திமடல், பெருநிறுவனப் படம் (ஆங்கிலம்), செயில் கௌரவ தின கொண்டாட்டத்திற்கான சிறந்த தகவல் தொடர்பு …

Read More »

மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திப்ரூகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

அசாமின் திப்ரூகரில் சபுவா டாக்கா தேவி ரசிவாசியா கல்லூரியின் பொன்விழா கொண்டாட்டங்களில் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கலந்து கொண்டு பொன்விழா நினைவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய திரு சோனோவால்,   தொலைதூரமாக உள்ள சபுவாவின் புவியியல் சூழல், ஒப்பீட்டளவில்  பின்தங்கிய நிலைமை ஆகியவற்றின் பின்னணியில் பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு  கல்லூரி ஆற்றிவரும் சேவைகளின் களின் முக்கியத்துவத்தைப் பாராட்டினார். பின்னர், சாபுவா எல்ஏசி-யின் கீழ் பிந்தகோட்டா, பலிஜான், கர்ஜன்,  பனிடோலா பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பயனளிக்கும் …

Read More »

நாடு முழுவதும் சுமார் 830 பள்ளி மாணவர்கள் 33 சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களில் டிஎன்ஏ பிரித்தெடுத்தலை மேற்கொண்டனர்

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) நாடு முழுவதும் உள்ள அதன் ஆய்வகங்களில் ஓர் அறிவியல் செயல்பாட்டை மேற்கொண்டது. சி.எஸ்.ஐ.ஆர்.-இன்கீழ் செயல்படும் தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜெனோமிக்ஸ் அண்ட் இன்டகிரேடிவ் பயாலஜி (ஐ.ஜி.ஐ.பி) ஆய்வகம் ஆன்லைன் முறையில் அனைத்து ஆய்வகங்களுடனும் ஒரே நேரத்தில் இந்த செயல்பாட்டை ஒருங்கிணைத்தது. இந்த நிகழ்ச்சியை சிஎஸ்ஐஆர்-ஐஜிஐபி இயக்குநர் டாக்டர் சௌவிக் மைத்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், சிஎஸ்ஐஆர் தலைவர் டாக்டர் கீதா …

Read More »

கால்நடைகளால் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க முன்னோடித் திட்டம் – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் செயல்படுத்துகிறது

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளால் ஏற்படும்  விபத்துகளைத் தவிர்க்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த முயற்சி பயணிகளுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகள், விலங்குகளின் பராமரிப்பையும் நிர்வாகத்தையும் இது உறுதி செய்கிறது. 0.21 முதல் 2.29 ஹெக்டேர் வரையிலான தங்குமிடங்களுடன், கால்நடைகளுக்கு பாதுகாப்பான இடங்கள் உருவாக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை என்.எச்-334-பி-ன் உத்தரப்பிரதேசம், ஹரியானா எல்லை முதல் ரோஹ்னா பிரிவு உட்பட பல்வேறு …

Read More »

உத்தரப்பிரதேசம், ஆந்திராவுக்கு ஊரக வளர்ச்சிக்கான 15-வது நிதிக்குழு மானியம் ஒதுக்கீடு

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் 15-வது நிதிக்குழு மானியத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.  2-வது தவணையாக ரூ.1598.80 கோடி மதிப்பிலான நிபந்தனையற்ற மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாநிலத்தின் தகுதியுள்ள அனைத்து 75 மாவட்ட ஊராட்சிகள், தகுதியுள்ள 826 வட்டார பஞ்சாயத்துகள், தகுதியுள்ள அனைத்து 57691 கிராம பஞ்சாயத்துக்களுக்கும் சேர்த்து ஒதுக்கப்பட்டு உள்ளது. 2024-25-ம் நிதியாண்டில் 15-வது நிதிக்குழு மானியமாக, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிராமப்புற …

Read More »

தமிழகத்தின் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி ஏலம் தொடர்பான விளக்கம்

மதுரை மாவட்டம், மேலூர் – தெற்குத்தெரு – முத்துவேல்பட்டி பகுதிகளில் டங்ஸ்டனுக்கான புவியியல் குறிப்பாணையை (ஜி.எஸ்.ஐ) 2021 செப்டம்பர் 14 அன்று தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்தது. அந்த நேரத்தில் டங்ஸ்டன் போன்ற முக்கியமான கனிமங்கள் உட்பட அனைத்து முக்கிய கனிமங்களையும் ஏலம் விட மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. பின்னர், சுரங்கங்கள்,  கனிமங்கள் (மேம்பாடு – ஒழுங்குமுறை) சட்டம், 1957 என்பது 17.08.2023 முதல் சுரங்கங்கள் – கனிமங்கள் (மேம்பாடு, ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2023 என்பதன் மூலம் திருத்தப்பட்டது. திருத்தச் சட்டமானது மற்ற அம்சங்களோடு சட்டத்தில் …

Read More »

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகளை மேம்படுத்துகிறது

மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன், விளையாட்டு  அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில்,தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (இஎஸ்ஐசி )தனது மருத்துவ சேவைகள், பிற விநியோக வழிமுறைகள், தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் ஆகியவற்றை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றி வருகிறது. தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான முன்னேற்றங்களை மத்திய அமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். தன்வந்தரி மருத்துவமனை தகவல் அமைப்பு இப்போது இஎஸ்ஐசி மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. …

Read More »

கழிவிலிருந்து செல்வம் வரை

“பாராட்டுக்குரியது! திறமையான மேலாண்மை, செயலூக்கமான நடவடிக்கை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்த முயற்சியான சிறப்பு இயக்கம் 4.0, சிறந்த முடிவுகளை அடைந்துள்ளது. கூட்டு முயற்சிகள் எவ்வாறு நிலையான முடிவுகளுக்கு வழிவகுக்கும், தூய்மை, பொருளாதார விவேகம் இரண்டையும் ஊக்குவிக்கும் என்பதை இது காட்டுகிறது.” -பிரதமர் நரேந்திர மோடி தூய்மை, திறன் வாய்ந்த கழிவு மேலாண்மை ஆகியவை நல்ல நிர்வாகத்தின் அடித்தளங்களாகும். இந்த நடைமுறைகள் ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை உறுதி செய்வது மட்டுமல்லாமல், நிர்வாக செயல்திறன், மக்களை மையமாகக் கொண்ட ஆளுகை ஆகியவற்றையும் …

Read More »

உத்தராகண்டில் புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் – மத்திய உள்ளதுறை அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்பு

உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி முன்னிலையில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் புதுதில்லியில் இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தப்படுவது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உத்தராகண்ட் மாநிலத்தில் காவல்துறை, சிறைச்சாலைகள், நீதிமன்றங்கள், தடயவியல் தொடர்பான பல்வேறு புதிய விதிகளின் அமலாக்கம் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மத்திய உள்துறைச் செயலாளர், உத்தராகண்ட்  தலைமைச் செயலாளர், உத்தரகண்ட் காவல்துறை தலைவர்  உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். …

Read More »