शुक्रवार, नवंबर 15 2024 | 04:38:15 AM
Breaking News
Home / Tag Archives: competing

Tag Archives: competing

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 15 படங்கள் தங்க மயில் விருதுக்குப் போட்டியிடுகின்றன

உலகெங்கிலும் உள்ள சக்திவாய்ந்த கதைசொல்லலைக் காண்பிக்கும் 15 திரைப்படங்கள், 55 வது சர்வதேச திரைப்பட விழா 2024-ல் மதிப்புமிக்க தங்க மயில் விருதுக்கு (கோல்டன் பீக்காக்) போட்டியிட உள்ளன. இந்த ஆண்டு இதில்  12 சர்வதேச படங்களும், 3 இந்திய படங்களும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான கலைத்திறனுக்காக போட்டியிடுகின்றன. புகழ்பெற்ற இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் அசுதோஷ் கோவரிகர் தலைமையிலான மதிப்புமிக்க தங்க மயில் நடுவர் குழுவில் விருது பெற்ற சிங்கப்பூர் இயக்குநர் அந்தோனி சென், பிரிட்டிஷ்-அமெரிக்க தயாரிப்பாளர் எலிசபெத் கார்ல்சன், ஸ்பானிஷ் தயாரிப்பாளர் ஃபிரான் போர்ஜியா, புகழ்பெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட கலைஞர் ஜில் பில்காக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறப்பு பரிசு உள்ளிட்ட பிரிவுகளில் வெற்றியாளர்களை இந்த நடுவர் குழு தீர்மானிக்கும். வெற்றி பெறும் படத்திற்கு ரூ. 40 லட்சம் பரிசும் விழாவின் உயர் கௌரவமும் வழங்கப்படும். 1. ஃபியர் அண்ட் ட்ரெம்பிளிங் (ஈரான்) 2. குலிசார் (துருக்கி) 3. ஹோலி கவ் (பிரான்ஸ்) 4. ஐஆம் நெவென்கா (ஸ்பெயின்) 5. பானோப்டிகான் (ஜார்ஜியா-அமெரிக்கா) 6. பியர்ஸ் (சிங்கப்பூர்) 7. ரெட் பாத் (துனிசியா) 8. ஷெஃபர்ட்ஸ் (கனடா-பிரான்ஸ்) 9. தி நியூ இயர் தட் நெவர் கம் (ருமேனியா) 10. டாக்சிக் (லிதுவேனியா) 11. வேவ்ஸ் (செக் குடியரசு) 12. ஹூ டூ ஐ ஆம் பிலாங் டூ (துனிசியா-கனடா) 13. தி கோட் லைஃப் (இந்தியா) 14. ஆர்ட்டிகிள் 370 (இந்தியா) 15. ராவ்சாஹேப் (இந்தியா)  ஆகிய 15 படங்கள் விருதுக்கு போட்டியிடுகின்றன.15 படங்களில் 9  படங்கள் பெண் கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை.

Read More »