போலியான, தரமற்ற உரங்கள் பிரச்சினை தொடர்பாக உடனடியாக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். போலி உரங்களின் விற்பனை, மானிய விலை உரங்களின் கறுப்புச் சந்தை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்தக் கடிதத்தை அமைச்சர் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், மத்திய அமைச்சர், விவசாயம் இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்றும், விவசாயிகளின் வருமானத்தில் நிலைத்தன்மையை உறுதி செய்ய, அவர்களுக்கு சரியான நேரத்தில், மலிவு விலையில், தரமான உரங்களை வழங்குவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். 1955-ம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வரும் உர (கட்டுப்பாட்டு) ஆணை, 1985-ன் கீழ் போலி அல்லது தரமற்ற உரங்களை விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் மாநிலங்களுக்கு பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்: * தேவைப்படும் இடங்களில் உரங்கள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வது மாநிலங்களின் பொறுப்பாகும். எனவே, கருப்புச் சந்தை, அதிக விலை நிர்ணயம், மானிய விலை உரங்களை திசை திருப்புதல் போன்ற நடவடிக்கைகளை மாநிலங்கள் கண்டிப்பாக கண்காணித்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். * உர உற்பத்தியையும் விற்பனையையும் தொடர்ந்து கண்காணித்து, உரிய சோதனைகள் மூலம் போலியான, தரமற்ற உரங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். * வழக்கமான உரங்களுடன் நானோ உரங்கள் அல்லது உயிரி-தூண்டுதல் தயாரிப்புகளை கட்டாயமாக இணைத்து டேக் செய்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். * முறைகேட்டில் ஈடுபடுபவர்களின் உர விற்பனை உரிமங்களை ரத்து செய்தல், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தல் உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். * கண்காணிப்பு செயல்பாட்டில் விவசாயிகளையும் விவசாயிகள் குழுக்களையும் ஈடுபடுத்த வேண்டும். உண்மையான மற்றும் போலியான பொருட்களை அடையாளம் காண்பது குறித்து விவசாயிகளுக்கு கல்வி கற்பிப்பதற்கான சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். போலியான, தரமற்ற உரங்களால் ஏற்படும் பிரச்சினைகளை அகற்ற, இந்த வழிகாட்டுதல்களின்படி மாநிலம் தழுவிய இயக்கத்தைத் தொடங்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் வலியுறுத்தியுள்ளார். மாநில அளவில் இந்தப் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும்போது விவசாயிகளின் நலன்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை ஏற்படுத்த முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
Read More »பயிற்சி மையங்கள் இளைஞர்களை அச்சுறுத்தும் மையங்களாக மாறிவிட்டன: குடியரசு துணைத்தலைவர்
குடியரசு துணைத்தலைவர் திரு ஜகதீப் தன்கர் இன்று, “ காளான்களைப் போல பெருகி வரும் பயிற்சி மையங்கள், நமது எதிர்காலமான நமது இளைஞர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கவலைக்குரிய இந்தத் தீமையை நாம் அகற்ற வேண்டும். நமது கல்வி இவ்வளவு கறைபடுவதையும் களங்கப்படுத்தப்படுவதையும் நாம் அனுமதிக்க முடியாது” என்று கூறினார். ராஜஸ்தானில் உள்ள கோட்டாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 4வது பட்டமளிப்பு விழாவில் இன்று தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய …
Read More »பிரதமர் திரு. நரேந்திர மோடி வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார். மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கு இன்று காணொலி மூலம் 51,000க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்த இளைஞர்களுக்கு புதிய பொறுப்புகள் இன்று தொடங்குகின்றன என்று கூறினார். பல்வேறு துறைகளில் தங்கள் சேவையைத் தொடங்கிய இளைஞர்களை அவர் வாழ்த்தினார். இளைஞர்களுக்கு …
Read More »யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் ‘இந்தியாவின் மராட்டிய ராணுவ நிலப்பரப்புகள்’ இடம்பெற்றுள்ளதற்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
இந்தியாவின் மராட்டிய ராணுவ நிலப்பரப்புகள் மதிப்புமிக்க யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பாரம்பரிய பட்டியலில் 12 கம்பீரமான கோட்டைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 11 கோட்டைகள் மகாராஷ்டிராவில் அமைந்துள்ளன. 1 கோட்டை தமிழ்நாட்டில் உள்ளது. மராட்டிய பேரரசின் சிறப்புகளை எடுத்துரைத்துள்ள பிரதமர், “நாம் புகழ்பெற்ற மராட்டிய பேரரசைப் பற்றிப் பேசும்போது, அதை நல்லாட்சி, ராணுவ வலிமை, கலாச்சார பெருமை, சமூக நலனுக்கு முக்கியத்துவம் …
