Sunday, January 25 2026 | 05:57:44 AM
Breaking News

Matribhumi Samachar

மனதின் குரல் நிகழ்ச்சியின் 117-வது அத்தியாயத்தில், 29.12.2024 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.   இன்று மனதின் குரலில், 2025ஆம் ஆண்டு…… இதோ வந்தே விட்டது, வாயிற்கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறது. 2025ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று நமது அரசியலமைப்புச்சட்டத்தின் 75ஆம் ஆண்டு நிறைவடைய இருக்கின்றது.  நம்மனைவருக்கும் இது மிகவும் கௌரவம்மிகு தருணமாகும்.  நமது அரசியலமைப்புச்சட்ட பிதாமகர்கள் நம்மிடத்தில் ஒப்படைத்திருக்கும் அரசியல்சட்டம், காலத்தின் அனைத்துக் காலகட்டங்களிலும் வெற்றிகரமாக வழிகாட்டியிருக்கிறது.  அரசியல் சட்டமானது நம்மனைவருக்கும் பாதை துலக்கும் ஒளிவிளக்காய், வழிகாட்டியாய் விளங்குகிறது.  …

Read More »

2024 ஃபிடே மகளிர் உலக விரைவு சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஹம்பி கொனேருவுக்குப் பிரதமர் வாழ்த்து

2024 ஃபிடே மகளிர் உலக விரைவு செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஹம்பி கொனேருவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார். அவரது மன உறுதியும் புத்திசாலித்தனமும் கோடிக் கணக்கானவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒன்று என்று அவர் பாராட்டியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் குறித்து சர்வதேச செஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிலில் கூறியிருப்பதாவது: “2024 …

Read More »

ஆசிய போட்டியில் வெற்றிக்குப் பிறகு இந்திய இளையோர் பளுதூக்கும் வீரர்கள் காமன்வெல்த் விளையாட்டு 2026க்கு தயார் ஆகி வருகின்றனர்

தோஹாவில் டிசம்பர் 19-25 தேதிகளில் நடைபெறும் ஆசிய இளைஞர், ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2024-ல் தங்கள் அற்புதமான செயல் திறனுக்குப் பிறகு இந்தியாவின் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் புத்தாண்டில் உயர்ந்த நிலைகளை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக, தோஹாவில் இளைஞர், ஜூனியர் பிரிவுகளில் இந்தியா 33 பதக்கங்களை வென்றது. கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு 2026 இவர்களின் அடுத்த இலக்காகும். தோஹாவில் இவர்களது செயல்திறன் இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான வாய்ப்பாக …

Read More »

ஈஸ்டர்ன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 97-வது ஆண்டுக் கூட்டம் நடைபெற்றது

எஃகு அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆர்என்ஐஎல்-ன் துணை நிறுவனமான ஈஸ்டர்ன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் (EIL) பொதுத் துறை நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM) -2024 டிசம்பர் 28 அன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் உள்ள நிர்வாகக் கட்டிடத்திலிருந்து இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு ஆர்ஐஎன்எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) திரு அஜித் குமார் சக்சேனா தலைமை வகித்தார். நாட்டின் பல்வேறு …

Read More »

கடல்சார் பாரம்பரியத்திற்கான உலகளாவிய மையமாக லோத்தல் மாறும்: மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால்

மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் ஆகியோர் லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் (NMHC) முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து ஆய்வு செய்தனர். சாகர்மாலா திட்டத்தின் கீழ், துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் அமைச்சகம், தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை உருவாக்கி வருகிறது. இது இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்தை பழைய காலம் முதல் …

Read More »

விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைத்தல் என்ற அரிய சாதனைக்கு முயற்சிக்கிறது இஸ்ரோவின் ஆண்டு நிறைவுப் பணி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோவின்) ஆண்டு நிறைவுப் பணி டிசம்பர் 30-ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு “ஸ்பேஸ் டாக்கிங் எக்ஸ்பெரிமென்ட்” (ஸ்பேடெக்ஸ்) என  பெயரிடப்பட்டுள்ளது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் துறை  இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர்நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு  மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று …

