बुधवार, नवंबर 13 2024 | 06:36:57 AM
Breaking News
Home / Choose Language / Tamil / வட்டல்தாம் த்விஷதாப்தி மகோத்சவம் குறித்த சிறப்பு தபால் தலையை அஞ்சல் துறை வெளியிட்டது

வட்டல்தாம் த்விஷதாப்தி மகோத்சவம் குறித்த சிறப்பு தபால் தலையை அஞ்சல் துறை வெளியிட்டது

Follow us on:

வட்டல் தாம் ஆலயத்தின் 200-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையிலும் ஸ்ரீ சுவாமிநாராயண் சம்பிரதாயத்தில் அதன் முக்கிய பங்கை கௌரவிக்கும் வகையிலும் ஒரு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் பரவியுள்ள ஸ்ரீ ஸ்வாமிநாராயண் சம்பிரதாயத்தின் ஆன்மீக தலைமை இடமாக இந்தக் கோயில் விளங்குகிறது. சத்குரு ஸ்ரீ பிரம்மானந்த் சுவாமி, சத்குரு ஸ்ரீ அக்ஷாரானந்த சுவாமி ஆகியோரால் இந்த கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் தாமரை வடிவில் கட்டப்பட்டுள்ளது. இது அனைத்து மதத்தினரிடையேயான நல்லிணக்க உணர்வின் அடையாளமாக உள்ளது. கடவுள்கள், தேவியர்கள் ஆகியோரின் கடந்த கால அவதாரங்களின் சித்தரிப்புகளும் இதில் அடங்கும்.

இந்த ஆலயம் தொடர்பான அஞ்சல் தலை இன்று (09.11.2024) குஜராத்தின் கேடா மாவட்டத்தில் உள்ள வட்டலில் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், ஆச்சார்யா மஹராஜ் 1008 ஸ்ரீ ராகேஷ் பிரசாத் ஜி, டாக்டர் ஸ்ரீ சாந்த்வல்லபசுவாமி, வத்தலாதம் மந்திரின் தலைமை நிர்வாகி கோத்தாரி, வதோதரா போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் தினேஷ்குமார் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஸ்ரீ ஸ்ரீ ஜெய்ராஜ் டி.ஜி வடிவமைத்த சிறப்பு அஞ்சல்தலை, வட்டல்தாம் கோயிலின் அற்புதமான பாரம்பரிய கட்டிடக்கலையை வெளிப்படுத்துகிறது. இந்த கோயில் ஒன்பது தங்க குவிமாடங்களைக் கொண்ட தாமரை வடிவத்தில் உள்ளது. இந்த அஞ்சல்தலை வட்டலின் வளமான பாரம்பரியத்தையும், எண்ணற்ற பக்தர்களின் வாழ்க்கையில் அதன் குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் குறிக்கிறது. வடல்தாம் த்விஷதாப்தி மஹோத்சவத்தில் இந்த தபால் தலையை வெளியிடுவதில் அஞ்சல் துறை பெருமிதம் கொள்கிறது.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

மத்திய அரசு பணி நியமனத்தில் நேர்மறையான முன்னேற்றம்

”நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவதே எங்கள் உறுதிப்பாடு. மத்திய அரசின் கொள்கைகளும், முடிவுகளும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் நேரடித் தாக்கத்தை …