Read More »பாரம்பரிய மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு – உலக சுகாதார நிறுவனத்தின் முக்கிய வெளியீட்டில் இந்தியாவின் ஆயுஷ் கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன
உலகளாவிய சுகாதார கண்டுபிடிப்புகளுக்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, உலக சுகாதார அமைப்பு (WHO) “பாரம்பரிய மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை திட்டமிடுதல்” என்ற தலைப்பில் ஒரு தொழில்நுட்ப சுருக்க அம்சத்தை வெளியிட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவை (AI) பாரம்பரிய மருத்துவ அமைப்புகளுடன், குறிப்பாக ஆயுஷ் அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதில் இந்தியாவின் முன்னோடி முயற்சிகளை அங்கீகரித்துள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவின் முன்மொழிவை இந்த வெளியீடு பின்பற்றுகிறது. இது பாரம்பரிய மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான உலக சுகாதார …
Read More »இந்தியாவின் எதிர்காலத்தை நிர்மாணிக்கும் இளைஞர் சக்தி: மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் பேச்சு
நாடு முழுவதும் 47 இடங்களில் நடைபெற்ற ரோஜ்கர் மேளா எனப்படும் வேலைவாய்ப்பு திருவிழாவில் 51 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வழியாக வழங்கினார். சென்னை இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் உள்ள அம்பேத்கர் அரங்கத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் (ரோஜ்கர் மேளா) மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கலந்துகொண்டு மத்திய அரசின் …
Read More »நமீபியா நாட்டின் மிக உயரிய கௌரவ விருதைப் பெற்றுக் கொண்ட பிரதமரின் ஏற்புரை
மேன்மைதங்கிய அதிபர் அம்மையார் அவர்களே, துணை அதிபர் அவர்களே, பிரதமர் அவர்களே, நமீபியாவின் அமைச்சர் பெருமக்களே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே, நமீபியா நாட்டின் மிக உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆப் தி மோஸ்ட் ஏன்சியன்ட் வெல்விட்ஸ்சியா மிரபிலிஸ்’ விருதை அந்நாட்டு அதிபரிடமிருந்து பெறுவது எனக்கு மிகுந்த பெருமையையும் மரியாதையையும் அளிப்பதாக உள்ளது. இந்த விருதினை வழங்கியதற்காக அந்நாட்டு அதிபர், அரசு மற்றும் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். …
Read More »டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளின் இரண்டாண்டு கொண்டாட்டங்கள்
பாரத கேசரி டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்தநாளின் இரண்டாண்டு அதிகாரப்பூர்வ கொண்டாட்டங்களை கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது. இது இந்தியாவின் அரசியல், கலாச்சார, கல்வி மற்றும் தொழில்துறை பயணத்தை வடிவமைத்த தொலைநோக்கு கொண்ட தலைவரின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. தில்லியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் பங்கேற்ற இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், …
Read More »நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ஆக்ரா புத்துயிர் பெற்று ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை நகராக உருவெடுக்கிறது
ஆக்ராவை நச்சுத்தன்மை கொண்ட குப்பைக் கிடங்கிலிருந்து பசுமையான நகராக மாற்றும் வகையில் குப்பைகளைக் குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி ஆகிய மூன்று கொள்கைகள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தூய்மையான, கழிவுகள் இல்லாத நகரமாக உருவாகும் நோக்கில், ஆக்ரா நகராட்சியானது நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளன. தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமின்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி, மக்களிடையே விழிப்புணர்வை …
Read More »இந்திய தர நிர்ணய அமைவனம் அறிவியல் ஆசிரியர்களுக்கான ‘தரநிலைகள் வாயிலாக அறிவியல் கற்றல்’ குறித்த இரண்டு நாள் பயிற்சியை விழுப்புரத்தில் நடத்துகிறது
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தரநிலை குழுக்களின் அறிவியல் ஆசிரியர்களுக்காக, இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலகம், “தரநிலைகள் மூலம் அறிவியலைக் கற்றல்” என்ற தலைப்பில் இரண்டு நாள் வழிகாட்டி பயிற்சியை ஏ.கே.டி நினைவு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், இன்றும் (ஜூலை 10, 11) நாளையும் நடத்துகிறது. இதன் துவக்க விழா இன்று (ஜூலை 10, 2025) நடைபெற்றது. இந்தப் பயிற்சித் திட்ட நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய இந்திய …
Read More »
Matribhumi Samachar Tamil