Read More »

நிர்வாக சீர்தி்ருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் 2024-ம் ஆண்டு செயல்பாடுகள் குறித்த ஆண்டு இறுதி அறிக்கை

நிர்வாக சீர்தி்ருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் 2024-ம் ஆண்டின் முக்கிய செயல்பாடுகள், பணிகள், சாதனைகளில் சில: *நிர்வாக சீர்தி்ருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை 100 நாள் செயல் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது. *மும்பையில் 27-வது தேசிய மின் ஆளுமை மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. * பொதுமக்கள் குறைகளை திறம்பட தீர்ப்பதற்கான தீர்ப்பதற்கான தேசிய பயிலரங்கு நடத்தப்பட்டது. *தூய்மையை நிறுவனமயமாக்கவும், நிலுவையில் உள்ள குறைகளைக் குறைக்கவும் சிறப்பு இயக்கம் 4.0 வெற்றிகரமாக …

Read More »

சேவை பெறும் உரிமை ஆணையத்தின் தானியங்கி மேல்முறையீட்டு முறை ஹரியானா மக்களுக்கு சேவை வழங்கலில் புதிய முன்னுதாரணத்தை அமைத்துள்ளது: பொது மக்கள் குறைதீர்ப்புத் துறை செயலாளர்

ஹரியானா மாநில அரசுப் பணியாளர் உரிமை ஆணையத்தின் தலைமை ஆணையர் அழைப்பின் பேரில், நிர்வாக சீர்திருத்தங்கள், பொது மக்கள் குறை தீர்ப்புத் துறையின் செயலாளர் திரு வி.சீனிவாஸ் தலைமையிலான மத்திய அரசின் தூதுக்குழு அந்த ஆணையத்தை பார்வையிட்டது. இந்த குழு தடையற்ற சேவை வழங்கல் செயல்முறைகளை ஆய்வு செய்தது.  அத்துடன் காணொலி மூலம் மக்கள் கலந்துரையாடல் அமர்வில் கலந்து கொண்டது. ஹரியானாவில் சேவை பெறும் உரிமை ஆணையம், மாநிலத்தில் வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை மாற்றியுள்ளது. அறிவிக்கப்பட்ட 422 சேவைகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் வழங்கப்பட்டு வருகின்றன. …

Read More »

சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் ஆண்டு இறுதி ஆய்வு அறிக்கை

சிறுபான்மையினர் நல அமைச்சகம் 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதற்காக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திலிருந்து உருவாக்கப்பட்டது. இந்த சமூகங்களுக்கான கொள்கை உருவாக்கம், ஒருங்கிணைப்பு, மதிப்பீடு, வளர்ச்சித்   திட்டங்களை மேற்பார்வையிடுதல் ஆகியவை அமைச்சகத்தின் செயல்பாடுகளில் அடங்கும். சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க, சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையச் சட்டம், 1992 -ன் கீழ் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. பௌத்தர்கள், கிருத்தவர்கள், …

Read More »

ஆண்டு இறுதி அறிக்கை 2024 – தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இ-ஷ்ரம் போர்ட்டல்  பதிவுகள் இந்த ஆண்டு 30 கோடியைத் தாண்டியது, இது அமைப்புசாரா தொழிலாளர்களிடையே விரைவான மற்றும் பரவலான ஏற்பைக் காட்டுகிறது. இந்த சாதனை சமூக தாக்கத்தையும், நாடு முழுவதும் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களை ஆதரிப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 21 அக்டோபர் 2024 அன்று இ-ஷ்ரம் போர்ட்டலை “ஒரே இடத்தில் தீர்வு ” என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. அமைப்புசாரா தொழிலாளர்கள் பல்வேறு சமூகத் …

Read More »