Sunday, March 29 2026 | 01:52:35 AM
Breaking News

Matribhumi Samachar

வெற்றி தினத்தையொட்டி, 1971-ம் ஆண்டு போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான போரில், இந்தியாவின் வரலாற்று வெற்றியை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 16-ஆம் நாள் வெற்றி தினமாக கொண்டாடப்படுவதையொட்டி, 1971-ம் ஆண்டு போரில் உயிர்தியாகம் செய்த துணிச்சல்மிக்க வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும் கதைகளைக் கொண்ட துணிச்சலான வீரர்களின் தியாகத்தை நாடு நன்றியுடன் நினைவில் கொள்கிறது என்றும், அவர்களுடைய தியாகம் நாட்டின் பெருமிதத்தின் ஆதாரமாக திகழ்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் வெளியிட்டுள்ள பதிவில், …

Read More »

இலங்கை – இந்தியா கடற்டை கூட்டுப்பயிற்சி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது

இலங்கை-இந்தியா இடையேயான கடற்படைக் கூட்டுப்பயிற்சி டிசம்பர் 17 முதல் 20 வரை விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படை சார்பில் நடைபெறவுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள பயிற்சியின் துறைமுக கட்டப் பயிற்சி டிசம்பர் 17 முதல் 18 வரையிலும், கடல் மார்க்கப் பயிற்சி டிசம்பர் 19 முதல் 20 வரையும் நடைபெறவுள்ளது. 2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட SLINEX எனப்படும் கடற்படை கூட்டுப்பயிற்சி பல ஆண்டுகளாக இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இருதரப்பு கடற்படை பயிற்சிகளாகும். இந்திய கடற்படையின் ரோந்து கப்பலான ஐஎன்எஸ், இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான எஸ்.எல்.என்.எஸ் சயுர ஆகியவை சிறப்பு படை குழுக்களுடன் பயிற்சியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. டிசம்பர் 19-ம் தேதி தொடங்கும் கடல் மார்க்கப் பயிற்சியில், சிறப்புப் படை நடவடிக்கைகள், துப்பாக்கிச்சுடுதல், தகவல் தொடர்பு பயிற்சிகள், கடல்சார் நடைமுறைகள் உள்ளிட்ட கூட்டுப் …

Read More »

தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு அருங்காட்சியகங்களுக்கான மானியத் திட்டத்தின் கீழ் அதிக நிதி ஒதுக்கீடு

மண்டல, மாநில, மாவட்ட அளவில் மத்திய அரசு, மாநில அரசுகள், சங்கங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளைகள் ஆகியவற்றால் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்க இத்திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்படுகிறது.  தற்போதுள்ள அருங்காட்சியகங்களை வலுப்படுத்துதல், நவீனப்படுத்துதல் ஆகியவற்றுக்கும் உதவி வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ள கலைப் பொருட்களை டிஜிட்டல் மயமாக்கி, அவை தொடர்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல், அருங்காட்சியக வல்லுநர்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கும் இந்த உதவி வழங்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அதாவது 2019-2024 ஆம் ஆண்டு …

Read More »

வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட தொல்பொருட்களை மீட்கும் நடவடிக்கைகள்

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பல தொல்பொருட்கள் நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிலிருந்து 297 தொல்பொருட்களை இந்தியாவுக்கு எடுத்து வர அனுமதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை தனது அதிகார எல்லைக்குட்பட்ட நினைவுச் சின்னங்கள், இடங்கள், தொல்பொருட்களைப் பாதுகாக்க உறுதி பூண்டுள்ளது. இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் வழக்கமான கண்காணிப்பு தவிர, தனியார் பாதுகாவலர்களும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் தேவைக்கேற்ப பணியமர்த்தப்பட்டுள்ளனர். பழங்கால பொருட்கள் திருட்டு சம்பவம் நடக்கும் போதெல்லாம், சம்பந்தப்பட்ட காவல் …

Read More »

இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் பணிகளும் அதற்கான நிதி ஒதுக்கீடும்

இந்திரா காந்தி தேசிய கலை மையம் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது. இந்திய கலை, கலாச்சார பாரம்பரியத்தை ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல் போன்றவை தொடர்பான பணிகளை இந்த மையம் மேற்கொள்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்திரா காந்தி தேசிய கலை மையத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 2019-20: 46.40 கோடி 2020-21: 40.00 கோடி 2021-22: 53.30 கோடி 2022-23: 55.05 கோடி 2023-24: 109.10 கோடி  விடுவிக்கப்பட்ட இந்த தொகை, கலாச்சார தகவல் ஆய்வகம், ஊடக …

Read More »

முன்னேற விரும்பும் மாவட்டங்களில் பெருநிறுவனங்கள் சமூக பொறுப்பு நிதி செலவினம் அதிகரித்துள்ளது

கடந்த மூன்று நிதியாண்டுகளில், அதாவது 2020-21 முதல் 2022-23-ம் ஆண்டு வரை முன்னேற விரும்பும் மாவட்டங்களில் பெருநிறுவனங்கள் சமூக பொறுப்பு நிதி செலவினம் அதிகரித்துள்ளதாக பெருநிறுவனங்கள்  விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2020-21-ம் நிதியாண்டில் ரூ.651.43 கோடியும், 2021-22 -ம் நிதியாண்டில் ரூ.1046.43 கோடியும், 2022-23-ம் நிதியாண்டில் ரூ.1402.89 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சருமான திரு. ஹர்ஷ் மல்ஹோத்ரா இதனைத் தெரிவித்தார்.

Read More »

நிலக்கரி சுரங்கங்களைச் சுற்றி பசுமை சூழலை உருவாக்கும் நடவடிக்கைகள்

நிலக்கரி சுரங்கங்கள், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பசுமைப் பரப்பை அதிகரிக்க, நிலக்கரித்துறை நிறுவனங்களான கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்), என்எல்சி இந்தியா லிமிடெட் (என்எல்சிஐஎல்), சிங்கரேணி நிலக்கரி கம்பெனி லிமிடெட் (எஸ்சிசிஎல்) ஆகியவை பாரம்பரிய நடைமுறைகளுடன் புதுமையான தொழில்நுட்பங்களையும் பின்பற்றுகின்றன. மூன்று அடுக்கு தோட்டம், விதைப் பந்து தோட்டம், மியாவாக்கி முறை, உயர் தொழில்நுட்ப நடவு முறைகள், மூங்கில் தோட்டம், சொட்டு நீர் பாசனத்தைப் பயன்படுத்துதல் போன்றவை இதில் அடங்கும். …

Read More »

மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையில் ஈடுபட்டார்

மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான், புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் இன்று பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், விவசாயிகள், வேளாண் தொழில்முனைவோர், வேளாண் தொடர்பான பல்வேறு அமைப்புகள், விவசாய உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்டோர் பல்வேறு முக்கிய ஆலோசனைகளை எடுத்துரைத்தனர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சவுகான், அனைத்து பரிந்துரைகளையும் தாங்கள் உரிய மதிப்பாய்வு செய்து நிதியமைச்சருக்கு தெரிவிப்பதாக கூறினார். மேலும், வேளாண் துறை தொடர்பான அனைவருடனும் தொடர்ந்து பேச்சு நடத்தவுள்ளதாக திரு சவுகான் கூறினார். வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகமும் உள்நாட்டில் ஒரு ஆய்வை …

Read More »

வெற்றி தினத்தை முன்னிட்டு துணிச்சல்மிக்க வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

விஜய் திவஸ் என்றழைக்கப்படும் வெற்றி தினத்தை  முன்னிட்டு, துணிச்சல்மிக்க வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது: “வெற்றி தினமான இன்று, 1971-ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியில் பங்களித்த துணிச்சலான வீரர்களின் தைரியம், தியாகங்களை நாம் போற்றுவோம். அவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் அசைக்க முடியாத உறுதி ஆகியவை நமது தேசத்தைப் பாதுகாத்து, நமக்குப் …

Read More »

புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகீர் ஹுசேன் மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகீர் ஹுசேன் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது: “புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் ஹூசேன் மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இந்திய பாரம்பரிய இசை உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு உண்மையான மேதையாக அவர் நினைவுகூரப்படுவார். அவர் தபேலா இசையை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று தமது இணையற்ற இசையால் மில்லியன் கணக்கானவர்களை கவர்ந்தார். இதன் மூலம், அவர் இந்திய பாரம்பரிய …

Read More »